பாத்திரம் தேச்சு, பசி பழகி..
என் வலி மறைத்து 
படிப்பவனை படிக்கவைக்க 
பலவீட்டு வேலைசெய்தேன்..
பெரிய படிப்புப் படிச்ச 
என்மகன் என்னைப் பார்த்து
கேள்வி கேட்டான்;
"படிக்காத உனக்கு என்னத்தெரியும்னு 
நீ என்னிடம் பேசவந்துட்ட?"
இராப் பகலா பொத்தி வளர்த்த 
எம் மகளும்...
காதல் தாகத்தில் வயசு மோகத்தில்
என்னிடம் கேட்கிறாள் :
"அன்புன்னா என்னவென்று 
உனக்கு எங்கே புரியபோகுது? 
அன்பகாட்ட உனக்கு உன்  புருஷன் இருக்கானா?"
பூக்களுக்கு என்ன கவலை - மரத்தையே 
தாங்கும் வேர்களைப் பற்றி? 
கேள்விக்கணைகள் மனதை துளைத்தாலும் 
பெத்த மனசு சொல்லுது.."
பெத்த மனசு சொல்லுது.."
ஆண்டவா அவர்களைக் காப்பாத்து.."
இந்த செய்தி சிந்தனைசிதறல்கள் என்னும் வலை பக்கத்தில் இருந்து பலரும் படித்து பயன் பெற பகிரபடுகிறது  
 
No comments:
Post a Comment