Blogger Widgets

Total Page visits

Wednesday, April 24, 2013

Maxthon browser முற்றிலும் இலவசமாக!!

மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அரிய சிறப்புகளடங்கிய ஒரு முதன்மையான வலை உலாவி தான் இந்த Maxthon browser!! crome, firefox, internet explorer போன்ற சிறந்த பிரவுசர்களின் வரிசையில் இப்போது முதன்மை இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது Maxthon browser!!

Maxthon ன் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றையும் பார்ப்போம்:

1. Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது.

2. Auto -completes நினைவகத்தை கொண்ட Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.

3. Magic Fill Manager எனும் வசதியால் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை சேமித்துகொள்ள முடியும்.

4. Popup ads மற்றும் சில தேவையற்ற windows களை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும்.


Ad Hunter எனும் சேவையின் வழியாக எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்ட வேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.

5. Mouse Gesture எனப்படும் புதிய வசதியின் மூலம் நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எந்தவித refresh பட்டன் அல்லது shortcutபடடன்களை பயன்படுத்தாமலேயே Mouse​ஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடுகிறது

6. மற்றுமொரு சிறப்பு என்னவெனில் Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute இப்படிப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளதுதான்.

7. Drag and Drop Search எனும் வசதியைப் பயன்படுத்தி , வலைப்பக்கத்திலுள்ள சொற்கள் அல்லது வரிகளை தேர்வு செய்து நகர்த்தி Search box ல் விட்டால் போதும். ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்து நமக்கு கொடுக்கும்..

8. வலைப்பக்கங்களை எளிதாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது. மேலும் Redo Page, Home, Recently viewed pages, back போன்ற பட்டன்கள் கண்ணைக் கவரும் விதம் இருக்கிறது.

9. Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonusகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது.
இவற்றை வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

10. மேலும் Opera மற்றும் Chrome களில் இருப்பதைப் போன்றே உங்கள் விருப்பதளங்களை புக்மார் செய்து கொள்ளவும், சேமித்துக்கொள்ளவும் முடியும். மேலும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

11. இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons வசதியையும் தருகிறது.


Skins add-ons க்கான தரவிறக்க இணைப்புச் சுட்டி:  http://addonsmx.maxthon.cn


தளத்திற்கான ஆங்கில மொழிப்பெயர்ப்பு சுட்டி: http://translate.google.co.in/translate?hl=en&sl=auto&tl=en&u=http%3A%2F%2Fwww.maxthon.cn


தளத்திற்கான சுட்டி: http://www.maxthon.com/

No comments: