Blogger Widgets

Total Page visits

Monday, March 11, 2013

வாட்சன், பட்டின்சன் நீக்கம்

மொகாலி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பட்டின்சன், மிட்சல் ஜான்சன், உஸ்மான் கவாஜா ஆகிய நான்கு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் வரும் 14ம் தேதி துவங்குகிறது.

இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பட்டின்சன், மிட்சல் ஜான்சன், உஸ்மான் கவாஜா ஆகிய நான்கு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

முதலிரண்டு டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த இரண்டு டெஸ்டில் எழுச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை நேரிலோ அல்லது "இ-மெயில்' மூலமாகவோ தெரிவிக்குமாறு, வீரர்களிடம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதற்காக 5 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் இந்த நான்கு வீரர்கள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஏற்கனவே காயம் காரணமாக மாத்யூ வேட் களமிறங்குவது சந்தேகமாக உள்ளது. இதற்காக பிராட் ஹாடின் வரவழைக்கப்பட்டுள்ளார்.

No comments: