Blogger Widgets

Total Page visits

Wednesday, February 27, 2013

இணையம் வழியே ஒரே நேரத்தில் பல பேருடன் உரையாடிட Pidgin

நண்பர்கள் உறவினர்களோடு இணையம் வழியே உரையாட ஒன்றுக்கு மேற்பட்ட மெஸ்ஸென்ஜர் மென்பொருள்களைப் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு உதவ முன் வருகிறது பிட்ஜின் எனும் உடனடி மெஸ்ஸென்ஜர் (Instant Messenger) மென்பொருள். முன்னர் Gaim எனப் பெயரிடப் பட்டிருந்த பிட்ஜின் ஒரு இல்வச ஒபன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த எப்லிகேசன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடனடி மெஸ்ஸென்ஜர் சேவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வசதியைத் தருகிறது.

அதாவது இந்த Instant Messenger மூலம் யாகூ சேவையில் ஒரு நண்பரோடும் கூகிலில் வேறொரு நண்பரோடும் எம்.எஸ்.என் சேவையில் மற்றுமொரு நண்பர் என ஒரே நேரத்தில் பல பேருடன் பல வலையமைபுக்களில் செட் (Chat) செய்திட முடியும்.
பிட்ஜின் மென்பொருளை உடனடி மெஸ்ஸென்ஜர் சேவைகளை வழங்கும் பிரபலமான AOL, MSN, Yahoo மற்றும் அதிகம் பிரபல்யம் இல்லாத Jabber and Gadu-Gadu போன்ற மெஸ்ஸென்ஜர் சேவைகளள் உட்பட மொத்தம் 17 வலையமைப்புக்களுடன் பயன்படுத்த முடியும்.

அத்தோடு இணையம் வழி தொடர்பாடலில் புரட்சியை ஏற்படுத்தி வரும் Skype மற்றும் பிரபலமான சமூக வலைத்தளமான Facebook என்பன தரும் உரையாடல் வசதியையும் பிட்ஜினில் பயன் படுத்தலாம். எனினும் இதற்கு நீங்கள் புதிதாக ஒரு Plug in ஐ நிறுவிக் கொள்ள வேண்டும்.

பிட்ஜின் நிறுவியதும் நீங்கள் பயன் படுத்த விரும்பும் இன்ஸ்டன் மெஸ்ஸென்ஜர் சேவையை தெரிவு செய்து அந்த சேவைக்கென உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் வழங்கி லொக் இன் செய்து விடுங்கள். அந்த சேவையைப் பெறும் உங்கள் நண்பரோ உறவினரோ அப்போது இணைப்பில் இருப்பின் அது பற்றி திரையில் காண்பிக்கும்.. அதன் மூலம் அவர்களுடன் உரையாடலை ஆரம்பிக் கலாம்.

AOL, MSN, Yahoo என ஒன்றுக்கு மேற்பட்ட வலையமைப்புக்களில் உங்கள் நண்பர்கள் வந்து செல்வார்களாயின் இனி அதற்கென பல எப்லிசேசன்களை மாற்றிக் கொள்ள வெண்டிய தேவையை இல்லாமல் செய்கிறது பிட்ஜின்.
பிட்ஜின் மூலம் செட்டிங் (Chatting) செயவது மட்டுமன்றி பைல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியும் பெறலாம். .

இங்கு நான் செட்டிங் என்பது விசைப் பலகை சார்ந்த டெக்ஸ்ட் செட்டிங் (text chatting) என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் பிட்ஜின் மூலம் வீடியோ மற்றும் குரல் வழி (video & Voice chatting) உரையாடலில் ஈடுபட முடியாது என்பது ஒரு குறையாகும். எனினும் இந்தக் குறைபாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்கலாம்.
இந்தப் பிட்ஜின் மென்‘புறா’வை www.pidgin.im எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரையிரக்கிக் கூண்டில் அடைக்கலாம்.

No comments: