பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் 
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இக்கலந்தாய்வு ஜூன் 
21ம் தேதி துவங்கி ஜூலை 30ம் தேதி வரை   நடைபெறுகிறது. 
இக்கலந்தாய்வில் ஜூன் 28ம் தேதி நிலவரப்படி, பெரும்பாலான மாணவர்கள் இசிஇ 
மற்றும் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏரோநாட்டிக்கல் 
படிப்பில் 238 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர். எனவே இப்படிப்பில் 
மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது என பல்கலைக்கழக வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன. 
 
No comments:
Post a Comment