Monday, September 30, 2013
அன்பு முத்தம்.
ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக
கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.
ரெண்டு செல் போன்களின் குமுறல்கள் !!!
போ - 1. அப்பாடா இன்னிக்கு ஒருத்தன் நம்மளை வாங்கிட்டான் பா ...கடையில இருந்து தப்பிச்சோம் .
போ - 2. ஹாய் ..நம்மளை ஒரு பொண்ணு வாங்கிடுச்சு.ஹய்யா ஜாலி ...டெய்லி
நமக்கு கலர் கலர்ரா டிரஸ் போட்டு விடுவா.தோடு .ரிப்பன் எல்லாம் வாங்கி
மாட்டுவா ...ஹ்ம்ம்ம்ம்.
முதல் நாள் :
போ - 1. அடேங்கப்பா ,,,பெரிய நல்ல மனுஷன் கிட்ட தான் வந்து சேர்ந்து இருக்கோம் போல,,,நல்லா துடைச்சு துடைச்சு பார்த்து
கிறா னப்பா,,,
போ - 2. அட,,அட,,அட,,,,அவ குளிக்குறாலோ,,,இல்லையோ,,நமக்கு நல்லா மேக் அப்
போட்டு விடுறாயா,,,,எச்சி எல்லாம் துப்பாம,,,வெட் tissue வச்சு எல்லாம்
துடைச்சு விடுறா ,,,ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கோமோ,,,,
கொஞ்ச நாள் கழிச்சு :
போ - 1. அட பக்கி காலங்காத்தாலே பல்லு கூட விலக்காம, என்னைய எடுத்து அவன் கேர்ள் பிரெண்டு கூட கடலை போட ஆரம்பிச்சுடுச்சு ....
பையன் : ஹாய் டார்லிங் எழுந்துடீயா ...
போ.1. மூதேவி,அவ எந்திரிக்காமையாடா பேசுறா ...ஜொள்ளு விட ஒரு அளவு இல்லையாடா .
பையன் : நேத்து என்ன கனவு கண்ட
போ 1. நேத்து எங்க டா தூங்க விட்ட அவளை ...4 மணி வரை அறுத்து எடுத்துட்டு பேச்சை பாரு .
பொண்ணு : நான் இன்னும் எந்திரிக்கலை டா ...
போ 2 : அடிப்பாவி , காலைல எழுந்ததுல இருந்து தூங்கும் வரை பொய் தானா ???
பையன் : நான் குளிச்சு ஆபீஸ் க்கு கிளம்பிட்டு இருக்கேன் ...
போ 1: அட நாதாரி ...
பொண்ணு : சரி.இன்னிக்கு என்ன கலர் ஷர்ட் .என்ன கலர் பேன்ட் ...
போ 2: நாட்டுக்கு ரொம்ப முக்கியம் .அப்படியே நல்லா வாயில ...பல்லு கூட விலக்கலை ..பேச்சை பாரு.
டொய்ங்...டொய்ங்....டொய்ங்...பீப் சவுண்ட் ...
அடியே அழகு ராணி என் உசுரு போக போகுதுடி ...சீக்கிரம் சார்ஜ் போடும்மா ..
பையன் : நான் இன்னிக்கு டார்க் பச்சை ஷர்ட் ...டார்க் ப்ளாக் பேன்ட் ...
போ 1: ஆமா டா எங்க ஊருல எல்லாம் ப்ளாக் கலர் நல்லா லைட் டா வெள்ளையா இருக்கும் ...முதல்ல சார்ஜ் ல போடுறா புறம்போக்கு ...
எப்படி டா இப்படி பேசுற ...
பொண்ணு : சரி...சரி..இரு அம்மா கூப்பிடுறாங்க ..அப்புறம் பேசுறேன் ...
போ 2: அம்மடியோவ்வ் ...யாருமே கூப்பிடலையே ...ஏன் இப்படி சொல்லுறா ...
பையன் : வழக்கம் போல பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டா,,,சரி நம்ம வேலைய பார்ப்போம்.
பையன் பாஸ் : காலிங் காலிங் ,,,,போன் ரிங்கிங் ரிங்கிங்,,,,
ரிங் டோன் ..... போடா போடா புண்ணாக்கு ,,,,பாட்டு ரிங் டோன் ,,,,
போ 1: டே பக்கி ,,,உன் பாஸ் டா,,,,,எடுக்க மாட்டானே ,,,,
பையன் : சார்,,,,குட் மார்னிங் சார்,,,,
பாஸ் : எங்க பா இருக்க,இன்னிக்கு presentation க்கு ரெடி பண்ணிடீயா ,,,
பையன்: நேத்து நைட் டே உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன் சார் ,,,
பாஸ்: ok ,very good .எங்க இருக்க ,,,,
பையன்: on the way to ஆபீஸ் சார் .
போ 1: அட பக்கி,,,,காலைலயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டான் யா,,,
பொண்ணு : காலிங் ,,,காலிங் டு பையன் ,,,
போ 2: ஐயோ,ஆரம்பிச்சுடாலே சாமி,,,,என்னை காப்பாத்த யாருமே இல்லையா ,,,
நான் சூடாகி வெடிக்குற வரை பேசுவாளே ,,,,அந்த பொறம்போக்கும் வச்சு தொலைய மாட்டானே ,,,
பையன்: ஹாய் டியர்,,,என்ன பண்ணுற,,,
பொண்ணு: காலேஜ் க்கு கிளம்பிட்டு இருக்கேன் .
போ 2: படிக்குறதை தவிர மத்த எல்லாம் நல்லா பண்ணுற,,,
பையன் : சரி நான் ஆபீஸ் க்கு வந்துட்டேன்,லஞ்ச் டைம் ல பேசுறேன்,,
பொண்ணு :அப்போ என்னை விட ஆபீஸ் தான் முக்கியமா ,,,சரி,,,போ,,,டோன்ட் கால் மீ ,,bye
போ 2: அய்யய்யோ ,,,,,இனி நான் செத்தேண்டா ,,,என்னை அமுக்கி அமுக்கியே கொல்ல போறா மெசேஜ் ன்ன்ர பேருல ,,,
பையன் : ஹாய் ,டார்லிங்,,,pls try to understand .
போ 1: இங்கிலீஷ் புலவர் கிளம்பிட்டாரு டோய் ,,,,
பொண்ணு : no reply .....
போ 2: போச்சுடா ,,,இனிமேல் அவன் ஆரம்பிச்சுடுவான் ,,,மூச்சு விடாம அந்த
ரோசன்கெட்ட நாய் ,,,தொடர்ந்து msg அனுப்பி சாவடிக்க போறான்,,,நமக்கு
battery யை காலி பன்னுரதுலையே குறியா இருக்காங்க பா
பையன் : ப்ளீஸ் டியர் ,,,,reply me ,,,,
பையன்: my sweet heart ,,,ப்ளீஸ் ,,,
பையன் : blank msg
போ 1: அட ரோசம் கெட்டவனே ,,,,நீ எல்லாம் திருந்தவே மாட்டீயாடா .அவ தான் reply பன்னலைல ,,,
பொண்ணு: கடைசி msg என்ன பண்ணின,,,ஒண்ணுமே வரலை,,,,blank msg received ...
பையன்: yes ,,yes ,,,yes ,,,( inner பீலிங் ,,வெளிய குதிக்குறான் )
பையன்: i love you ன்னு msg பண்ணினேன் ,,,,
பொண்ணு: சரி ,,evening எத்தனை மணிக்கு முடியும்,,,வேலை,,,
பையன்: பீச் போகலாமா,,,
பொண்ணு: அது அப்புறம் சொல்லுறேன்
போ 2: அட கிறுக்கி மவ சிறுக்கி,,,டெய்லி இப்படியே அவனை தொல்லை பண்றேன்னு நம்மளை தொல்லை பண்றேளா
போ 1: அப்படா ,,,இனிமேல் தொல்லை இல்லை,,,சாப்பாடு வரை,,,
போ 2: அப்படா,,,,இவ கிளாஸ்க்கு போய்ட்டான்னா தான் நமக்கு நிம்மதி
லஞ்ச் டைம் :
பையன் : காலிங் காலிங் டு பொண்ணு
போ 2: ரிங் டோன் : டார்லிங் டார்லிங் டார்லிங் ,,,i love you ,,,,love you ,,,love you
போ 2: இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ,,,,நேரம் தான் ,,,,
பையன் : ஹாய் டியர்,,,சாப்டியா,,,
போ 1 : அட போங்கடா ,,பொழுது ஆரம்பிச்சதுல இருந்து ,,பொழுது போறவரை உங்க
தொல்லை தாங்கலை டா ,,,டெய்லி சார்ஜ் போடுறதை தவிர வேற என்ன டா பண்ணி
இருக்க,,,பாவி
போ 2: சே ,,எப்படியோ எல்லாமா கனவு கண்டு வந்தேன்,,
இவளுக்கு வாக்க பட்டு என்ன சுகத்தை கண்டேன்,,,
Thanks facebook
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - விமர்சனம்
ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்பதனையே மக்களுக்கு சொல்ல வருகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
தனக்கென்று தனிபானி, தனி பாதை என்று பயணிக்கும் இயக்குனர்களில், தான்
முக்கியமானவன் என்று தனது ஒவ்வொரு படங்களிலும் நிரூபிக்கும் மிஷ்கின் இந்த
படத்தையும் அவ்வாரே இயக்கியுள்ளார்.
மருத்துவக்
கல்லூரி மாணவரான ஸ்ரீ, நண்பருடைய வீட்டில் படித்துவிட்டு நள்ளிரவில் வீடு
திரும்பும் வேளையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை
பார்க்கிறார்.
அவரை காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்க முயல்கிறார். ஆனால் அந்த உயிர் மீது அனைவரும் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால் தன் வீட்டிலேயே கொண்டு போய் அவருக்கு ஆபரேஷன் செய்கிறார். இதற்கு உதவியாக இவருடைய பேராசிரியரும் துணைபுரிகிறார். ஆபரேஷன் செய்த மறுநாள் மிஷ்கின் அங்கிருந்து தப்பித்து போய்விடுகிறார்.
அதன்பிறகு சிபிசிஐடி பொலிசார் ஸ்ரீயின் வீட்டிற்கு வந்து மிஷ்கின் ஒரு
பயங்கர ரவுடி என்று சொல்கின்றனர்.
ஒரு கொலையாளிக்கு உதவி செய்தற்காக அவரது குடும்பத்தையே கைது செய்கிறது.
பொலிஸ் காவலில் இருக்கும் ஸ்ரீயின் மொபைலுக்கு அழைப்பு வருகிறது. அதில்
மிஷ்கின் பேசுகிறார்.
அதில் ஸ்ரீயை சந்திக்க வேண்டும் என மிஷ்கின் கூறுகிறார். இந்த சூழலை பயன்படுத்தி மிஷ்கினை என்கவுன்டர் செய்ய பொலிஸ் திட்டமிடுகிறது. அதற்கு ஸ்ரீயிடம் துப்பாக்கியைக் கொடுத்து மிஷ்கினை நீயே சுட்டுவிடு என்று கூறுகின்றனர். ஸ்ரீ தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இந்த அசைன்ட்மென்டுக்கு ஒத்துக் கொள்கிறார்.
ஸ்ரீயை சந்திக்கும் மிஷ்கின் மிகவும் சாதுர்யமாக ஸ்ரீயை எலெக்ட்ரிக் ரெயிலில் கடத்திச் செல்கிறார். இறுதியில் பொலிஸ் ஸ்ரீயை மீட்டு மிஷ்கினை கொன்றதா? அல்லது மிஷ்கினை ஸ்ரீ கொன்றாரா? என்ற மீதிக்கதையுடன் படம் நகர்கிறது. முகமூடி படத்திற்கு பின்பு மிஷ்கின் எழுதி இயக்கி, நடித்திருக்கும் படம்
இது. தனது இயல்பான கதை, எதார்த்தம் குறையாத காட்சிகளை மிக அழுத்தமாக பதிவு
செய்திருக்கிறார்.
படத்தில் பாடல் இல்லாமல், கொமடி, நடிகர் கூட்டம் இல்லாமல் ஒரு ஆங்கில
படத்திற்கு இணையான கதையையும், காட்சிகளையும் ரசிக்கும் படியாகவும்,
பிரமிக்கும்படியாகவும் அமைத்திருப்பது இவருக்கு உரிய பாணி.
குறிப்பாக
படத்தில் ப்ளாஷ்பேக்கை காட்சிப்படுத்தாமல் ஒரு குழந்தைக்கு கதை
சொல்வதுபோல் படம் பார்ப்பவர்களுக்கு தனது நடிப்பையும் சேர்த்து கதையை
சொல்லும் விதம் மிகவும் சிறப்பு. அதில் பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்திருப்பது காட்சியின் உச்சக்கட்டம். படத்தில் இதுபோன்ற காட்சிகள் எண்ணில் அடங்காமல் இடம்பெற்றுள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் மிஷ்கின் மின்னலென சுழல்கிறார்.
வழக்கு எண் 18/9 படத்திற்கு பின்பு ஸ்ரீ நடிக்கும் படம் இது. அப்படத்தில் இருந்து இதில் ஒரு மாறுபட்ட நடிகராக தெரிகிறார். இந்த படத்தின் விறுவிறுப்பை சுமக்கிற பொறுப்பு இவருக்கு. அதை சிறப்பாக செய்திருக்கிறார். இசைஞானியின் பின்னணி இசை தென்றல் போல் மனதை தொடுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய பின்னணி இசைதான்.
இதற்கு மிஷ்கின் டைட்டிலிலேயே முன்னணி இசை என்று இசைஞானிக்கு கௌரவம் சேர்க்கிறார். பாலாஜி
வி ரங்காவின் ஒளிப்பதிவு மிக நுணுக்கமான உணர்ச்சிகளைக்கூட அவசரமில்லாமல்
நிறுத்தி, நிதானமாக உள்வாங்குகிறது. இவருடைய கமெரா வியப்பை மட்டுமே
அளிக்கிறது.
தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக கோடிகளை சம்பாதிக்க மிஷ்கின்
தவறியிருந்தாலும், அவ்வபோது வழி தவறி பயணிக்கும் தமிழ் சினிமாவை சரியான
பாதையில் பயணிக்க வைக்க தவறியதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை
நிரூபித்துள்ளார்.
மொத்தத்தில் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் காத்திருந்த ரசிகர்களுக்கு த்ரில்லர் வேட்டை.
Thanks cineulagam
Salary Of TCS Employee | Highest Salary Of TCS | TCS Onsite Salary | TCS Increment Every Year
TCS is the one of the well paid company in India. TCS Package is
always lucrative for new Fresher’s & also for experienced
professionals. TATA Consultancy Services offer lump sum salary package
for all TCSers. TATA Consultancy Services also offer good increment on
completion of two years, promotion.
TCS offer average 10% average increment every year.

TCS salary will depends on various factor like Educational Qualification, Skill, Experience, Grade, Appraisal Rating etc.TCS career ladder is like below:
- TCS New Fresher’s (Trainee)
- TCS Assistant System Engineer
- TCS System Engineer
- TCS IT Analyst
- TCS Assistant Consultant
- TCS Consultant
- TCS Senior Consultant
- TCS Principle Consultant
- TCS Vice president
- TCS MD
Salary Of a New Fresher’s in TCS (B.E/B.TECH/B Sc/BBA):
- Salary of a TCS new Fresher’s is Rs 325000-340000 /year
- Salary for M.E/M.Tech/Msc/MCA will be Rs 30000/year more than the mentioned salary
Salary of a Assistant System Engineer in TCS(Experience of 1 year):
- Salary will increase slightly to Rs 350000/year
Salary of a Assistant System Engineer in TCS(Experience of 2 year):
- Salary will be Rs 380000-400000/year
- TCS employee will get two increment in this year. Once for completion of two years & another in April appraisal increment
Salary Of System Engineer in TCS(Experience of 3 year):
- Salary will be Rs 420000- Rs 460000/year
Salary Of IT Analyst in TCS(Experience of 4 year):
- Salary will be Rs 530000- Rs 580000 /year
- TCS employee be promoted to IT Analyst post after completion of 4 year
Salary Of IT Analyst in TCS(Experience of 5 year):
- Salary will be Rs 570000- Rs 640000 /year
After completion of 5 years in TCS, TCS employee generally get 10% average increment in April every year.
Salary Of Assistant Consultant in TCS:
- TCS associates above 7-8 years of experience & having Assistant Consultant receive salary of Rs 1000000 per year.
Salary Of Consultant in TCS:
- TCS employee having Consultant post receive a salary of Rs 1200000- Rs 1400000/year
Salary Of Senior Consultant in TCS:
- TCS employee promoted to Senior Consultant receive a annual salary of Rs 1800000-Rs 1800000/year.
Salary Of Principle Consultant in TCS:
- TCS employee promoted to principle consultant post receives an annual salary of Rs 2600000- Rs 3000000.
TCS MD salary & TCS Vice president has been decided by TCS board & is not disclosed.
TCS Onsite Salary In USA:
- TCS will pay around $3600 per month in TCS. You can save atleast $1500-$2000 per month in TCS USA Onsite. It is wise to pay maximum tax in TCS USA Onsite, hence you need not to pay Tax in India. USA Government will refund your additional(Almost total) tax after deducting the required income tax.
TCS Onsite Salary In Mexico:
- TCS will pay much lesser amount in Mexico than US onsite. However TCS will pay around $2400 per month in Mexico onsite.
Thanks http://www.newlatesttips.info
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்
முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய
மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும்
என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என..
பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை
இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை...
என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும்
ஆட்டுக்குட்டியும்!’
சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.
உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும் அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவரை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!
மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இதைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை!
அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!
தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!
இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.
ஆக மொத்தத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மிஷ்கினும் அவரது ரசிகர்களும்’ என்றால் மிகையல்ல.

ராஜா ராணி விமர்சனம்
காதலிச்சு ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு
வாழ்க்கையே கிடையாது என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை,
வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். காதல் தோல்விக்கு
பிறகும் வாழ்க்கை இருக்கு... காதலும் இருக்கு... என்ற கருத்தை புதிய
கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம்
அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.
கதைப்படி ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார். எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது.
இதுஒருபுறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார். ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ஏற்படுகிறது. இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!
ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய்... போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார் மனிதர்.
யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப்...!!
ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆஸம்...!
வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார்.
‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’,,‘‘நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது.
ஆஸ்பத்திரியில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்போது தெரியாது என்று ஆர்யா சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம், அட்லீஸ்ட் நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது.
மொத்தத்தில், ‘‘ராஜா ராணி’’ - ரசிகர்களின் இதய அரண்மனையில் ‘மகுடம்’ சூடப்போவது நிச்சயம்!!

படிப்போம்; பகிர்வோம்
தற்போது செய்தித்தாளை சில நொடிகளில்
புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு
கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும்,
நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.
ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில் பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ, நிகழ்வுகளைப் பார்க்கும்போதோ அவை உள்ளது உள்ளவாறே மனதில் பதிந்துவிடும்.
நாளிதழ்களில் மேம்போக்காக தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டுச் செல்வதைத் தவிர்த்து, சற்று உன்னிப்பாகப் படித்தால் பல புதிய சொற்களையும், சொற்றொடர்களையும், பயன்பாடுகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
அரசியல் தொடங்கி அறிவியல் வரை ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பல புதிய சொற்கள் உருவாகின்றன. தொடர்ந்து படித்தால்தான் அவ்வப்போது அறிமுகமாகின்ற புதிய சொற்களைப் புரிந்துகொள்ள முடியும். "அதற்கெல்லாம் தேவையில்லை', "வாசித்து என்ன ஆகப்போகிறது?' அவ்வப்போது இணையதளங்களில் பார்த்துவிடுகின்றோம்' என்றெல்லாம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
அறிவியல், பக்தி, சோதிடம், திரைப்படம் வேலை வாய்ப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகள் வெளிவரும் நாள்கள் மட்டுமே செய்தித்தாளை வாங்குவதை விட்டு அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு செய்தித்தாளை தெரிவு செய்து, அதனை தினமும் படிப்பதை நடைமுறையில் கொள்வது நல்லது. அப்பொழுதுதான் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியும். என்றாவது ஒருநாள் படிக்காமல் விட்டுவிட்டால் அன்று வந்திருந்த முக்கியமான செய்தியையோ, கட்டுரையையோ நாம் இழக்க நேரிடும். கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ தினமும் 300 பக்கங்களுக்கு மிகாமல் உலகச் செய்திகளைப் படிப்பாராம்.
பல அரசியல் பிரமுகர்களும், வேறு பல துறையைச் சார்ந்தவர்களும் தினமும் படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள்ளூர் செய்தி தொடங்கி உலகச் செய்திகள் வரையில் அறிய, நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது நாளிதழைப் படிப்பதற்காக ஒதுக்குவது நல்லது.
அவ்வாறே நூல் படிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். கதைகள், கட்டுரைகள், சாதனையாளர்களின் வரலாறு, ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல், பயணக்கட்டுரைகள் என பலவகையான நூல்கள் உள்ளன. சார்லி சாப்ளினுக்கு புதிய சொற்கள் மேல் அலாதிப் பிரியம் என்றும், தினமும் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார் என்றும், அதனை நடைமுறையில் பயன்படுத்துவார் என்றும் கூறுவர். அவர் தன்னுடைய சுயசரிதையில் அதிகமான புதிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நூல் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளும் முன்பாக எந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஐயம் மனதில் தோன்றும். பல நூல்களைப் படிக்கப் படிக்க நாளடைவில் தானாகவே எந்த நூலைப் படிப்பது என்ற தெளிவு கிடைத்துவிடும்.
நூல் என்பது நமக்கு சிறந்த நண்பன் என்பதை மனதில் கொண்டு, நாளிதழ் வாசிக்க நேரம் ஒதுக்குவதைப் போல தினமும் 50 பக்கங்களுக்குக் குறையாமல் ஏதாவது ஒரு நூலைப் படிப்பது நல்லது.
படிப்பதால் மனம் தெளிவாகிறது. நினைவாற்றல் பெருகுகிறது. நற்சிந்தனை மேம்படுகிறது. நாளிதழ்களைப் படிப்பதால் அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறே நூல்களைப் படிக்கும்போது நமக்குள் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலிட ஆரம்பிக்கிறது.
ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியிடம் வரலாறு படிப்பதோடு மட்டுமன்றி வரலாறு படைக்கவும் வேண்டும் என்று கூறுவாராம். அவ்வாறான உயரிய சிந்தனையை மனதில் வைத்து வரலாற்றைப் படைக்க முடியும் என்ற குறிக்கோளோடு படிக்க வேண்டும்.
நாளிதழையோ, நூலையோ படித்து முடித்தபின்னர் நண்பர்களிடமும், குடும்பத்தாரிடமும் படித்தவை பற்றி விவாதிக்கலாம். அதன் மூலம் பல புதிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். புதிய சொல், புதிய செய்தி, புதிய உத்தி, புதிய நடை, புதிய வரலாறு என்று ஒவ்வொரு நிலையிலும் ரசித்து ரசித்துப் படிக்கலாம்.
இதுவரை இப்பழக்கம் இல்லாதவர்கள் வாசிப்புப் பழக்கத்தை இன்று முதல் தொடங்கலாம். நண்பர்களையும் இவ்விதப் பழக்கத்தை மேற்கொள்ள அறிவுறுத்தலாம். வாசிப்புக்கென நேரத்தை ஒதுக்கி, வீட்டில் ஒரு நூலகத்தை உருவாக்கி நூல் எண்ணிக்கையைப் பெருக்கினால் வீடும் நாடும் வளம் பெறும்.

அறிவும் அனுபவமும்
இக்காலத்திற்கு படிப்பறிவை விட பட்டறிவே
அனைவருக்கும் தேவையாக இருக்கிறது. பட்டறிவால் பாதித்தவர்கள் தங்களின் தவறை
உணர்ந்து மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் தங்களைத் திருத்திக்
கொள்கிறார்கள்.
சிலர் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் தாங்கள் கற்ற நன்மைகளையும், தீமைகளையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க தவறுவதால் அனுபவமற்றவர்கள் தவறுகளை செய்கிறார்கள்.
அனுபவமே நல்ல ஆசான். நாளுக்கு நாள், நாம் வளர வளர நாம் பெறும் அனுபவத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரை இயற்கையாகவே நாம் பல பாடங்களைக் கற்கிறோம்.
அந்தப் பாடங்களைக் கற்கும்போது நாம் தவறு செய்தால், அந்தப் பாடம் நமக்கு மீண்டும் போதிக்கப்படுகிறது. மனித உடலில் 60 டிரில்லியன் திசுக்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு திசுவும் நம் உடம்பு குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும், பல திசுக்கள் மடிந்து பல புதிய திசுக்கள் தோன்றுகின்றன.
ஒரு திசு மறையும்போது, அந்த திசு அந்த உடம்பு குறித்த தனக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் புதிதாக தோன்றும் திசுவுக்கு பரிமாற்றம் செய்து விட்டுதான் மறைகிறது. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித உடம்பு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. அதாவது ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நம் உடம்பின் அதே நிலை இப்போது இல்லை. நம் உடம்பு ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்கிறது. இதே நிலைதான் நம் மனதிற்கும்.
வாழ்க்கை நாளும் நமக்கு பல பாடங்களைப் போதிக்கிறது. ஆனால், நாம் அப்போதைக்கு அதை உணர்ந்து மனதில் உறுதி எடுத்துக் கொண்டாலும், பின்னாளில் மறந்து விடுகிறோம். அனுபவத்தின் மூலம் பெறும் அறிவு, என்றும் நம் நினைவை விட்டு அகலாது. அனுபவ அறிவைப் பெற்றவர்கள் எந்த கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள கூடியவர்களாகவும் விளங்குவார்கள். எனவே, நமது அனுபவத்தையும், நாம் செய்த செயலின் மூலம் அடைந்த சாதக, பாதகங்களையும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நெருப்பு சுடும் என்று நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாலும், அந்தக் குழந்தை அதீத ஆவலின் காரணமாக நெருப்பில் கையை வைத்தாலோ, உஷ்ணம் அக்குழந்தையின் மீது பட்டாலோ அல்லது அதனால் காயம் ஏதும் ஏற்பட்டாலோ அது அந்த நெருப்பின் தன்மையை உணர்ந்து, நெருப்பைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கிறது. இன்று பல தகவல்களை புத்தக அறிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் அது அனுபவ அறிவுக்கு ஈடாகாது.
தாஜ்மஹாலின் பிரமாண்டத்தை வெறும் படத்தை மட்டுமே பார்த்து உணர்ந்து கொள்ள முடியாது. அங்கு நேரில் சென்று உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் அருமையும் பெருமையும் தெரியும்.
மக்களிடையே, எதிலும் அவசரம் என்கிற போக்கு அதிகரித்து வரும் நிலையில் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றவர்கள் அதை பிறருக்கு போதிப்பதில்லை. இதனால், போட்டி, பொறாமை, வன்மம் முதலியவைகள் அதிகரித்து வருகின்றன. தான், தனது, தம் மக்கள், தமது குடும்பம், தம் சமூகம் என்ற மனப்போக்கு வளர்ந்தால் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கு மறைந்து விட்டது. ஒரு தவறை ஒருவன் செய்து அதனால் அவனது நற்பெயருக்கு களங்கம் வந்தால் அந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று அவன் மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால், அதே தவறை மற்றவரும் செய்து துன்பப்படுவார்.
சுயஅனுபவம் நம் மனதில் நீங்கா நினைவாக அமைந்து விடுகிறது. அனுபவம் என்பது நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அதாவது ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது நாம் உதவி செய்து அவர் வாழ்க்கையில் உயர்ந்தால் அது நல்ல அனுபவம். நாம் நம் பணத்தை ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து அந்த நிறுவனம் திவாலானால் அது கெட்ட அனுபவம். அந்தக் கெட்ட அனுபவத்தை, மற்றவர்களுக்கு போதித்து, நாம் செய்த தவறை அவர்களும் செய்யாமல் இருக்க உதவ வேண்டும். பிறரது ஆலோசனைப்படியும், புத்தகப் படிப்பின் மூலமும் அனுபவத்தை பெற முடியாது.
துன்பம் ஏற்படும்போதுதான் அதை எதிர்கொள்ளும் தைரியமும் உருவாகிறது. ஏற்கெனவே அனுபவம் பெற்றவர்கள் அதன் நன்மைகளையும், தீமைகளையும் பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். வாழ்க்கை என்பது மிகவும் சுருக்கமானது. அதில் கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் கனவு இறுதியில் மரணம்.
இந்தக் கொஞ்ச காலத்தில் நமது அனுபவத்தின் மூலமே எல்லாவற்றையும் உணர்ந்து திருத்திக் கொள்வதை விட, பிறரது அனுபவங்களின் மூலமே பல உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். பிறரது அனுபவம் நமக்கு அறிவாகட்டும்; நமது அனுபவம் பிறருக்கு அறிவாகட்டும்.

இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு வேலை:தமிழக அரசு வகுக்குமா?
குஜராத், கர்நாடகா, கேரள மாநில அரசுகளைப் போல, இளம் தொழில்நுட்பவியலர்களை
ஊக்குவிக்கும், ‘இன்குபேட்டர் சென்டர்களை’ தமிழக அரசு அமைக்க வேண்டும் என,
பொறியியல் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஐ.டி., தொழில் துறை:
தமிழகத்தில், 20 அரசு, 29 தனியார் பல்கலைகள், 570 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் இருந்து, ஆண்டுதோறும், 2 லட்சம் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். உலக பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட மந்தநிலை, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட தேக்கம் ஆகியவற்றால், இரண்டு ஆண்டுகளாக, பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்த முன்னணி நிறுவனங்கள், கல்லுாரிகளுக்கு வருவதும் குறைந்து விட்டது.
இதுகுறித்து, முன்னணி ஐ.டி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு புறம் தகவல் தொழில்நுட்பத் துறை, ‘டல்’ அடிக்கிறது. மறுபுறம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளுடன், மாணவர்கள் வருவதும் குறைந்து வருகிறது. இதனால், கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதை முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் குறைத்து விட்டன. தனியார் கல்வி நிறுவனங்கள், பி.இ., - பி.டெக்., படிப்பை நடத்தவே விரும்புகின்றன.
‘இன்குபேட்டர்’ சென்டர் :
இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, அதிக பணம் சம்பாதிக்க விரும்புகின்றன. ஆய்வாளர்களை உருவாக்குவதில் ஆர்வம் இல்லை. பி.இ., - பி.டெக்., முடித்த பின், புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் திறனை, மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். இதற்கு, ‘இன்குபேட்டர்’ சென்டர் உதவும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை பி.எஸ்.ஜி கல்லுாரி, திருச்சி என்.ஐ.டி., மதுரை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில், இன்குபேட்டர் சென்டர் என்ற பெயரில், சிறிய அளவிலான பயிற்சி மையங்கள் உள்ளன. இவை, தொழில்நுட்பம் சார்ந்த, இன்குபேட்டர் சென்டராக உருவாக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள, ஸ்டாண்போர்டு பல்கலை தரத்திற்கு இணையாக, பெங்களூருவில், இன்குபேட்டர் சென்டர் அமைக்க, கர்நாடக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளித்துள்ளது. கேரளாவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், இன்குபேட்டர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும்...:
ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போதே, இளம் பொறியாளர்களை ஊக்குவிக்க, அறிவியல் நகர் உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு சார்பில், இளம் தொழில்நுட்பவியலர்களை ஊக்குவிக்கும் இன்குபேட்டர் சென்டர் இல்லை.இவற்றை உருவாக்க, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, 5 கோடி ரூபாய் வரை வழங்க தயாராக உள்ளது. தமிழகத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தவும், புது கொள்கைகளை வகுத்து, அரசுக்கு சிபாரிசு செய்யவும், ‘தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் பார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி‘ உருவாக்கப்பட்டது.
பாதிக்காத துறை:
இதன் தலைவர், மாநில உயர்கல்விஅமைச்சர். துணைத் தலைவராக, முன்னாள் துணைவேந்தர் பழனிச்சாமி நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக் காலம் முடிந்து, கடந்த, 2 ஆண்டுகளாகியும், துணைத் தலைவர் பதவி
நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. கொள்கைகளை வகுக்க வேண்டிய கவுன்சிலே,
வழி நடத்த ஆள் இல்லாமல் தவிக்கிறது.சினிமா துறையினரை கவுரவிக்க, முதல்வர்
ஜெயலலிதா, அவ்விழாவில் பங்கேற்றதுடன், தமிழக அரசு சார்பில், 10 கோடி ரூபாய்
அளித்துள்ளார்.
உலகம் முழுவதும், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், பாதிக்காத துறை, சினிமா துறை தான்.அத்துறையை ஊக்குவித்த அரசு, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும், இளம் தொழில்நுட்பவியலர்களை ஊக்குவிக்க வேண்டும். ‘தமிழகத்தின் முக்கிய நகரங்களில்,இன்குபேட்டர் சென்டர் ஏற்படுத்த வேண்டும்’ என்பது, கல்வியாளர்கள் கருத்து.

Saturday, September 28, 2013
குற்றவாளிகள் இருவகை
''எங்கெங்கு காணினும் சக்தியடா...'' என்ற பாரதியின்
கூற்றை சற்று மாற்றி ""எங்கெங்கு காணினும் கொள்ளையடா...'' என்றால்
தற்காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும். அந்தளவுக்கு குற்றங்கள்
மலிந்துவிட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து
கேள்விக்குறியாகி வருகிறது. அவ்வாறு நாட்டில் நிகழும் குற்றங்களை ஆராயும்
போது குற்றவாளிகளை கல்வியறிவு பெற்ற குற்றவாளிகள் என்றும், கல்வியறிவில்லாத
குற்றவாளிகள் என்றும் வகைப்படுத்த முடிகிறது.
கல்வியறிவற்ற குற்றவாளிகள் பெரும்பாலும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கொலை உள்ளிட்ட நேரடியான குற்றச் சம்பவங்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய குற்றங்களை அடையாளம் காண்பதும், தடயங்களை வைத்து குற்றவாளிகளைப் பிடிப்பதும் காவல் துறைக்கு எளிதான காரியமாகும். தவிர, தண்டனை பெற்று திரும்பும் அந்தக் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிப்பதிலும் அவ்வளவு சிரமம் இருப்பதில்லை.
ஆனால், கல்வியறிவு பெற்ற குற்றவாளிகள் மேற்கொள்ளும் குற்றங்களை அடையாளம் காண்பதே காவல் துறைக்கு சவாலாக உள்ளது.
குறிப்பாக, சமீபகாலமாக நடைபெற்று வரும் நெட் பேங்கிங் மோசடி, ஏடிஎம் கொள்ளை, அரசாங்க ஊழல்கள் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.
இத்தகைய குற்றங்கள் அடையாளம் காணப்பட்டாலும் குற்றம் புரிந்தவர்களை கண்டுபிடிப்பதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதும் மலையைக் கட்டி இழுப்பதற்குச் சமமான செயலாகும்.
காரணம், கல்வியறிவு பெற்ற அந்தக் குற்றவாளிகளுக்கு சட்ட நுணுக்கங்களும், சட்டத்திலுள்ள ஓட்டைகளும் தெரிந்திருப்பதுடன், அதிகாரம் படைத்தவர்களாக அல்லது அதிகார வரம்பில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பர்களாக உள்ளதால், சட்டத்திலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ள முடிகிறது அல்லது சட்டத்தை வசப்படுத்தி வழக்குகளை காலம் கடத்துவதும் நடந்து வருகிறது.
அந்த வகையில், கல்வியறிவில்லாத குற்றவாளிகள் மேற்கொள்ளும் திருட்டு, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களைவிட கல்வியறிவு பெற்றவர்கள் மேற்கொள்ளும் பொருளாதாரக் குற்றங்களாலேயே மனித வளம் உள்பட நாட்டின் அனைத்து வளங்களும், எதிர்காலமும் சீரழிக்கப்படுகின்றன. இத்தகைய குற்றங்களைக் கண்டுபிடித்து தடுக்கும் பொறுப்பைக் காவல் துறையிடம் மட்டும் ஒப்படைத்துவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வது என்பது சரியல்ல.
ஜனநாயக உரிமைப்படி இந்தியக் குடிமகன் ஒருவர் நாட்டின் எந்த மூலையிலும் வியாபாரம், தொழில் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தொழில்புரிபவர்கள் தனது எல்லையை மீறி பிறரின் செல்வத்தைச் சுரண்டும் போது மட்டுமே காவல் துறை உள்ளே வர முடிகிறது. அதுவரை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் அமைப்பாக மட்டுமே காவல் துறை இருக்க வேண்டியுள்ளது.
இதற்கு அண்மையில் நடைபெற்ற ஈமு கோழி பண்ணை மோசடியை உதாரணமாகக் கொள்ளலாம்.
அப்படியென்றால் இத்தகையக் குற்றங்களை எப்படித்தான் தடுப்பது? இந்தக் கேள்விக்கு "வருமுன் காப்போம்' என்ற வாசகமே சிறந்த பதிலாகும்.
கல்வியறிவு பெற்றவர்கள் குற்றங்கள் செய்த பிறகு அவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதைவிட அவர்களை குற்றம் செய்யவிடாமல் தடுப்பதே சாலச் சிறந்ததாகும். இதைச் செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசிரியரிடமும், பெற்றோரிடமுமே உள்ளது.
தங்களது குழந்தைகள் மற்றும் தங்களிடம் படிக்கும் குழந்தைகள் வளர்ந்து நாட்டுக்கு உரிய பங்களிப்பை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்களும், பெற்றோரும் முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் வளரும் போதே நாட்டில் நிகழ்த்தப்படும் குற்றங்கள், அதனால் மனித வளம் உள்பட நாட்டின் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இதன் பின்விளைவுகள் குறித்து மிகத் தெளிவான அறிவை ஏற்படுத்திட வேண்டியது அவசியம்.
தவிர, உழைப்பு, சேமிப்பு, குடும்ப முறைகளின் மகத்துவத்தையும் சொல்லி வளர்ப்பதால் மட்டுமே படித்த குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியும்.

பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை
பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை, மூன்று நிறங்களில்
காணப்படுகிறது. சிவப்பு, பச்சை, கறுப்பு, என நாட்டிற்கு ஏற்றவாறு நிறங்கள்
மாறுபடுகின்றன.
இந்த பழத்தில் வைட்டமீன் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து,
பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதன் நிறம் கண்களை கவரும்
வகையிலும், சாப்பிடுவதற்கு விரும்பதக்கதாகவும் இருக்கின்றது.
திராட்சை பழத்தில் இருந்து மருந்து, ஒயின், கிரேப் சீட் எண்ணெய்,
சாக்லேட், ஜூஸ் என பலவற்றை தயாரிக்கலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள்,
ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமீன் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்கி ஆரோக்கியமாக
வைக்க உதவுகின்றது.
இப்பழத்தை உண்பதால்.....
* உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
* பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
* திராட்சைப் பழத்துடன் மிளகை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, நாக்கு வறட்டுதல் நீங்கும்.
* உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கு திராட்சைப் பழம் ஏற்றது.
* திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர மாதவிடை
கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு சிறந்த
மருந்தாகும்.
* கண்பார்வையை அதிகரிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், சிறுநீரக பிரச்னையை அகற்றவும் இது பயன்படுகிறது.
* இளம் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்னைக்கு, இதன் சாறு எடுத்து
தடவினால் விரைவில் பரு கொட்டிவிடும். முகத்தில் ஏற்படும் கருவளையத்தை
போக்கவும், தோல் வியாதியை கட்டுப்படுத்தவும் திரட்சை பயன்படுகிறது.
திரட்சைப்பழம் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது. ஆகவே தினமும் இதை உண்டு வந்தால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம்
Friday, September 27, 2013
குலையலாமா குடும்ப அமைப்பு?
நமது தமிழ்நாடு 1,30,000 சதுர கிலோ மீட்டர்
நிலப்பரப்பையும் 7 கோடியே 21 லட்சம் மக்கள் தொகையையும் கொண்டது.
தமிழ்நாட்டின் அடிப்படை ஆதாரமாக இருப்பது சுமார் 1 கோடியே 84 லட்சம்
குடும்பங்கள்தான். மிக முக்கியமான இந்த அடிப்படையைச் சிதைக்கும் ஆபத்துகளை
யாரும் இப்போது அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை; குடும்பம் எனும் அமைப்பின் தேவை
அழுத்தமாக உணரப்படவும் இல்லை.
மேலை நாடுகளுக்கும் நமது நாட்டுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு, நாம் குடும்பத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம்தான். மேலை நாடுகளில் தனி மனிதர்களே முதன்மையானவர்கள். ஆனால், நம்முடைய சமூகம் அப்படி அல்ல. பாரம்பரியமாகவே நமது குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை கொண்டு வாழ நாம் கற்றிருக்கிறோம்.
உலகின் பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம் முதன்மையானதாக இல்லை. ஆனால் வெளிநாடுகளில் சம்பாதித்து, தன் நாட்டிற்கு பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர்கள் நமது இந்தியர்கள்தான். 2010-ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பிய பணம் மூன்று லட்சம் கோடி ரூபாய் என்கிறது புள்ளிவிவரம். இது அரசாங்கம் நீட்டி முழக்கும் நேரடி அன்னிய முதலீடுகளைவிட அதிகமானதாகும்.
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை'
என குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இப்படி, காலம் காலமாக நாட்டின் வளமாகவும், அடிப்படையாகவும் இருந்துவரும் குடும்ப அமைப்பு முறை தற்போது பெரும் ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது.
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப்படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும் குடும்பம்தான். குடும்பத்தை எதற்காக இயற்கையான அமைப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அது காலம் காலமாக இருக்கிறது. அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்தே குடும்பம் இருக்கிறது.
சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், சமூக ஒற்றுமை என எல்லாமும் குடும்பத்தினால்தான் கற்பிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பணம், பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான தேவைகளை குடும்பம்தான் நிறைவு செய்கிறது. குறிப்பாக குழந்தைகளும், முதியோரும் குடும்பத்தின் ஆதரவில்தான் வாழ்கிறார்கள்.
பொருளாதார உற்பத்திக்கு அடிப்படையாக இருப்பது குடும்பம்தான். வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்குவதில் குடும்பங்கள்தான் முன்னிலையில் உள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் இடமும் குடும்பம்தான். எனவே நாட்டின் ஒட்டுமொத்த பொளாதாரமும் குடும்பத்தையே மையமாக வைத்தே இயங்குகிறது.
உலக அமைதி, வறுமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என நல்ல இலக்கு எதை எடுத்துக் கொண்டாலும் அதன் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம்தான்.
1948-ஆம் ஆண்டு உலகம் ஏற்றுக்கொண்ட முக்கியமான மனித உரிமை ஆவணமான பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) குடும்பத்தின் தேவையை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. குடும்பம் என்பது இயற்கையான மற்றும் சமூகத்தின் அடிப்படைக் குழுவாக இருக்கிறது; அரசாலும் சமூகத்தாலும் பாதுகாக்கப்படும் உரிமையை குடும்பம் பெற்றிருக்கிறது ('The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State') என்று கூறியுள்ளது.
குழந்தை வளர்ப்பும், கல்வியும் பெருமளவுக்கு குடும்பத்தின் பணிகளாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்த முதல் பத்தாண்டுகளில் எல்லோருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்கிற அரசியல் சாசனக் கடமையை இன்று வரை அரசாங்கங்கள் தவறவிட்டு வரும் நிலையில், குடும்பங்களே அந்தக் கடமையை சுமந்து வருகின்றன. மேலை நாடுகளில் இதுபோன்ற பொறுப்புகளை பெருமளவுக்கு அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன.
குழந்தைகளின் கல்விக்காக செலவிடுதல் மட்டுமின்றி, அவர்களை பொறுப்பாக கவனித்து கல்வி கற்பிப்பதிலும், அவர்களது திறனை வளர்ப்பதிலும் குடும்பத்தினர் பெரும் பங்கினை ஆற்றுகின்றனர். எனவே, தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் குடும்பமே பெரும் பொறுப்பை வகிக்கிறது எனக் கொள்ளலாம்.
மருத்துவத்திற்காக குடும்பங்களே அதிகம் செலவிடுகின்றன. இந்தியாவில் மருத்துவத்திற்காக செலவிடப்படும் பணத்தில் 90 விழுக்காட்டிற்கு மேல் குடும்பத்தின் செலவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மருத்துவ செலவுகள் அரசின் கடமையாக இருக்கும்போது, நம் நாட்டில் அது குடும்பத்தின் கடமையாக விடப்பட்டுள்ளது.
இப்படியாக கல்வியிலும் மருத்துவத்திலும் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் இங்கு குடும்பங்களே சுமக்கின்றன. குடும்ப அமைப்பு சிதையுமானால் இவை எல்லாம் அரசின் பொறுப்பாக மாறும். அத்தகைய பொறுப்புகளை ஏற்கும் நிலையில் நம்முடைய அரசுகள் இல்லை.
இங்கு பொருளாதாரம், சமூக வாழ்க்கை, பாதுகாப்பு, பண்பாடு எல்லாமும் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடும்ப அமைப்பின் அச்சாணியாக இருப்பது திருமணம். எனவே, திருமணத்தை இரு நபர்களின் தனிப்பட்ட விடயமாக மட்டுமே பார்க்க முடியாது.
அண்மைக் காலங்களில் மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்ற பாலியல் சுதந்திரம், திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களை ஊக்குவித்தல் என்பன தமிழ்நாட்டில் பேசப்படுவதன் வாயிலாக குடும்ப அமைப்புக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (Organisation for Economic Co-operation and Development) 34 முன்னேறிய நாடுகள் இணைந்துள்ளன. ஓ.இ.சி.டி நாடுகள் எனப்படும் இந்த நாடுகள் பெரும்பாலான பாலியல் சுதந்திரக் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. குடும்பத்தை விட தனி நபர்களின் மகிழ்ச்சி முக்கியம் என கருதும் இந்த நாடுகளில் குடும்பங்களின் அழிவால் நேர்ந்துள்ள கேடுகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க முடியும்.
ஓ.இ.சி.டி நாடுகளில் 25 முதல் 49 வயதுள்ள பெண்களில் 20 விழுக்காட்டினர் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதையே நாகரிகம் என்று கருதுவதால் இப்போக்கு நேர்ந்துள்ளது. இந்த நாடுகளில் திருமணங்கள் நடைபெறும் அளவு குறைந்து விட்டது. எத்தனை திருமணங்கள் நடக்கின்றனவோ, அதற்கு இணையான அளவில் விவாகரத்துகள் நடப்பதும் இயல்பானதாகிவிட்டது. ஆக, திருமணமான கணவன் - மனைவி கடைசி வரை இணைந்து வாழ்வது அங்கு அரிதான ஒன்றாகிவிட்டது.
திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதும் அந்த நாடுகளில் இயல்பானதாக ஆகிவிட்டது. வாரக் கடைசி நாள்களில் மட்டும் சேர்ந்து இருப்போம் - ஆனால் தனித்தனி வீடுகளில் வாழ்வோம் - என்கிற வகையில் திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறை அங்கெல்லாம் மிக அதிகமாக உள்ளது. இதனால் திருமண பந்தத்திற்கு வெளியே குழந்தை பெறும் அளவு மிக அதிகமாகிவிட்டது.
ஓ.இ.சி.டி நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் திருமணம் செய்யாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளின் அளவு 1980-ஆம் ஆண்டில் 11 விழுக்காடாக இருந்தது. இது 2007-ஆம் ஆண்டில் 33 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ஒற்றைப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, திருமணம் செய்யாத பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, தாயோ தந்தையோ வேறொருவரைத் திருமணம் செய்வதால் மாற்றுப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது போன்ற துயரம் மிகுந்த மனச்சூழலில் குழந்தைகள் வளரும் போக்கு அங்கு அதிகமாகிவிட்டது.
தனது இயற்கையான பெற்றோருடன் வாழும் குழந்தைகள் மற்ற மாணவர்களைவிட அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர். நல்ல வேலைகளில் அமர்கின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் இவர்களிடம் குறைவாகவே இருக்கிறது. திருமண பந்தத்திற்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் இந்த விடயங்களில் கணிசமாக மாறுகின்றனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவிடும் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் பணத்தில் முக்கால் பங்கு ஒற்றைப் பெற்றோருக்கும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோருக்கும் செலவிடப்படுகிறது.
அதாவது மேலை நாடுகளின் அரசாங்கத்தின் மிகப்பெரிய செலவு என்பது குடும்ப அமைப்பு மற்றும் திருமணத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சமாளிக்கவே செலவிடப்படுகிறது.
குடும்பம், திருமணம், பாலியல் உரிமை போன்ற விடயங்களில் மேலை நாடுகள் என்னென்ன தவறுகளைச் செய்தனவோ, அதே தவறுகளை நாம் செய்துவிடக் கூடாது.
காதல் திருமணங்களை எதிர்க்கக் கூடாதுதான். ஆனால் காதல் என்கிற பெயரில் சிறுவர், சிறுமிகளின் வாழ்க்கை சீரழிந்து போவதையும் அனுமதிக்கக் கூடாது.
பதின்வயது எனப்படுகிற 20 வயதுக்கும் கீழான காலம் மனித வாழ்வில் மிக முக்கியமான காலம் ஆகும். குழந்தைகள் அமைப்பான யூனிசெப் இதனை "வாய்ப்புகளின் காலம்" என அழைக்கிறது. ஏனெனில் இந்த வயதுதான் கல்வி, தொழில் திறமைகள் போன்ற எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொள்ளும் வயதாகும்.
"ஹார்மோன் இம்பேலன்ஸ்" எனப்படும் வகையில் மனம் எளிதில் அலைபாய்ந்து தடம்மாறும் வயதாகவும் பதின்வயது இருக்கிறது. எனவே, அவர்கள் வாழ்வில் வழிதவறிப் போய்விடாமல் காக்கும் கடமை சமூகத்திற்கு உண்டு.
குடும்ப வன்முறை, பெற்றோர், கணவன், உறவினர் என சொந்தங்களினால் மனித உரிமை மீறல்கள் நடப்பது - என குடும்பம் என்கிற அமைப்புக்குள் இருக்கின்ற கேடுகள் களையப்பட வேண்டும். ஆனால், அதற்காக அந்த அமைப்பையே சிதையச் செய்யும் காரியங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்வது பெருங் கேடுகளையே விளைவிக்கும்.
காதல், திருமணம், தலைமுறையினருக்கு இடையேயான உறவு, குழந்தைகள் மற்றும் முதியோரின் நலன், சமூக உறவுகள், பண்பாடு என பல நிலைகளிலும் குடும்ப அமைப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
குடும்பம், அரசுக்கு முந்தையது; அரசை விட மேலானது; இயற்கையானது. குடும்ப அமைப்பை அழியாமல் காப்பாற்றி அடிப்படை மனித உரிமைகளையும், ஜனநாயகப் பண்பையும் போற்றி வளர்ப்பதில் குடும்பங்கள் முக்கிய பங்கினை ஆற்ற அனைவரும் வழிவகுக்க வேண்டும். இதுவே இன்றைய உடனடித் தேவையாகும்.
கட்டுரையாளர்: நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி.

சமூக இணையங்களில் வேகமாக பரவும் மனித உணர்வு ‘கோபம் சீன ஆய்வில் தகவல்!
உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை
ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித
உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபலயமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர்.
குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள்.
உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டர் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள், முதலில் நாடுவது டிவிட்டர் போன்ற இணையதளங்களைத்தான்.
இப்படிபட்ட உலக சமூக இணையதளங்களில் ஒன்றுதான், வே-போ. மேற்குலகின் டிவிட்டர் போன்றது சீனாவின் இந்த வே-போ. ஐநூறு மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள்.
நூறு மில்லியன் கருத்துகள் தினமும் இதில் பதிவாகின்றன. தமது சீன நாட்டின் இந்த வே-போ இணையதளம் பற்றி, தலைநகர் பீஜிங்கிலுள்ள பே ஹாங் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகியுள்ளன.
வே-போ பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம், ‘எமோட்டிகான்’ என்கிற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கேலிச்சித்திரப் பிரயோகம் ஆகியவற்றை ஆராய்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வே-போவில் வெளியிடப்படும் கருத்துக்களை கோபம், சோகம், குதூகலம், விரக்தி என்று நான்கு பிரிவுகளாக பிரித்துத் தொகுத்தார்கள்.
அவற்றை அவர்கள் ஆய்வு செய்தபோது, கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பரிர்ந்து கொள்ளப்பட்டதை கண்டறிந்தார்கள். இதற்கு காரணம், கோபக்கார பதிவர்களுக்கு கோபக்கார நண்பர்கள் ஏரளமாக இருப்பதாகக்கூட இருக்கலாம்.
சீனாவிலுள்ள சமூகப் பிரச்சினைகள், வெளிநாடுகளுடனான ராஜந்தந்திர தகராறுகள், இவை போன்ற தகவல்கள் வே-போ தளத்தில் ஆத்திரத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று ஆய்வுகள் காட்டின.
2010 ஆம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு லட்சம் வே-போ பாவனையாளர்களின் எழுபது மில்லியன் பதிவுகள் ஆராயப்பட்டு இந்த முடிவுகள் எட்டப்பட்டன.
இதேபோல, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சிலர் கண்டுபிடித்துள்ள ஒரு கணினி தொழில்நுட்பம் ட்விட்டர் தளத்தின் மூலம், ஒரு நாட்டின் உணர்வை அறிய முடிகிறது, ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவர் ஆத்திரம் கொண்டிருந்தால், அதே ஒத்த கருத்தை உள்ளவர்களுடன் அவர் இணைவது இயற்கைதான் என்று ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

குறுஞ்செய்தியால் குழம்பும் மொழியறிவு
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில்
ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ -
மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில்
எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.
இரண்டு மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதியிருந்தனர். அடிப்படையான ஒரு விஷயத்தில் இவர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால் இவர்களது ஆய்வு எப்படி இருக்கும் என்று எண்ணினேன். நம்முடைய பிரதமரும், ஜனாதிபதியும் உயர்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் குறித்து கவலைப்பட்டு கருத்துகளை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரத்தில் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர் சிலரிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதிக் கேட்டேன். அவர்களில் பெரும்பாலோர் பிழையின்றி எழுதியிருந்தனர்.
ஆய்வாளர்கள் இவ்வாறு தவறாக எழுதியதன் காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்தேன். இவர்களிடம் எழுதி வாங்கும்போது கவனிக்க முடிந்த விஷயம் ஒன்று உண்டு. இவர்கள் அனைவரிடமும் கைப்பேசி உள்ளது. மாணவர்களுக்காகவே பல்வேறு சலுகைகளையும் கைப்பேசி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவர்களையும் கைப்பேசிகளையும் பிரிக்க முடியாத அளவு பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர். அதன் காரணமாகவே இவர்கள் இப்படி மாறிப்போயுள்ளதாக முடிவுக்கு வந்தேன்.
மாணவர்கள் அனைவரும் குறுஞ்செய்தியை விரைவாக டைப் செய்து அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படி குறுஞ்செய்தி அனுப்பும்போது பிழைபடவே டைப் செய்து அனுப்புவதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளனர். மொழிநடை, இலக்கணம், வார்த்தைகள் இவற்றைப் பற்றிய புரிதலோ, அக்கறையோ இல்லாமல் மனதில் தோன்றியதை அடித்து அனுப்பும் பழக்கத்தை இவர்கள் கொண்டுள்ளனர்.
இம்மாணவர்கள் தவறாக எழுதியுள்ளது குறித்து எந்த ஒரு வருத்தமும்படாமல், தவறாக எழுதுவதெல்லாம் ஒரு விஷயமா என்று கேள்விகளை வேறு முன்வைக்கின்றனர்.
குறுஞ்செய்தி அனுப்பும் மாணவர்கள் மொழிநடை குறித்துக் கவலைப்படுவதுமில்லை. பிழைகளைக் குறித்தும் அறிந்திருக்கவுமில்லை. இதன் காரணமாக தவறான ஒரு நடை தமிழகத்தில் மாணவர்களிடத்தில் பழக்கத்தில் வேரூன்றியுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் பிழைபட எழுதும் பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டனர். இதிலிருந்து இவர்களை மீட்க வேண்டியது கல்வியாளர்களின் கடமையாக உள்ளது.
இந்த ஆய்வாளர்களே வருங்கால ஆசிரியர்கள் - பேராசிரியர்கள். இவர்கள் அனைவரும் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருபவர்கள்.
இவ்வாறு பிழைபட பயிலும், பிழையாக எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த ஆய்வாளர்கள் ஆசிரியர்களாக மாறும்போது கல்வியின் தரம் இன்னும் குறைந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆகவே, இதனை ஆரம்பத்திலேயே தடுக்க வேணடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய தேவை இப்போது இல்லை. ஏனெனில் கைப்பேசி நிறுவனங்கள் பேசுவதற்குக்கூட குறைந்த கட்டணங்களையே நிர்ணயித்துள்ளன. அனைவரையும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் தொலைத்தொடர்பு நம்மிடையே உள்ளது. மின்னஞ்சல் சர்வ சாதாரணமாக பழக்கத்தில் உள்ளது. அதில் இலக்கண முறைப்படி அனுப்ப பழகிக் கொள்வோம்.
ஆகவே, குறுஞ்செய்தி அனுப்பும் வழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து, நாம் பின்பற்றும் பிரிட்டிஷ் ஆங்கிலத்தைப் பிழையின்றி, இலக்கண முறைப்படி எழுதப் பழகி நாமும் முன்னேறி நாட்டின் கல்வித்தரத்தையும் முன்னேற்றுவோம்.
அறிவியல் வளர்ந்து வரும் இன்றைய காலச்சூழலில் மொழித்தூய்மை பேணப்பட வேண்டும். 20 வருடங்களுக்கு மேலாக பேசிய எழுதிய வார்த்தைகளை தவறாக எழுதும் பழக்கத்தை இந்த குறுஞ்செய்தி கலாசாரம் கொண்டு வந்துவிட்டது.
இதிலிருந்து மாணவ சமுதாயத்தை மீட்டெடுத்து சரியான மொழிநடையில் எழுதும் பழக்கத்தை ஊக்குவித்து கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தல தோனியின் புதிய அவதாரம்
தோனியின் புதிய "ஹேர்-ஸ்டைல்' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய அணி கேப்டன் தோனி, 32. "ஹெலிகாப்டர் ஷாட்' உட்பட பல புதிய
முறைகளை பேட்டிங்கில் அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
பெக்காம் போல "ஹேர் ஸ்டைலையும்' அடிக்கடி மாற்றுவார். கடந்த 2004ல்
அறிமுகம் ஆன போது கழுத்து வரை கூந்தல் வைத்திருந்தார். இதனை அப்போதைய
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் பாராட்டினார். பின் "கிராப்' வெட்டிய
தோனி, 2011ல் உலக கோப்பை வென்ற போது, மொட்டை அடித்துக் கொண்டார்.
இவர் ஒவ்வொரு முறை ராஞ்சிக்கும் வரும் போது, இங்குள்ள கயா சலூனில் தான்
முடி வெட்டுவார். அப்போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள், கடைக்கு வெளியே கூட,
இவர்களை கட்டுப்படுத்துவது, பெரும் சிரமமாகி விடும்.
கடந்த 2006ல் இங்கு இருந்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார், " தயவு
செய்து முடிவெட்ட செல்லும் போது, எங்களிடம் சொல்லுங்கள், அப்போது தான்
பாதுகாப்பு தரமுடியும்,' என்றாராம்.
தற்போது, சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில், "மொஹாக்'
பாணியில்(கீரிப்புள்ள தலை) இருபக்கம் தலைமுடியை எடுத்து விட்டு, நடுவில்
மட்டும் நீளமாக முடி வைத்துள்ளார்.
தோனியின் பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சால் பட்டாச்சார்யா
கூறுகையில்,"" தோனியை பள்ளி நாட்களில் இருந்தே கவனித்து வருகிறேன்.
அப்போதே, மற்றவர்களை விட வித்தியாசமாகத் தான் தலைமுடி வைத்திருப்பார்.
புதிய "மொஹாக்' முறை, தோனியின் நான்காவது "ஸ்டைல்' ஆக உள்ளது,'' என்றார்.
தல தோனி சூப்பர்: அதிவேக அரைசதம் விளாசினார்: சென்னை அணி அசத்தல் வெற்றி
சாம்பியன்ஸ் லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிவேக அரைசதம்
கைகொடுக்க, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
டேரன் சமியின் அரைசதம் வீணானது.
ராஞ்சியில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'
தொடருக்கான "பி' பிரிவு லீக் போட்டியில், இந்தியாவை சேர்ந்த சென்னை,
ஐதராபாத் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் ஷிகர் தவான்,
"பீல்டிங்' தேர்வு செய்தார்.
ரெய்னா அபாரம்: சென்னை அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி
காத்திருந்தது. ஸ்டைன் "வேகத்தில்' முரளி விஜய் "டக்-அவுட்' ஆனார்.
மைக்கேல் ஹசி (23) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த பத்ரிநாத்
(13) ஏமாற்றினார். பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி ஆட்டத்தை
கையில் எடுத்துக் கொண்டது. பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய ரெய்னா,
38வது பந்தில் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 60 ரன்கள்
சேர்த்த போது, ஸ்டைன் பந்தில் ரெய்னா (84 ரன், 57 பந்து, ஒரு சிக்சர், 9
பவுண்டரி) வெளியேறினார்.
தோனி அதிரடி: மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, பெரேரா
வீசிய 18வது ஓவரில் 5 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து, 16 பந்தில்
அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய இவர், டேரன் சமி வீசிய கடைசி
ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார்.
சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தோனி (63
ரன், 19 பந்து, 8 சிக்சர், ஒரு பவுண்டரி), டுவைன் பிராவோ (6) அவுட்டாகாமல்
இருந்தனர். ஐதராபாத் சார்பில் ஸ்டைன், டுமினி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
நல்ல துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத்
அணிக்கு பார்த்திவ் படேல், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம்
கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த போது, பார்த்திவ் படேல்
(38) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த டுமினி, ரெய்னா பந்தில் "டக்-அவுட்'
ஆனார். பொறுப்பாக ஆடிய ஷிகர் தவான் (48), அஷ்வின் "சுழலில்' அரைசத
வாய்ப்பை இழந்தார். டுவைன் பிராவோ "வேகத்தில்' திசாரா பெரேரா (12), ஆஷிஸ்
ரெட்டி (3) நடையை கட்டினர்.
அபாரமாக ஆடிய டேரன் சமி, ரவிந்திர ஜடேஜா வீசிய 15வது ஓவரில் மூன்று
சிக்சர் விளாசினார். இரண்டு முறை கண்டம் தப்பிய கரண் சர்மா (11), ஜாசன்
ஹோல்டர் பந்தில் சிக்கினார். ஹோல்டர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சமி,
24வது பந்தில் அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன.
மோகித் சர்மா வீசிய 20வது ஓவரில், 11 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஐதராபாத்
அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஹனுமா
விஹாரி (5), ஸ்டைன் (10) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில்
ஹோல்டர், பிராவோ தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ரெய்னா "500'
அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 84 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் இவர், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் 500 ரன்களை கடந்த மூன்றாவது
வீரரானார். இதுவரை இவர், 16 போட்டியில் 4 அரைசதம் உட்பட 518 ரன்கள்
எடுத்துள்ளார். முதலிரண்டு இடங்களில் டில்லி, நியூ சவுத் வேல்ஸ்
அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் (13 போட்டி, 556 ரன்கள், 2 சதம், ஒரு
அரைசதம்) மற்றும் மும்பை, டிரினிடாட் அணிகளுக்காக விளையாடிய போலார்டு (21
போட்டி, 521 ரன்கள், 3 அரைசதம்) உள்ளனர்.
16 பந்தில்
அதிரடியாக ஆடிய சென்னை அணி கேப்டன் தோனி, 16 பந்தில் அரைசதம் அடித்தார்.
இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' வரலாற்றில் அதிவேக அரைசதம்
அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக டிரினிடாட் அன்டு டுபாகோ
அணியின் போலார்டு, 2009ல் ஐதராபாத்தில் நடந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு
எதிராக 18 பந்தில் அரைசதம் அடித்தார்.
இரண்டாவது முறை
மொத்தம் 202 ரன்கள் குவித்த சென்னை அணி, சாம்பியன்ஸ் லீக் அரங்கில்,
இரண்டாவது முறையாக 200 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்தது. முன்னதாக 2010ல்
செஞ்சுரியனில் நடந்த வயம்பா அணிக்கு (200 ரன்கள்) எதிராக இந்த இலக்கை
எட்டியது. தவிர இம்முறை, 200 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த இரண்டாவது அணி
என்ற பெருமை பெற்றது. முன்னதாக, ஒடாகோ வோல்ட்ஸ் அணி 242 ரன்கள்
(எதிர்-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்) எடுத்தது.
பீல்டிங் சொதப்பல்
நேற்று சென்னை அணியின் பீல்டிங் படுமோசமாக அமைந்தது. சுலப கேட்ச்
வாய்ப்புகளை சுரேஷ் ரெய்னா, மைக்கேல் ஹசி, ஜாசன் ஹோல்டர், டுவைன் பிராவோ
உள்ளிட்டோர் கோட்டைவிட்டனர்.
Tuesday, September 24, 2013
முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!
முதுகுவலி
முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது
பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால்
அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?
முதுகில் வலி உருவாக என்ன காரணம்?
வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?
தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு
உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின்
டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும்,
முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும்.
முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள்
மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம்,
இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.
முதுகெலும்பு, ஒன்றுடன்
ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7
எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு
பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5
எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும்
(சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின்
அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள்
அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும்.
எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.
இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது.
முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின்
நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள்
முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல
முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”
எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும்
இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25
வயது வரை மிதமாகவும் இருக்கும்.”
முதுகெலும்பின் அமைப்பில்
ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ,
செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால்
முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட
பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”
வீடு பெருக்குதல், துணி
துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி
ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு
வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த
பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ
ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில்
தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும்
பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”
கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில்
ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது
கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம்
சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை
வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக
சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு
கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”
முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல்
இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ
அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய
இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன்
அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.
ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும்,
எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு
ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.
ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ,
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில்
போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி
குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும்
ஏற்படலாம்.
ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது
வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து
முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை
பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு
ஏற்படுகிறது.
ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே
ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ்
போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”
மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு
அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை
தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு
பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க்
அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள
நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”
முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ,
டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம்.
பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை,
கைகளில் வலி பரவலாம்.
அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால்
அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும்
சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”
முதுகெலும்பின் அடர்த்தி
குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க
முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ்
பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”
கழுத்து வலி மற்றும்
முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு
மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி
கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற
கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும்
சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம்
வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”
உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை
எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம்
பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள்
சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை.
மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை
செய்யப்படவில்லை.
அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ
வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள்
கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”
6 Things to Keep Your Computer Fast Forever
You
bought a Core2 Duo computer few months ago and now it works like it has
Pentium 3 processor. Well, there are few thing you can do to keep it as
fast as you bought it few months ago.
1. Install Less Applications on your Computer
------------------------------ ------------------
An Application is free doesn’t mean you have to install it on your PC.
Few people are obsessed with installing useless Applications to their
Computer, even if they are never going to use it. It takes space in your
Computer and east memory. Better to uninstall all the unwanted
applications.
2. Defragment Your Hard Disks
------------------------------ ----
You keep copying, moving and deleting files on your Hard Drive. This
makes your Hard Drives unorganized. Defragmentation will remove the
spaces and organize your HD to make to respond more faster. This
increases the Speed of your PC.
3. Delete Temporary Internet Files
------------------------------ --------
You browse hundreds of websites everyday, thee are various things which
are downloaded to your computer locally. like cookies, image files etc.
So that the next time you Open the same website, you will get a
personalized experience. But this also affects the performance of your
PC. You should remove them on a periodically.
4. Restart Your Computer Daily
------------------------------ ---------
Few guys use the easy method of closing down their Computers, They
either put it ot standby or Hibernate it. This also affects your PC as a
proper sleep is important to everybody. Even to Computers.
5. Keep Your OS Updated
------------------------------ --------
not every OS is perfect, they get updates where smalls bugs are fixed.
So, if you though updates are not that important, you are mistaken,
every update is going to fix and issue in the OS which also affect the
Performance of your PC. Always turn the automatic updates on.
6. Control Automatic Startup of Applications
------------------------------ ---------------------
There are a bunch of applications which automatically start at the time
of Computer startup, they increase the boot time of your Computer.
Control the startup of application in your PC and reduce the boot time.
If you follow only these 6 things, your Computer will always be the
same. You can use CCleaner also to keep your PC run fast and smooth. And
please share this info to your friends
ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன...??
1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு
3. நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு
4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்
5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்
விலங்கிடலாமா..?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான
குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.
கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது
கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24
மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும்
பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக
ஆஜர் செய்யப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபரை 24 மணி
நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே
அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.
குற்றவியல் நீதித்துறை
நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி
நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்...
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்
6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?
முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !
இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.
சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.
via ::: உடுமலை.சு.தண்டபாணி.

Sunday, September 22, 2013
மத்தாப்பூ விமர்சனம்
‘தினந்தோறும்’ நாகராஜின் இயக்கத்தில் ‘தினந்தோறும்’ படத்தின் வெற்றிக்கும்
நீண்ட இடைவெளிக்கும் பின் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ‘மத்தாப்பூ’.
ஆண்களையே பிடிக்காத நாயகி காயத்ரி, அவரையே சுற்றிவரும் அறிமுக நாயகர் ஜெயன். இவர்களது காதலுக்கு இரு வீட்டு தரப்பும் சம்மதம் தெரிவித்தும் காயத்ரி காதலுடன் ஜெயனை பார்க்க மறுக்கிறார். அது ஏன்? அவருக்கு ஆண்களையே பிடிக்காத காரணம் என்ன? என்பதுதான் ‘மத்தாப்பூ’ படத்தின் மொத்த கதையும்! இறுதியில் ஆண்களை வெறுக்கும் காயத்ரி ஜெயனின் நற்குணங்களைக் கண்டு ஜெயனை காலித்தாரா? கரம் பிடித்தாரா?! என்பது க்ளைமாக்ஸ்!
புதுமுகம் ஜெயின், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ காயத்ரி, அம்மா, சின்னம்மா (!) கேரக்டரில் மாஜி நாயகிகள் ரேணுகா, கீதா, சித்தாரா, அப்பா, சித்தப்பா கேரக்டரில் கிட்டி, இளவரசு மற்றும் செஞ்சி, உதய், சங்கர்குருராஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படம் முழுக்க பவனி வருகிறது! கார்த்திக் என்னும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் புதுமுகம் ஜெயன் சூப்பர்ப்!
கே.வேலாயுதத்தின் பாடல்கள் இசை, சபேஷ் முரளியின் பின்னணி இசை, சி.ஆர்.மாறவர்மனின் ஒளிப்பதிவு, சி.கே.மகேஷின் படத்தொகுப்பு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் ‘தினந்தோறும்’ நாகராஜின் எழுத்து, இயக்கத்தில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘மத்தாப்பூ’ வெளிவந்திருந்ததென்றால், தமிழ் சினிமாவின் ‘காதல் பூ’வாக இருந்திருக்கும்! சற்றே காலதாமதமாக வந்திருப்பதால் இன்றைய இளைஞர்களுக்கு ‘காதுல பூ’வாக தெரிகிறது!
ஆக மொத்தத்தில் ‘மத்தாப்பூ’ - நிறைய காதல் பூ; கொஞ்சம் காதுல பூ’.

மூடர்கூடம் விமர்சனம்
‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில்
ஒருவராக நடித்தும் இருக்கும் திரைப்படம்தான் மூடர்கூடம். சிஷ்யருக்காக
இந்தப்படத்தை தனது ‘பசங்க’ புரடக்ஷன்ஸ் மூலம் வாங்கி வெளியிட்டும்
இருக்கிறார் பாண்டிராஜ் என்பது சிறப்பு!
‘மூடர்கூடம்’ படத்தில் கதை என்று பார்த்தால் பெரிதாக எதுவும் கிடையாது... ‘நான்கு முட்டாள் திருடர்களும், வாழ்க்கையை தொலைத்ததாக சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக துடிக்கும் ஒரு வசதியான குடும்பமும்!’’ என்பது மாதிரியான ‘ஜென்’ குட்டி கதைகள் போன்றதொரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும்!. ஆனால், இந்த கதையில் ஏகப்பட்ட முன்கதைகள், முழுக்கதைகளை(?) கலந்துகட்டி காமெடியாக கலர்புல்லாக ‘மூடர்கூடம்’ படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருக்கும் நவீன் ரொம்பவே துணிச்சல்காரர்தான்! ஆமாம் பின்னே, இதுமாதிரி இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது மாதிரி கதையை தைரியமாக இயக்கி, தரமாக தந்திருப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்!
கரடு முரடான முகபாவங்கள், உருவ அமைப்புகள், சில்லறை சேட்டைகளைக் கொண்ட வெள்ளை ராஜாஜ், நவீன் என்னும் நவீன், குபேரன் மற்றும் சென்றாயன் நால்வரும் வெவ்வேறு சில்லறை நோய்களுக்காக போலீஸ் ‘லாக்-அப்’பிற்கு போக, அங்கு நண்பர்களாகின்றனர். நால்வரும் சேர்ந்து, வெளியூருக்கு போக இருக்கும் வெள்ளையின் பணக்கார மாமா ஜெ.பி.யின் வீட்டில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி உள்ளே போகின்றனர். தன் பைனான்ஸ் கம்பெனி திவாலாகிவிட்டதாக பொய் கணக்கு காட்டி ஊரைவிட்டு குடும்பத்தோடு ‘எஸ்’ ஆக இருக்கும் ஜெயப்பிரகாஷ், சின்ன டைமிங் மிஸ்டேக்கால், இவர்களிடம் குடும்பத்துடன் சிக்கிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே, அப்பப்பப்பா.... அதைத்தான் எத்தனை நகைச்சுவையாக சீன் பை சீன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரின் மூட் தெரிந்து ராஜாஜ், ஓவியா, குபேரன், சென்றாயன், சிந்துரெட்டி, ஜெயப்பிரகாஷ், அனுபமாகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. இயக்குனர் நவீனும் நான்கு திருடர்களில் ஒருவராக ‘நச்’சென்று ‘டச்’ செய்கிறார். படத்தின் கதையைவிட படத்தின் பாத்திரங்களுக்கு அதிலும் அந்த விளையாட்டு பொம்மை உள்ளிட்ட பாத்திரங்களுக்கு சொல்லப்படும் முன்கதைகளும் முழு கதை(!)களும்தான் செம ஜோர்!
நடராஜன் சங்கரனின் மிரட்டலான பின்னணி இசையும், டோனிசேனின் பிரமாண்ட ஒளிப்பதிவும் நவீனின் ‘நச்-டச்’ வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்! நவீனின் எழுத்து, இயக்கத்தில் முன்கதை, பின்கதை, முழுக்கதை, கிளைக்கதை என்று ஏகப்பட்ட கதைகள் இடைச்செருகலாக படத்தில் இடம்பெறுவது என்னதான் சுவாரஸ்யம் என்றாலும் படத்தின் நீளத்தை வெகுவாக கூட்டிவிடுவதை மட்டும் இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்து மேலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். மற்றபடி மனிதர்கள் நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மூடத்தனமாக, முட்டாள்களாக நடந்துகொள்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் ‘மூடர்கூடம்’ தமிழ் சினிமாவில் ‘புதிய பாடம்!’

6 மெழுகுவர்த்திகள் விமர்சனம்
‘12பி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் எதிர்பார்த்த
இடத்தை இன்னமும் பிடிக்காமல் இருக்கும் கதாநாயகர் ஷாமுக்கு முன்னணி இளம்
ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடிக்க ஏதுவாக வெளிவந்திருக்கும் படம். ‘முகவரி’
படத்திற்குப்பின் எத்தனையோ படங்களை இயக்கி இருந்தும் தனக்கென சரியான ஓர்
இடத்தை பிடித்து வைத்துக்கொள்ளாத இயக்குநர் வி.இசட்.துரைக்கு சரியான ஒரு
இடத்தை பெற்றுத்தர வெளிவந்துள்ள திரைப்படம்... என ஏகப்பட்ட
எதிர்பார்ப்புகளை, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மேலாக பூர்த்தி
செய்யும்படியாக பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் வந்திருக்கிறது ‘6
மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் என்றால் மிகையல்ல!
இந்திய அளவில் ‘நெட்வொர்க்’ அமைத்து குழந்தை கடத்தும் கும்பலை பற்றிய கதைதான் ‘6 மெழுகுவர்த்திகள்’ மொத்த படமும்! குழந்தைகள் எதற்காகவெல்லாம் கடத்தப்படுகின்றன... எங்கெல்லாம் விற்கப்படுகின்றன... எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகின்றன என்னும் விஷயங்களை இதுவரை இந்திய மொழிப்படங்களில் இவ்வளவு விலாவாரியாக யாரும் சொல்லியிருப்பார்களா? தெரியவில்லை! அந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குநர் வி.இசட்.துரைக்கு இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என்னும் தேசிய விருதினை கொடுக்கலாம்!
‘6 மெழுகுவர்த்திகள்’ கதைப்படி, தங்கள் ஒற்றை ஆண் குழந்தையின் 6வது பிறந்த தினத்தின்போது கேக் எல்லாம் வெட்டிமுடித்தும் முடிக்காமலும் ஹாயாக குழந்தையுடன் மெரீனா பீச்சுக்கு போகிறது ஷாம்-பூனம் கவுரின் அழகிய சிறு குடும்பம்! அங்கு சின்னதாக ஒரு கவன பிசகலில் இருவரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேட, எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை! இவர்களின் கதறலை பார்த்துவிட்டு ஓடிவரும் சுற்றமும் நட்பும் கூறும் ஆலோசனையின்படி போலீசுக்கு போகின்றனர். முதலில் போக்கு காட்டும் போலீசும் பிறகு சமூக விரோதிகளை சட்டத்திற்கு தெரியாமல் அடையாளம் காட்டி அவர்கள் கேட்பதை கொடுத்து குழந்தையை மீட்டுக்கொள்ளும்படி ‘எஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன? குழந்தையைத் தேடி ஷாம், ஆந்திரா நகரி, வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என அவர்கள் கைகாட்டும் இடங்களுக்கு எல்லாம் போய் பல இடங்களில் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சில இடங்களில் ஆக்ஷனிலும் இறங்கி, 50 லட்சம் காசையும் கொடுத்து, குழந்தையை மீட்டாரா, இல்லை மீட்டெடுக்க முடியாது மாண்டாரா?! என்பது திக்திக்திக் க்ளைமாக்ஸ்!
ஷாம், ராம் என்னும் அப்பா கேரக்டரில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். அவரும் பூனம் கவுரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் ஏதோ படம் பார்க்கும் நாம், நமது குழந்தை செல்வத்தை தொலைத்துவிட்டு தேடுவது போன்றதொரு பிரமை, பயம், திகில் நம்முள் புகுந்துகொண்டு நம்மையும் ராம் என்னும் ஷாமாகவே மாற்றி குழந்தையை தேடவைக்கும் கதை ஓட்டமும் காட்சி பதிவுகளும் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தின் பெரிய ப்ளஸ்! ஷாம் தைரியமாக இருங்கள். இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருதுகளும் விழாக்களும் ஏராளம் காத்திருக்கிறது!
நாயகி பூனம் கவுர் லிஸியாக வாழ முற்பட்டிருக்கிறார். மற்றபடி ஷாம்-பூனம் ஜோடியின் நண்பர் குடும்பம் தவிர யாரென்றே தெரியாமல் போலீசுக்கு போகச்சொல்லி உதவ வரும் நபரில் தொடங்கி, போலீஸ் இன்ஸ், கான்ஸ்டபிள், கார் டிரைவர், போபால் மலையாளி வில்லன், கொத்தா பொட்டுவைத்த தாதா வரை எல்லோரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ குழந்தை கடத்தலில் சம்பந்தப்பட்ட கொடூரமானவர்கள். க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு உதவும் அந்த ‘பாயை’ தவிர மற்ற அனைவரும் மிக மோசமானவர்கள். ஒவ்வொரு படத்திலும் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களை காட்டும் நம் சினிமாக்காரர்களுக்கு சவுக்கடி தரும் விதமாக அந்த இஸ்லாமிய பெரியவரை நல்லவராக காட்டி குழந்தை கடத்துபவர்களும் தீவிரவாதிகள்தான்... என தங்கள் மதத்தினருக்கு ஆறுதலை தர முயன்றிருக்கிறார்கள் இயக்குநர் வி.இசட்.துரை, நாயகர் ஷாம், தயாரிப்பாளர் மீடியா இன்ஃபினிட்டிவ் நிஜாம் உள்ளிட்டவர்கள்! இவர்களின் முயற்சிக்கு ஸ்ரீகாந்த் தேவாவின் மிரட்டல் இசையும், கிருஷ்ணசாமியின் பிரமாண்ட ஒளிப்பதிவும் பக்க(கா)பலமாக இருந்து 6 மெழுகுவர்த்திகளை ஒளிரவைத்திருக்கின்றன.!
ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!

சொல்லித் தாருங்கள்...
அண்மைக்காலமாக, நாம் அடிக்கடி படிக்கும் செய்தி, பள்ளிக் குழந்தைகள்
கிணற்றில் அல்லது ஏரியில் விழுந்து இறந்தனர் என்பதாக இருக்கிறது. காவிரி
டெல்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு இடங்களில் இளம்
சிறார்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் பதினைந்துக்கும் மேல். பள்ளி
விடுமுறை நாள்களில் இச் சிறுவர்கள் மழைநீர் குட்டை, குளங்களில் விளையாடப்
போய், நீரில் மூழ்கி இறக்கின்றனர். தமிழகம் முழுவதும் இவ்வாறு நீரில்
மூழ்கி இறக்கும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவர்கள் நீச்சல்
பழகியிருக்கவில்லை என்பதுதான் இந்த மரணங்களுக்கு முதற்காரணம்.
மழைநீர் தேங்கிய குளம், குட்டைகளில் சிறுவர்கள் குளிக்க வேண்டாம் என்று
ஒரு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்த அறிக்கையும் பத்திரிகைகளில்
வெளியானது. விளையாடும் குழந்தைகளை வேண்டுகோளால் தடுத்துவிட முடியுமா என்ன?
கோடு போட்டு நிற்கச் சொன்னால் நிற்கின்ற வயதா அது? கத்திரியின் "நண்பகல்
நிலா'வில் கிரிக்கெட் விளையாடுகிற வயதல்லவா! நகர்ப்புறத்தில் வசிக்கும்
சிறார்களுக்கு மட்டுமே நீச்சல் தெரியாது; கிராமத்துச் சிறார்கள் தங்கள்
வயற்காட்டில் உள்ள கிணறுகள், ஓடைகளில் நீச்சல் பழகிவிடுவார்கள் என்கின்ற
பொதுவான எண்ணம் இன்று பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது. இன்றைய வாழ்க்கைச்
சூழல் மாறிவிட்டது. நகரத்தில் மட்டும் அல்ல, கிராமத்தில் வசிக்கும்
குழந்தைகளையும் இரண்டரை வயதிலேயே மழலையர் பள்ளியில் சேர்த்து
விடுகிறார்கள். இந்தக் குழந்தைகளில் பலர் வீடு திரும்பியதும், வீட்டுப்
பாடத்தை முடித்துக்கொண்டு அரசு டிவி முன்பாக பெற்றோருடன்
அமர்ந்துவிடுகிறார்கள். இவர்கள் கிராமத்தில் வசித்தாலும் கிராமத்து
வாழ்க்கையை வாழவில்லை.
விலங்குகள்கூட பிறந்த சில வினாடிகளில் எழுந்து நின்று விடும், சில
தினங்களில் தன் இரையைத் தேடத் தொடங்கி விடும். மனிதன் அப்படியல்ல. ஒரு
குழந்தைக்கு தனது தாய் தந்தையரின் அரவணைப்பிலிருந்து விலகிட விழையும்
மனநிலை, தனித்து செயல்படத் துடிக்கும் இயல்பூக்கம் 9 வயதில்தான்
ஏற்படுகிறது. இந்த "இளம்கன்று பயமறியா' பருவத்தில்தான், வீட்டுக்குத்
தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு குளத்திலும் ஏரியிலும் குளிக்கும்
ஆசைக்கு சிறார்கள் ஆளாகிறார்கள்.
குழந்தைக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருவதைப் போல, 16 வயது நிரம்பும்
முன்பே பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டச் சொல்லிக் கொடுத்து,
பிள்ளைகள் ஓட்ட, வாகனத்தின் பின்இருக்கையில் அமர்ந்து அப்பாக்கள்
ரசிப்பதைப் போல, நீச்சலையும்கூட ஒரு குழந்தைக்கு கற்பிக்கலாம். சிறந்த
பயிற்சியாளர்கள் மூலம் பயிலும்போது பத்து நாள்களில் நீச்சல் கற்றுக்கொள்வது
மிக எளிது.
நகர்ப்புறங்களில், குறிப்பாக மாவட்டத் தலைநகரங்கள் பலவற்றிலும் நீச்சல்
குளம் இருக்கிறது. அரசு சார்பில் பயிற்றுநர்களும் இருக்கிறார்கள். இங்கே
சிறார்கள், ஆடவர், மகளிருக்கான தனிப்பிரிவுகளில் தனியாக நீச்சல் பழக
முடியும். ஆனால் கட்டணம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை. சைக்கிள், மோட்டார்
சைக்கிள் ஓட்ட, தாமே செலவில்லாமல் சொல்லிக்கொடுக்க முடிகிறபோது, நீச்சல்
பழக்குவதற்கு பணம் செலவழிக்க பெற்றோர் தயக்கம் காட்டுகிறார்கள்.
மாவட்டத் தலைநகர்களில் உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பழக விரும்பும்
சிறார்களுக்கு, பத்துநாள்களுக்கு ரூ.100 என்பதாக மிகக் குறைந்த அளவு
கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்குமானால், பெற்றோர் பலரும் தங்கள்
குழந்தைக்கு நீச்சல் பயிற்சிக்கு செலவிட தயங்க மாட்டார்கள். அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி தரலாம்.
விருப்பமுள்ள மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக விண்ணப்பிக்கச்
செய்யலாம். சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த மாணவர்களும் நீச்சல் பழகுவார்கள்.
இதனால் நீர்நிலைகளில் சிறார்கள் இறக்கும் நிலை முற்றிலும் ஒழிந்துவிடும்
என்று சொல்ல முடியாது. ஆனால் எண்ணிக்கை கணிசமாக குறையும். நீச்சல் வெறும்
உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலும் மனமும் தக்கையாய் நீரில் மிதக்கும் சுகம்.
அதை உள்ளுணர்வால் அறியும் சிறார்கள்தான் பரந்துபட்ட நீரில் குதிக்கத்
துடிக்கிறார்கள்
Subscribe to:
Posts (Atom)