Blogger Widgets

Total Page visits

Thursday, January 17, 2013

Bicycle Memories


நம்மளோட சின்ன வயசு சைக்கிள் ஞாபகங்களைப்பத்தி...



சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடித்த பாகன் திரைப்படம் பார்க்க நேர்ந்தது.(3 மாசத்துக்கு முன்னாடி வந்த படத்த இப்ப பாத்துட்டு சமீபமாம்).அதில் ஒரு மிதிவண்டி...வேணாம்...சைக்கிள்ன்னே வச்சிக்குவோம். ஒரு சைக்கிள்  தன் முதலாளியோட (ஸ்ரீகாந்த்) கதைய வாய்ஸ் ஓவர்ல சொல்ற மாதிரி கதை அமைச்சிருப்பாங்க...சில பல நல்ல அம்சங்கள்  இருந்தும் அந்த படம் பஞ்சரானது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான்.எப்டியும் தமிழ்புத்தாண்டுக்கு சன் டிவில போடுவாங்க...அப்ப பாருங்க...இன்னும் கொஞ்சம் நல்லா திரைக்கதையும்,விளம்பரங்களும் அமைச்சிருந்தா படம் ஓடியிருக்கும்ன்னு நெனைக்கிறேன்.


ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் சைக்கிள் இல்லாம கடந்துருக்க மாட்டாங்க...சின்ன வயசுல கத்துக்குற டைம்ல சைக்கிள்தான் பல விழுப்புண்களை நமக்கு முதல்ல தரும். நமக்கு உயரம் பத்தலேன்னாக்கூட கூட்டாளிங்க யாராவது ஓட்டிட்டா உடனே நாமளும் அதை செஞ்சாகணும். கொஞ்சநஞ்சம் தர்ற பாக்கெட்மணிய சேத்து வச்சு நமக்கு சைக்கிள் கத்து தர்றதுக்குன்னு பந்தா பண்ற அண்ணன்,அக்காக்களுக்கு கொடுத்தது போக மீதி சைக்கிள் கடையில் வாடகைக்காக கொடுத்து அந்த தேஞ்சு போன,ஒழுங்கான டயர் இல்லாத,பிரேக் இல்லாத,காத்து இல்லாத, லொட லொடன்னு சவுண்ட் வர்ற சைக்கிள ஓட்ற சொகம் இருக்கே...BMW கார் சொந்தமா வாங்கி ஓட்டும்போது ஒரு பெருமிதம் வரும் பாருங்க...அதுக்கு சளைச்சதில்ல....  :)


1 மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் எடுத்துட்டு அந்தக் கடையையே சுத்தி சுத்தி  வந்து அண்ணா..மணியாயிடுச்சா...மணியாயிடுச்சான்னு 10 தடவை கேட்டு சைக்கிள் கடைக்காரரை நோகடிச்சது. அவரு வேகமா ஓடற கடிகாரத்த வச்சிகிட்டு 5 நிமிஷமாவது நம்மள ஏமாத்தறது. சின்ன சைக்கிள கால் கீழ ஊன்றாம ஓட்டிட்டா அடுத்து அப்பாவோட பெரிய சைக்கிள்ல குரங்கு பெடல் டிரை பண்றது.அத ஓட்டும்போது செயின்ல கால் மாட்டிகிட்டு பல ரத்தக்காயங்கள் பாத்தது.மறந்துபோய் பூட்ட திறக்காம சக்கர போக்ஸ் கம்பிங்களை உடைச்சது.லைட் இருந்தா அத எரிய வைக்கிறேன்ற பேர்ல பின்னாடி சக்கரத்த சுத்தி சுத்தி படம் காமிச்சது.இருபதடி இருக்கற மளிகைக்கடைக்கு கூட சைக்கிள் ஓட்ற சுகத்துக்காக பல தெருவ சுத்திட்டு வந்து வீட்டுக்கு எடுபிடி வேலை செஞ்சதுன்னு அது ஒரு சைக்கிள் காலம். :)


ஹிஹி...மேல இருக்கற படம் மாதிரி(சைக்கிள் படம் கிடைக்கல)  நம்ம டபுள்ஸ் சோதனைக்கு நாம பலிகடா ஆகறது...இல்ல நம்மள நம்பி வர்றவங்க பலிகடா ஆகறதுக்கு உதாரணம். நமக்கு மாட்ற கூட்டாளிங்க உசிலமணி மாதிரியே இருப்பாங்க...நாமளோ ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரியே இருப்போம்.இதுக்கு நம்ம வீட்ல சர்ட்டிபிகேட் கொடுப்பாங்க...குண்டா இருக்கறவங்க கள்ளம்கபடம் இல்லாதவங்களாம் ஒல்லியா இருந்தா வினையாம். வினை புடிச்சவனே... உனக்கு உடம்பே ஏறாதுரான்னு நம்மள கேவலப்படுத்தறது.

எனக்கு தெரிஞ்சு பேப்பர் போடற பசங்களுக்கு பிற்கால வாழ்க்கைல ஒரு கால ஒழுங்கும்,உழைக்கும் பணத்தோட அருமையும் தானாகவே வந்துரும். உடம்பும் கட்டுக்கோப்பா இருக்கும்.அது மாதிரி நிறைய பேர பாத்திருக்கேன். 
சின்ன வயசுல தொழிலுக்காக அதை பயன்படுத்திட்டு பிற்காலத்துல வசதி வந்த பிறகும் அதை மறக்காம விக்காம பூஜை பண்ணறவங்களையும் பாத்திருக்கேன்.(அண்ணாமலை படம் ஞாபகம் வருதா..?!)

என்னோட பள்ளி காலங்களும், IIT ச்சீ...ITI படிச்சப்பயும் சைக்கிள்லயே (போக வர) 28 KM ஓட்னதால உடம்பு ஏறவே இல்ல...படுத்தா அப்டி தூக்கம் வரும். இந்தக்கணினி சார்ந்த வேலைக்கு எப்ப வந்தேனோ அப்பயே உடம்பு ஊத ஆரம்பிச்சிருச்சு.லைட்டா முதுகு வலி ஆரம்பிச்சிருச்சு..     சோம்பேறித்தனம்தான்... முழிச்சுக்கோங்க மக்களே...  உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்க...

Credits தேவாவின் தேடுதல்...

No comments: