"இந்திய அணியை தோனி முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வார். தற்போதைக்கு இவருக்கு மாற்றாக யாரும் இல்லை'' என, டிராவிட் தெரிவித்தார்.
டெஸ்ட்
அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து
வருகிறது. இதன் உச்சக்கட்டமாக சொந்த மண்ணில் இங்கிலாந்திடமும் வீழ்ந்தது.
இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட், தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிராவிட் கூறியது:
தற்போதைக்கு
கேப்டன் பதவிக்கு வேறு ஒரு சிறந்த மாற்று வீரர் இருப்பதாக எனக்கு
தெரியவில்லை. இந்திய அணியை முன்னேற்ற பாதைக்கு தோனி அழைத்துச் செல்வார்.
அதற்கு உரிய ஆற்றல் மற்றும் ஆர்வமும் அவரிடம் இன்னும் உள்ளது.
சச்சின் ஓய்வா:
சச்சின்
ஒரு சிறந்த வீரர், ஆனால் இந்த ஆண்டு அவருக்கு கைகொடுக்கவில்லை. இது அவரை
நிச்சயம் காயப்படுத்தியிருக்கும். அதனால் அவரின் ஓய்வு குறித்து அவருடைய
மனதில் என்ன உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு என்பது
அவருடைய கையில் தான் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான
தொடருக்கு முன் அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதை மக்கள் வரவேற்பார்கள்.
இந்திய அணி அன்னிய மண்ணில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளிடம் மோசமாக
தோல்வியடைந்திருந்தாலும். சொந்த மண்ணில் எளிதாக தொடரை இழந்தது கிடையாது.
ஆமதாபாத் போட்டிக்கு பிறகு இந்திய அணி தொடரை கைப்பற்றும் என எல்லோரும்
நினைத்தனர். ஆனால் இந்த தோல்வியின் மூலம் நல்ல பாடம் கற்றுக் கொண்டது. இது
தொடர்ந்தால் இந்திய அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
Source Dinamalar
No comments:
Post a Comment