Blogger Widgets

Total Page visits

Monday, April 29, 2013

தள்ளிப்போடும் பழக்கத்தை தள்ளிப் போடுங்கள்...

வெற்றிக்கு தடைக்கல்லாக இருக்கும் தள்ளிப்போடும் பழக்கத்தை கொஞ்சம் தள்ளி வைக்கலாமே.....

தேர்வு தான் முடிந்து விட்டதே, அதோடு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் படிக்க துவங்கினால் போதும் தேர்வை வெற்றிகரமாக எழுதி விடலாம் என்ற எண்ணம் மாணவர்களிடையே தோன்றுவது இயல்பு தான். ஆனால் அந்த எண்ணத்தை இன்றோடு கைவிடுங்கள். இதனால் இழக்கக்கூடிய விஷயங்கள் என்ன என்று சிந்தித்து பாருங்கள்.

தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கும் உலகத்தில், மாணவர்கள் படித்து பட்டம் பெற்றால் போதும், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை தானாகவே கிடைத்து விடும் என்று கண்முடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது தவறான எண்ணமாகும்.

பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். படிப்பு, பொது அறிவு, கணினி அறிவு, சரளமாக ஆங்கிலம் பேசும் திறமை என்று அனைத்திலும் சிறந்து விளங்கினால் தான், ஒரு துறை இல்லையென்றால் வேறு துறைகளில் கால் பதிக்க முடியும்.

தற்போது எந்த துறைக்கு சென்றாலும் போட்டி தான். படிக்கும் மாணவர்கள் அதிகமாகி விட்டதால் போட்டியும் அதிகமாகி விட்டது. போட்டியில்லாமல் ஏதேனும்  துறை உண்டா? என்றால் இல்லையென்று தான் கூற முடியும். போட்டி நிறைந்த உலகத்தில் மாணவர்கள்  எந்த எந்த வகையில்  முன்னேறலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்க வேண்டும். தன்னுடைய திறமை என்ன? எந்த துறையில் நுழைந்தால் ஜெயிக்க முடியும் என்று நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்களின் வெற்றி உங்களின் விருப்பப்படி தான் அமைய வேண்டுமே தவிர மற்றவர்களின் ஆலோசனையோ, கட்டாயமோ இருக்க கூடாது. எந்த செயலை  எடுத்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை பார்த்துக் கொள்ளலாம்...என்று தள்ளிப் போடுவதை விட இன்றைக்கு முடித்து விட்டு, நாளைக்கு புதிதாக என்ன செய்யலாம் என்று நினைக்க வேண்டும்.

நாளை என்று தள்ளிப்போடுவதினால், உங்களின் வெற்றியும் உங்களை விட்டு ஒதுக்கி தள்ளிப் போய் கொண்டே இருக்கும். எனவே மாணவர்கள் பள்ளியில் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே படித்து முடிக்கலாம். படிப்பதென்றால் அரை குரையாக படித்துவிட்டு, மறந்து போவது அல்ல. முழு மனதுடன் புரிந்து படிப்பதாகும். ஒரே நாளில் ஒரு வருடப் பாடத்தை மூளை சுமக்காது. எனவே அன்றைய தினமே முடித்து விடுவது நல்லது. படித்ததை எழுதி பார்த்தால் எளிதில் மறந்து போகமாகல் இருக்கும். தேர்வு நேரத்தில் சுமை குறைவதோடு, சுலபமாக மதிப்பெண்களை அல்ல முடியும்.

தள்ளிப்போடும் மனப்பான்மையேத் தவிர்ப்போம், வெற்றி பெறுவோம்.
 
Thanks Dinamani

No comments: