Tuesday, December 18, 2012
December 21 தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்சிகள்!!
பொங்கல், தீபாவளிக்கு மட்டுமா நீங்க சிறப்பு நிகழ்ச்சி போடுவீங்க? இப்படியே உலக அழிவிற்கும் தமிழ்த் தொலைக் காட்சிகள் முந்திக் கொண்டு நிகழ்சிகளை வழங்கினால் எப்படியிருக்கும்??
எல்லாம் நகைச்சுவைக்கே என்று இப்போதே சொல்லிவிடுகிறோம்...
காலை 6 மணிக்கு
கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம், சங்கு சண்முகம் குழுவினர் வழங்கும் ''அமங்கல இசை''
காலை 7 மணிக்கு
''உலகம் அழியுமா'' 15 நாள் டைம் கொடுப்பாங்களா? பிரபல ஜோதிடர் கூடன்குளம் நாராயணசாமி தனது ஏழம் அறிவு மூலமாக கணிக்கிறார்.
காலை 8 மணி
ஒரு சாவுக்கு எம்புட்டு வாங்குறீங்க ''மரண கானா விஜி'' யுடன் ஒரு கல கல பேட்டி .
காலை 9.30 மணிக்கு
உலக அழிவிற்க்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா? பேராசிரியர் சா(வு)லமன் பாப்பையா தலைமையில் தற்கொலை செய்துகொள்ள சிந்திக்க வைக்கும்சிறப்பு- பட்டி மன்றம்.
காலை 11 மணிக்கு
''பேய்புடிக்கலாம் வாங்க'' சுடுகாட்டில் தூங்கி கொண்டிருப்பர்களுடன் ஆவி அமுதா பங்கு பெரும் கொல கொலப்பான நிகழ்ச்சி .
நண்பகல் 12 மணிக்கு
இந்திய தொலைகாட்சி வரலாற்றில்... முதன் முதலாக.. திரைக்கு வந்து 10 , 15 வருடங்களான நாசர் , ரோஜா நடித்து திருட்டு வீசிடி களில் கூட வெளிவராத ''மாயன்'' திரைப்படம் கண்டு மகிழுங்கள்
மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழ் நாடு அரசு மற்றும் நத்தம் விஸ்வனாதன் குழுவினர் வழங்கும் ''பவர்கட்'' தமிழ்நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சி .
11 மணிக்கு பிறகு..
டண்டணக்கா டனக்கு நக்கா !!!
By TNRZAHIR
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment