இன்று பல்வேறு நிறுவனக்களில் இருந்து கணினியை பாதுகாக்க அண்டி வைரஸ் மென் பொருள்கள் வந்தாலும் .இதை எல்லாம் உடைத்து விட்டு வைரஸ்
எப்படியோ நமது கணினி யை பதம் பார்த்து விடுகின்றது .இவற்றுக்கெல்லாம்
முற்று புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு மென்பொருள் உண்டு அவற்றை பற்றி தான்
இப்போ பார்க்க போகிறோம் .
இந்த மென்பொருளை நான் நமது கணினி இல் நிறுவியதும் task பார்
இல் வந்து இது உட்காந்து கொள்ளும் அந்த icon இல் நாம் shift key ஐ
அழுத்தி கொண்டு இரண்டு முறை click பண்ண வேண்டும் .அப்போது ஒரு சாரளம்
திறக்கும்.

" Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்யும் போது எந்த எந்த Drive
களுக்கு பதியப்பட வேண்டும் என கேட்கப்படும் இடத்தில் C:\ இனை மாத்திரம்
தெரிவு செய்து Install செய்து விட்டு Deep Freeze மென்பொருளுக்கு Password
ம் கொடுத்து விட்டால் இனியாராலும் C:\ இனுள் மாற்றங்கள் செய்ய முடியாது.
எந்தஒரு வைரசும் உங்கள் கணினியை பாதிக்காது. அப்படி ஏதாவது வைரஸ் வந்தால்
கவலைப்பட வேண்டியதில்லை ஒருமுறை கண்னியை Restart செய்தால் போதும் C:\ பழைய
நிலைக்கு வந்துவிடும்.

இந்த மென்பொருளையே Net Cafe களிலும், கல்வி நிலையங்களிலும், பொது இடங்களில் உள்ள கணினிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
இந்த பதிவு http://tamilthrones.blogspot.in என்னும் வலை பதிவில் இருந்து அனைவரும் அறிய இங்கு பகிரபடுகிறது .
No comments:
Post a Comment