Blogger Widgets

Total Page visits

Tuesday, February 12, 2013

Private Browsing in internet


உங்களுடைய சொந்தக் கணினி அல்லாது, மற்றவர்கள் கணினி அல்லது இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் நீங்கள் Browsing செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இதற்குத்தான் முன்னணி பிரௌசர்களாக Internet Explorer, Google Chrome, Fire Fox போன்ற வலைஉலவிகளில் ஓர் அற்புதமான வசதியைக் கொடுத்திருக்கின்றனர். இந்த வசதியின் பெயர்தான் Private Browsing.

இந்த வசதியைப் பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது உங்களுடைய தகவல்கள், உலவியிலோ அல்லது உங்கள் கணினியிலோ சேமிக்கப்படாது.இதனால் மற்றவர்கள் உங்கள் தகவல்களை எளிதாக திருடி எடுத்துப் பயன்படுத்த முடியாது.

இந்த வசதியை ஒவ்வொரு Browser-லும் பெறுவது எப்படி எனப் பார்ப்போம்.

1. நீங்கள் IE (Internet Explorer) உபயோகிப்பாளரென்றால்..

உங்கள் பிரௌசரின் Tools மெனுவில் சென்று In Private Browsing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ctrl+Shift+P என்பதை press செய்யவும். அவ்வாறு செல்லும்போது உங்களுடைய பிரௌசரின் விண்டோ இவ்வாறு மாறிவிடும். இனி நீங்கள் வழக்கம்போல் பாதுகாப்பாக browsing செய்யலாம்




2. நீங்கள் Mozila Firefox-உபயோகிப்பாளரென்றால்..

உங்கள் Firefox Browser-ல் Tools மெனுவில் Private Browsing என்பதை கிளிக் செய்யுங்கள். அல்லது Ctrl+shift+P என்பதை press செய்யவும். 


3. நீங்கள் Google Chrome உபயோகிப்பாளரென்றால்..

வலது மேல்மூளையில் Spanner போன்ற Settings பட்டனைக் கிளிக் செய்து அதில்
New incognito window என்பதை கிளிக் செய்து பயன்படுத்தலாம். அல்லது இதற்கான Short cut key யான Ctrl+Shift+N என்பதை அழுத்தியும் பயன்படுத்தலாம். 


No comments: