Blogger Widgets

Total Page visits

163714

Friday, March 15, 2013

கல்லறை கண்டும் மறையா நட்ப்பு

அன்று 3 வயதில்

அழுதேன்

பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று..

இன்று 21 வயதில்

அழுகிறேன்

என் கல்லூரியை விட்டு

வரமாட்டேன் என்று…..

இந்த சிறிய பிரிவை கூட

தாங்கமுடியாத மனம்

மறக்க முடியாத நினைவுகள்….

 பசுமை நிறைந்த நினைவுகளே

பாடிப்பறந்த பறவைகளே…..

பாடல் ஒலித்துக்கொண்டிருக்க….

கல்லூரி இறுதி ஆண்டு

முடிவு நாள் விழாவில்

நண்பர்களெல்லாம்

ஆண்களும் பெண்களுமாக

கண்களில் நீர்த்துளிகள் ததும்ப

தொட்டும் தொடாமலும்,

கனத்த இதயத்தில் மேலும்

கல்லூரி வாழ்நாள் வசந்த

நிகழ்வுகளின் சுகங்களை

சுவாசித்துக்கொண்டே

ஸ்பரிச உணர்வுகளுடன்

ஒன்றாய் சேர்ந்து…. சேர்ந்து….

பேசிக்கொண்டே இருந்தார்கள்…

எப்போது பிரிவது என்பதை

கொஞ்சமும் யோசிக்காமல்!

மலை துளி பார்த்து வரும் வானவில்

வெயில் பார்த்து மறையலாம்

இரவு பார்த்து வரும் நிலவு

பகல் பார்த்து மறையலாம்

கருவறை பார்த்து வரும் உயிர்

மரணம் பார்த்து மறையலாம்

மனம் பார்த்து வரும் காதல்

பணம் பார்த்து மறையலாம்

கருவறை கண்டு வரும் உறவுகள்

காலம் பார்த்து மறையலாம்

எதையும் பார்க்காமல் வந்த நம் நட்பு

கல்லறை கண்ட பின்பும் மறையாது…

No comments: