Blogger Widgets

Total Page visits

Sunday, February 17, 2013

டேப்ளட் விற்பனையில் யார் முதல் இடம்?


சந்தேகம் இல்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் தான், உலக அளவில், விற்பனையில் முதலிடம் கொண்டுள்ளது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2 கோடியே 29 லட்சம் ஐபேட் சாதனங்களை விற்பனை செய்துள்ளது ஆப்பிள். இதன் ஐபேட் மினி சாதனத்திற்குக் கிடைத்த வரவேற்பு இதில் தெரிந்தது.

2011 ஆம் ஆண்டு இதே கால் ஆண்டில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 48.1% கூடுதலாக ஆப்பிள் விற்பனை செய்துள்ளது. மொத்த டேப்ளட் விற்பனையில், ஆப்பிள் டேப்ளட் விற்பனை, டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 43.6% ஆக இருந்தது. ஆனால், இதே காலத்தில் சென்ற ஆண்டில் 46.4% ஆகவும், 2010ல் 51.7% ஆகவும் இருந்தது.

இது, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் கொண்ட டேப்ளட் விற்பனை ஊடுறுவலையே காட்டுகிறது. இதே காலத்தில், சாம்சங் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் கொண்ட 80 லட்சம் டேப்ளட்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தினைப் பிடித்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 263% கூடுதலாகும். டேப்ளட் விற்பனைச் சந்தையில், சாம்சங் நிறுவனத்தின் பங்கு 7.3% லிருந்து, 15.1% ஆக உயர்ந்தது.

இந்த இரண்டு நிறுவனங்களை அடுத்து, அமேஸான் மற்றும் அசூஸ் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த சந்தையில், சென்ற அக்டோபரில், மைக்ரோசாப்ட், தன்னுடைய சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட்டுடன் நுழைந்தது. விற்பனை செய்த டேப்ளட்களின் எண்ணிக்கை 9 லட்சத்திற்கும் கீழாகவே இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளட் விலை சற்று அதிகமாகவே இருப்பதால், சந்தையில் அதிக அளவு விற்பனையை எட்ட முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments: