ஏர்செல் நிறுவனம் தமிழக வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்புச்சலுகையை வழங்கியுள்ளது. அதாவது 'ஒன் நேஷன் - ஒன் ரேட்' என அழைக்கப்படும் 
இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது ஏர்செல்.
சில
 தினங்களுக்குமுன் இந்தியா முழுவதும் 'ரோமிங்' இல்லை என்ற அறிவிப்பை இந்திய
 அரசாங்கம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து ஏர்செல், ஏர்டெல் என அனைத்து 
நிறுவனங்களும் அந்த ஆணையை நிறைவேற்றிவருகிறது.
இந்நிலையில்,
 ஏர்செல் நிறுவனம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாய்ஸ், SMS
 மற்றும் இண்டர்நெட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏர்செல்
 வாடிக்கையாளராக இருந்து, மற்ற மாநிலங்களுக்கு சென்றால்கூட தனியாக கட்டணம் 
எதுவுமின்றி பேசி மகிழலாம்.
இந்த பிளானின் முழு விவரங்கள் கீழே!
வாய்ஸ் - லோக்கல் மற்றும் நாடுமுழுவதற்குமான கட்டணங்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா மட்டுமே! 
SMS - லோக்கல் மற்றும் நாடுமுழுவதற்குமான கட்டணம் ரூ.1 / எஸ்எம்எஸ்.
டேட்டா - லோக்கல் கட்டணங்களே நாடுமுழுவதும் நீங்கள் எங்கே சென்றாலும் பின்பற்றப்படும்.
இந்த 'ஒன் நேஷன் - ஒன் ரேட்' என்ற சிறப்பு பேக்கின் விலை ரூ.25 ஆம். நல்லா பேசுங்கப்பா!
 

1 comment:
thanks
Post a Comment