Blogger Widgets

Total Page visits

Monday, February 24, 2014

'வாட்ஸ்அப்' கண்டுபிடிப்பாளரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை

பிரபல, 'வாட்ஸ்அப்' தொழில்நுட்பத்தால், 1,200 கோடி ரூபாய்க்கு அதிபதியான, ஜான் கூமின், கடந்த கால வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது.

உலகம் முழுவதும், மொபைல் போன் பயன்பாட்டாளர்களிடையே, 'வாட்ஸ்அப்' மென்பொருள் புகழ் பெற்று விளங்குகிறது. தங்கள் கையில் உள்ள, மொபைல் போன் மூலம், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களுடன், குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை எளிதாக, குறைந்த கட்டணத்தில் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம், இந்த மென்பொருளை, 'பேஸ்புக்' சமூக வலைதளம், 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியதுடன், ஜான் கூமை, தன்னுடைய இயக்குனர்கள் குழுவில் ஒருவராக நியமித்தது. ஆனால், ஜான் கூம், இந்த நிலையை அடைய, பெரும் போராட்டம் நடத்தியுள்ளார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைனில், யூதர்களுக்கு எதிரான போலீசாரின் அடக்குமுறையில் இருந்து தப்பித்து, தாயுடன், அமெரிக்காவிற்கு குடியேறிய கூம், பழைய நோட்டுப் புத்தகங்களுடன், ஒரு வேளை உணவுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது. பின்னர், ஒரு மளிகைக் கடையில், தரையை சுத்தம் செய்யும் பணியை செய்தவாறு, கல்லூரி படிப்பை முடித்தார். அவருடைய தாய்க்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்த அமெரிக்க அரசு, மருத்துவத்திற்காக நிதியுதவி அளித்தது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சிலிகான் வேலியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனப் பணியில் சேர்ந்தார். அங்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த, பிரையன் ஆக்டன் நண்பரானார். கூமின் தாய் இறந்த பின், அவருக்கு ஆக்டன் ஆதரவளித்தார்; இருவரும் இணைந்து யாகூவில் பணியாற்றியவாறு, தங்களுடைய கண்டுபிடிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2007ல், யாகூவை விட்டு வெளியேறிய பின், மொபைல் போன்களில் பயன்படுத்தும், 'வாட்ஸ்அப்' அப்ளிகேஷனை வெற்றிகரமாக தயாரித்து செயல்படுத்தினர்.

இன்று, பேஸ்புக், டுவிட்டரை விட, அதிகளவில், இந்த அப்ளிகேஷனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எந்த இடத்தில், ஒரு வேளை உணவுக்காக, தன் தாயுடன் வரிசையில் நின்றாரோ, அதே சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ள, பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பதினாறு வயதில் இருந்து போராடத் துவங்கிய கூம், தன்னுடைய, 38வது வயதில் கோடீஸ்வரராகி சாதித்துள்ளார்.

Source dinamalar

Friday, February 21, 2014

K S R Institute for Engineering and Technology Wanted Professor/Associate and Assistant Professor


College Profile: The K S R Institute for Engineering and Technology is another landmark of the Aarthi Educational & Charitable Trust which has the perquisite of sprawling education proportionally to the society.  It has been founded in the year 2011 by the man of great insight, Thiru.R. Srinivasan.  He is the younger son of Lion Dr.K.S.Rangasamy whose altruism enlightens the society.  His constant dreams and endeavours erected the doom of knowledge for quenching the long unanswered quest among the blooming minds.


Job Title: Professor/Associate Professor/Assistant Professor
Departments: 
  • Mechanical Engineering
  • Electronics and Communication Engineering
  • Computer Science and Engineering
  • Electrical and Electronic Engineering
  • Information Technology
  • Maths
  • Physics
  • Chemistry
  • English
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil/Ph.D and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their PG  in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
Job Location: Namakkal
Scale of Pay : As per College Norms

Last Date: With in 9 day

Apply Mode : Offline

Website : Clickhere
How to Apply: Interested and Eligible candidates are request to send your detailed resume along with necessary document and passport size photograhp to following Postal Address with in 9 days

Postal  Address:
The Principal,
K S R Institute for Engineering and Technology,
K.S.R. Kalvi Nagar, Tiruchengode - 637 215,
Namakkal District, Tamilnadu, India

Ref: The Hindu, Coimbatore Edition, 20th February 2014

Arulmurugan College of Engineering, Karur Wanted Professor/Associate Professor/Assistant Professor


Post Date: 19th February 2014
Name of the College : Arulmurugan College of Engineering
College Profile: Arulmurugan College of Engineering, started in the year 2012 as a partner of the youth of today, with an outcome-based laser focus on prosperity, shares the youth's urgency and optimism for the future of the individual and the country. Arulmurugan College of Engineering is geared to work side by side with the individual students and committed, too, through the boldness by design and shape for future initiatives, to our continuous improvement and stake holders. Arulmurugan is an innovative and creative Institution. The entire faculty attempt to provide advanced knowledge delivery with research input, uniquely equipped to partner in the community development and regional economic development initiatives that will be so vital to our future.


Job Title: Professor/Associate Professor/Assistant Professor
Departments: 
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Computer Science and Engineering
  • Electronics and Communication Engineering
  • Electrical and Electronics Engineering
  • Maths
  • Physics
  • Chemistry
  • English
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil/Ph.D and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their PG  in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
Job Location: Karur
Scale of Pay : As per AICTE Norms

Last Date: As soon as possible

Apply Mode : Offline/Online

Website : Clickhere
How to Apply: Interested and Eligible candidates are request to send your application along with necessary document and passport size photograh to following Postal Address or Email Address as soon as possible

Email Address: engg@arulmurugan.edu.in

Postal  Address:
ThePrincipal,
Arulmurugan College of Engineering,
Thennilai,
Karur – 639 206.
Tamilnadu, India

Thursday, February 20, 2014

உங்கள் மூளையை திறன்மிக்கதாய் மாற்றும் வழிகள்

தேர்வுக்கு தயாராகும்போது நீங்கள் முக்கியமாக கவனிக்கக்கூடிய விஷயங்களுள் ஒன்று உங்கள் மூளை. "அது இருந்தால்தான் இவ்வளவு பிரச்னை இருக்காதே" என்று கேட்கிறீர்களா? மனிதனாக பிறந்தாலே மேல் மாடியில் ஏதோ ஒரு சாம்பல் வஸ்து ஒரு இருக்கின்றது இல்லையா.. அப்படியானால் அடடே உங்கள்ளுக்கும் மூளை இருக்கின்றதுதான்!

கவனமாக படியுங்கள். உங்களுடைய திறமையின் அச்சாரமே உங்கள் மூளைதான். அது சீராக செயல்பட்டால் அதனுடைய ஆற்றல் பிரமிக்கத்தக்கது. ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு அது சீராக செயல்படுவதில்லை. ஆகவேதான் கவனக்குறைவு, படிப்பது நினைவில் நிற்பது இல்லை. படிக்கவே தோன்றுவது இல்லை அல்லது அதில் நாட்டம் இல்லை. வீடியோ கேமில் வரும் உற்சாகம் படிப்பில் வருவது இல்லை போன்ற குறைபாடுகள்.

அதனை சொல்லியும் குற்றம் இல்லை. நீங்கள் ஒரு கம்ப்யூட்டர், அல்லது கார் வாங்க செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவற்றோடு கூட அதை எப்படி இயக்க வேண்டும் என்ற சின்ன புத்தகத்தை கொடுப்பார்கள். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அதில் தெளிவாக எழுதி வைத்திருக்கும். அனால் நீங்கள் பிறந்தபோது உங்களோடு சேர்ந்து உங்கள் மூளையை எப்படி இயக்குவது என்று ஒரு சின்ன புத்தகமும் சேர்ந்து பிறந்ததா என்ன? இல்லையே. அந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு இப்போதைய அறிவியல் நம் மூளையை பற்றிய பல விஷயங்களை ஒவ்வொரு நாளும் கண்டறிந்து இருக்கின்றது. அவற்றை ஒவ்வொன்றாய் பார்ப்போம். 

இந்த மூளையை சீராக இயக்க மட்டும் கற்றுக் கொண்டால் ஒவ்வொருவரிலிருந்தும் ஒரு அசகாய சக்தி பிறந்து அவர்களை எதையும் சாதிக்க வைக்கும். இத்தகு ஆற்றல் மிகுந்த மூளையை இயக்க கற்றுக்கொள்வது எப்படி என்பது ஓரிரு நாட்களுக்குள் நடைபெறும் பணி அல்ல. அது ஒரு கடல். ஞாபக மறதி, கவனமின்மை, நாட்டமின்மை இவை எல்லாமே பொய்களாகி, மகா மக்கு மாணவர்களுக்கு கூட இந்தக் கலையை இந்த பக்கங்களுக்குள் அடக்கி கற்று தந்துவிட முடியாது. 

முதலாவதாக இந்த மூளை இயங்கும் இடம் நம்முடைய உடல். அதனை ஒழுங்காக பராமரிப்பதன் மூலம் நாம் நம் மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு வழி வகுக்கலாம். தேர்வுக்கென்று நீங்கள் தயாராகும் சமயத்தில் உங்கள் மூளையை இப்போதிருந்தே நீங்கள் பராமரிப்பது அவசியம். இந்த இருபது நாட்களுமே உங்கள் உணவில் உங்கள் மூளைக்கு ஏற்ற ஊட்ட சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். 

ஐந்து அத்தியாவசிய உணவுகள் தேர்வு காலத்தில்:
 
1. முளை கட்டிய தானியங்கள் ஒரு கப் அன்றாடம் அல்லது மீன்/முட்டை.
2. பசலைக் கீரை பொரியல், சூப், குழம்பு என எதோ ஒரு வடிவத்தில்
3. வாழைத்தண்டு - ஒரு கிண்ணம் - கூட்டு / ஜூஸ்
4. உலர்ந்த பழங்கள் - பாதாம், பேரிச்சை, திராட்சை
5. பச்சை காய்கறிகள் / பழங்கள் 

அப்படியே அறவே தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுகள்: 

1. சீஸ்: இது செரிமானத்திற்கு கஷ்டமான உணவு, தேர்வு சமயத்தில் தவிர்ப்பது நல்லது.

2. காபி / டி: இது கண் விழித்து படிப்பதற்கு உதவும் என்று அதிக மாணவர்கள் குடிக்கும் விஷயம். அனால் இது இயல்பான தூக்க நிலையை கெடுப்பதுடன் தூங்கும் வேளையில் கூட மூளைக்கு தேவையான ஓய்வை தராது. இதற்கு பதிலாக சுக்கு காபி, இஞ்சி காபி போன்றவற்றை சூடாக குடிக்கலாம்.

3. சிகரெட் / மது: இவற்றை பற்றி சொல்லவே வேண்டாம். மூளை மற்றும் உடலின் முதல் எதிரிகள்.

4. சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் (மைதா, வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, அதிகமான இனிப்புகள்) : ஜீரணத்திற்கு பாதகம் விளைவிக்கும் என்பதினால், இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டாம் என்றாலும், கூடிய மட்டும் குறைத்துக் கொள்ளலாம்.

5. கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனிகள்.
இவற்றோடு சேர்ந்து அடிக்கடி தண்ணீர் அருந்தும் பழக்கம். இது உங்களுடைய உடலையும் அதற்குள் இயங்கும் மூளையையும் சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும். துருப்பிடித்த சைக்கிள் அதுவே எண்ணெய் விட்டால் எவ்வளவு அருமையாக ஓடுகிறது இல்லையா? அதே போல் உங்கள் மூளை சீராக இயங்க மிகவும் தேவையான சமாச்சாரங்கள் இவை. 

இன்று முதல் இவற்றை ஒவ்வொரு நாளும் பின்பற்றுங்கள். தேர்வு நேரத்தில் களைப்படையாமல் எழுத, சமயோசிதமாக செயல்பட என்று அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும். இவை உடலளவில் அவசியம். அனால் இதே மூளையை படிக்க பயன்படுத்தும் போது இன்னும் சில விஷங்களை நீங்கள் கடைபிடித்தால் அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகும்.

                                                        -  கீர்த்தன்யா, மைன்ட்பிரஷ்
Shared from dinamalar education malar