ட்விட்டர் சமூக வலைதளம் வெகு வேகமாக வளர்ந்த சமூக வலைதளம். செய்தியை
நச்சுன்னு நாலே வார்த்தையில் சொல்லணும் என்கின்ற கொள்கையை கடைபிடித்து,
குறைந்த வார்த்தைகளில் சொல்ல வேண்டிய செய்தியை சொல்லலாம் என்கின்ற
விதிகளுடன் வலம் வருகிறது. இதற்க்கு பல பிரபலங்கள் விருப்பம் தெரிவித்து
அவர்கள் கணக்கை துவங்கி ட்வீட்டி வருகின்றனர்.
ட்விட்டருக்குள் ஊடுருவி சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்களின்
தகவல்களை திருடிச் சென்றுள்ளது ஒரு ஹேக்கர்ஸ் கும்பல். இந்த செய்தி
உலகெங்கிலும் அதிர்ச்சி அலையை ஏற்ப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து
‘களவு’ கொடுத்த பயனாளர்கள் அனைவரும் புதிய கணக்கு தொடங்கிக் கொள்ளுமாறு
ட்விட்டர் தளம் அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது.
இதனிடையே இந்த மாதிரி அமெரிக்காவின் கணிணிகளை ஊடுருவி தகவல்களைத்
திருடுவதில் சீனர்கள்தான் அதிகம் ஈடுபடுவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல்
வெளியிட்டிருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Thanks myoor.com
No comments:
Post a Comment