Blogger Widgets

Total Page visits

163745

Monday, September 30, 2013

அன்பு முத்தம்.

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக
கீழே போட்டு உடைத்து விட்டது.அவள்
அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....

அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.

யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.


பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

No comments: