சென்னை: தமிழகத்தில் உள்ள, கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் 
திறப்பு குறித்து, இதுவரை, எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலை 
நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், ஈழ தமிழர்களுக்கு 
ஆதரவாக, மார்ச், 9ம் தேதி முதல் போராட்டத்தை துவங்கினர். போராட்டம் 
தீவிரமடைந்த நிலையில், கலைக் கல்லூரிகள் மார்ச், 15ம் தேதியும், பொறியியல் 
கல்லூரிகள், 18ம் தேதியும் மூடப்பட்டன. இந்நிலையில், மூடப்பட்ட 
கல்லூரிகளைத் திறக்க, அரசு, கடந்த இரு நாட்களாக ஆலோசித்து வருகிறது. 
பொறியியல் கல்லூரிகளைத் திறக்க, சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ்
 தலைமையில், இன்று நடந்த கூட்டத்தில், பொறியியல் கல்லூரிகளைத் திறக்கும் 
தேதி முடிவு செய்யப்படவில்லை. ஏப்., 1ம் தேதிக்கு மேல், கல்லூரிகளைத் 
திறக்க முடிவு செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டது. 
இதே போல், கலை, அறிவியல் 
கல்லூரிகளைத் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், உயர்கல்வித் துறை மூத்த 
அதிகாரிகள் தலைமையில் நடந்ததாகவும், அதில் எவ்வித முடிவும் 
எடுக்கப்படவில்லை எனவும், உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Thanks www.dinamalr.com 
 
No comments:
Post a Comment