Blogger Widgets

Total Page visits

Thursday, December 20, 2012

ஹைதராபாத் சன் ரைசர்ஸ்

சன் டிவி குழுமம் சமீபத்தில் ஹைதராபாத் ஐபிஎல் அணியை ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து அந்த அணிக்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிட்டது. இந்த நிலையில் தற்போது அணி நிர்வாகிகளை அந்த அணி அறிவித்துள்ளது. அணியின் பயிற்சியாளராக டாம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு மூடி, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு அவர் வந்துள்ளார். அணியின் புதிய லோகோவையும் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சன் குழுமம் வெளியிடவுள்ளது. அணியின் மெயின்டனர்களாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர குமார சங்ககாரா, இஷாந்த் சர்மா, பர்தீவ் படேல் உள்ளிட்ட 18 வீரர்களை கொண்ட பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கான சின்னத்தில் தங்க நிறத்தில் இறக்கைய விரித்துள்ள கழுகும், அதன் பின்புலத்தில் கதிர்களை பரப்பி உயரே எழும் சூரியனையும் சின்னமாக கொண்டுள்ளது சன் ரைசர்ஸ் அணி. சின்னத்தின் கீழ் அணியின் பெயர் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

No comments: