கரும்புக் கட்டுகளை பல்சக்கர அரவை இயந்திரத்தில் கரும்புகள் திணிக்கப்பட்டு, கிடைக்கும் கரும்புப்பால் கொப்பரையில் ஊற்றப்படுகிறது. கொப்பரை அடுப்பு எரிய, அதில் கொதிக்கும் கரும்புப்பாலை துடுப்புக் கட்டையால் கிண்டிவிடுகிறார்கள். குறிப்பிட்ட பக்குவத்தில் கரும்புப்பால் சுண்டி, பாகு நிலைக்கு வருகிறது. ஆறிய பாகுவைக் கரண்டியால் சுரண்டி எடுக்கிறார்கள். அட அதுதான் சர்க்கரை.
நாங்க உற்பத்தி செய்யும் சர்க்கரையை சந்தையில விற்பனை செய்யறதில்லை. இயற்கை அங்காடிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடியா விற்பனை செய்யறோம். கிலோ 80 ரூபாய் விலைக்குக் கொடுக்கிறோம்.
பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க வண்டி வண்டியாக கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை அனுப்பப்பட்டுள்ளது. அது இன்றும் தொடர்கிறது. கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்கினால், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்புக்கு, ப. கிருஷ்ணமூர்த்தி, செல்போன்: 8248327723.
No comments:
Post a Comment