Blogger Widgets

Total Page visits

Thursday, August 15, 2013

Principles of Compiler Design two mark question and answers



What are the Error-recovery actions in a lexical analyzer?

1. Deleting an extraneous character
2. Inserting a missing character
3. Replacing an incorrect character by a correct character
4. Transposing two adjacent characters            


What is a sentinel? What is its usage?

A Sentinel is a special character that cannot be part of the source program. Normally we use ‘eof’ as the sentinel. This is used for speeding-up the lexical analyzer.

What is the need for separating the analysis phase into lexical analysis and parsing?     
(Or) What are the issues of lexical analyzer?

Simpler design is perhaps the most important consideration. The separation of lexical analysis from syntax analysis often allows us to simplify one or the other of these phases.

Compiler efficiency is improved.
Compiler portability is enhanced. 

What is Lexical Analysis?

The first phase of compiler is Lexical Analysis. This is also known as linear analysis in which the stream of characters making up the source program is read from left-to-right and grouped into tokens that are sequences of characters having a collective meaning.


What are the Error-recovery actions in a lexical analyzer?

1. Deleting an extraneous character
2. Inserting a missing character
3. Replacing an incorrect character by a correct character
4. Transposing two adjacent characters


What is recognizer?

Recognizers are machines. These are the machines which accept the strings belonging to certain language. If the valid strings of such language are accepted by the machine then it is said that the corresponding language is accepted by that machine, otherwise it is rejected. 

What are the cousins of compiler?

The following are the cousins of compilers
i. Preprocessors
ii. Assemblers
iii. Loaders
iv. Link editors. 

What are the main two parts of compilation? What are they performing?
The two main parts are 


Analysis part breaks up the source program into constituent pieces and creates   an intermediate representation of the source program. 

Synthesis part constructs the desired target program from the intermediate representation

State some compiler construction tools?

i. Parse generator
ii. Scanner generators
iii. Syntax-directed translation engines
iv. Automatic code generator
v. Data flow engines.

What is a Symbol table?

A Symbol table is a data structure containing a record for each identifier, with    fields for the attributes of the identifier. The data structure allows us to find the record for each identifier quickly and to store or retrieve data from that record quickly.
 

உணவுப் பாதுகாப்பு சட்டம்,எதனால் இந்த முரண்?

ஒரு பெண் கல்வி பெற்றால், ஒரு தலைமுறையே படிப்பறிவு பெற்றுவிடுகிறது. ஒரு வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் அந்தக் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக, ஊட்டமாக இருக்கிறார்கள் என்று பொருள். இதே அளவுகோலுடன் இந்தியாவின் நலத்தையும் ஊட்டத்தையும் கணிக்க முடியுமா? முடியும்.

"இந்தியாவில் 35 விழுக்காடு பெண்கள் (15 வயது முதல் 49 வரை) உடலில் சக்தியின்றி, பலவீனமாக இருக்கிறார்கள். 43 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்குள் இருப்போர்) அவர்களது வயதுக்கேற்ப இருக்க வேண்டிய உடல் எடையைவிடக் குறைவாக, பலவீனமாக இருக்கிறார்கள்'. இது, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வுத் துறையின் மத்திய அமைச்சர் கிருஷ்ண தீர்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தேசிய குடும்ப நலக் களஆய்வு-3 புள்ளிவிவரம்.

வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நாம் பரவாயில்லை என்று ஆறுதல் கொள்ளலாமே தவிர, மகிழ்ச்சி கொள்ள முடியாது. உடல் வலு குன்றிய பெண்களைப் பொருத்தவரை பிகார் (45%), சத்தீஸ்கர் (44%), ஜார்க்கண்ட் (43%), மத்தியப் பிரதேசம் (42%) ஆகிய மாநிலங்களில் ஏறக்குறைய பாதிக்குப் பாதிபேர் உடல்வலு குறைந்து இருக்கும்போது, தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 28% ஆக உள்ளது. அதேபோன்று உடல்எடை குறைந்த குழந்தைகள் விஷயத்திலும், பிகார் (55%), சத்தீஸ்கர் (47%), மேகாலயா (48%), மத்தியப் பிரதேசம் (60%) என குழந்தைகள் எடை குறைவாக இருக்கையில் தமிழ்நாட்டில் இந்த விகிதம் 30% ஆக இருக்கிறது.

இந்தியாவில் உணவு உற்பத்திக்கு குறைச்சல் இல்லை. ஆண்டுக்கு 250 மில்லியன் டன் உணவு தானியம் உற்பத்தி செய்கிறோம். இப்போதும்கூட, 40 மில்லியன் டன் கோதுமையை அடுக்கிவைக்க போதுமான இடம் இல்லை என்பதற்காக, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக 2 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்கின்றது. அரிசி, பருப்பு உற்பத்தியிலும் குறைவில்லை. இருந்தும்கூட இத்தனை பெண்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் உடல்வலுவின்றிக் கிடப்பதன் காரணம் என்ன?

நியாயவிலைக் கடைகளில் மிக மலிவான விலையில் அரிசி, கோதுமை, பருப்பு போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவசமாகவே தரப்படுகிறது. ஏழைகள் அனைவரும் இந்த உணவுப் பொருள்களை வாங்குகிறார்கள். இருந்தும் பெண்கள் உடல்வலுவுடன் இல்லை. 

எல்லா ஊர்களிலும், பள்ளிகளிலும் சத்துணவுக் கூடங்கள் இருக்கின்றன. இருந்தும்கூட குழந்தைகள் உடல் எடை குறைவாக இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ஐசிடிஎஸ்) தேசிய ஊரக சுகாதார இயக்கம், மதிய உணவுத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு வாங்கும் சக்தி இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என எல்லாமும் இருந்தும்கூட ஏன் இந்த நிலை?

எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. ஆனாலும் உணவுப் பொருள் கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமே இந்த நிலையை மாற்றிவிடப் போதுமானதா? இந்த நிலைமைக்கு பல சமூக- பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. 

போதுமான அளவுக்கு உணவு கிடைக்காத நிலைமை, அடிக்கடி நோய்க்கு ஆளாதல், தூய குடிநீர் கிடைக்காத சூழ்நிலை, கழிப்பறை வசதிகள் இல்லாதிருத்தல், மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள நடைமுறை இடையூறுகள், வேலைவாய்ப்பு இல்லாமல் குடும்ப வருமானம் குறைந்திருக்கும் நிலையில் வாங்கும் சக்தி இல்லாத பொருளாதார நெருக்கடி போன்றவைதான் இத்தகைய நிலைமைக்கு முக்கியமான காரணங்கள். 

இந்தப் புள்ளிவிவரங்களின்படி அனைத்து மாநிலங்களிலும் பெண்களும் குழந்தைகளும் கிராமப்பகுதிகளில்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கிராமங்களைவிட மிகமோசமான வாழ்க்கைச் சூழலும், மாசும், நோய்களும் நிறைந்துள்ள நகரத்தில்தான் அதிக பாதிப்பு இருக்க வேண்டும். ஆனால் தலைகீழாக இருக்கக் காரணம் என்ன?

சுகாதாரமான வாழ்க்கைச் சூழல் நகரங்களின் குடிசைப் பகுதிகளில் இல்லவே இல்லை என்றாலும் அவர்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறது, மருத்துவ வசதி பெற முடிகிறது. நகராட்சி, மாநகராட்சி லாரிகள் மூலம் நல்ல குடிநீர் - சில குடங்கள்தான் என்றாலும்- கிடைக்கிறது. ஆனால் இத்தகைய குறைந்தபட்ச வாய்ப்புகளும்கூட கிராமங்களுக்கு கிடைப்பதில்லை.

இவற்றுடன், சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடிக்கே செலவு செய்து, குடும்பத்தில் தன்னை நம்பி இருக்கும் பெண்கள், குழந்தைகளின் வாழ்வுக்குத் தேவையான பணத்தைத் தராத குடிகாரர்களால் பொருளாதார இழப்பை சந்திக்கும் குடும்பங்கள் கணக்கிலடங்கா. "குடி உயர கோல் உயரும்' என்பது இன்றைய தேதியில் பொருந்தா மொழி. "குடி' ஒழிய குடும்பம் ஒளிரும் என்பதே சரியாக இருக்கும்.

உணவுப் பாதுகாப்பு சட்டம் மட்டுமே அனைத்துக்கும் தீர்வாகிவிடாது. அனைத்து நிலைகளிலும் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதன் மூலம்தான் இந்தியப் பெண்கள் நலம் பெறுவர். குழந்தைகளும் ஊட்டம் பெறுவர். 

"சுற்றிலும் பார்க்குமிடமெல்லாம் தண்ணீர், ஆனால் குடிக்க ஒரு துளிக்கூட இல்லை' என்று நடுக்கடலில் கப்பலில் இருந்தபடி பாடினான் ஓர் ஆங்கிலக் கவிஞன். இந்தியாவில் உணவு தானியக் கிடங்குகள் நிறைந்து வழிகின்றன. ஆனால், 35 விழுக்காடு பெண்களும் 43 விழுக்காடு குழந்தைகளும் ஊட்டச் சத்தில்லாமல் பலவீனமாக இருக்கிறார்கள். நமது நிர்வாகத்தில்தான் தவறு இருக்கிறது

Tuesday, August 13, 2013

ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

‘சொல்லாமலே’ சசியின் இயக்கத்தில், ‘காதல்’ பரத் ‘6’ பேக் உடற்கட்டு உடன் நடித்திருக்கும் ஆக்ஷ்ன், லவ் சென்டிமெண்ட் திரைப்படம் தான் ஐந்து ஐந்து ஐந்து!

‘சொல்லா‌மலே’ திரைப்படத்திற்குப்பின் சசி, ‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ என இன்னும் சில படங்களை இயக்கி இருந்தும், ‘காதல் படத்திற்குப்பின் ‘வெயில்’, ‘எம்மகன்’, ‘நேபாளி’, ‘திருத்தணி’, ‘யுவன் யுவதி’ உள்ளிட்ட எத்தனையோ படங்களில் பரத் நடித்திருந்தும், இன்னமும் அவர்களது அடையாளங்கள் ‘சொல்லாமலே ’ சசி, ‘காதல்’ பரத் என்றே இருப்பது போன்று ‘‘ஐந்து ஐந்து ஐந்து’’ படத்திற்குப் பின்னும் இந்த இருவரது அடையாளங்களிலும் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை... என்றாலும் இப்படத்திற்காக இயக்குநர் சசியும், நடிகர் பரத்தும் நிறையவே உழைத்திருக்கிறார்கள் என்பது பிரேம் டு பிரேம் படத்தில் தெரியும் பிரமாண்டத்தில் புரிகிறது! இருந்தும் என்ன பயன்? ‘சொல்லா‌மலே’ சசியிடமும், ‘காதல்’ பரத்திடமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு ‘பூ’, ஒரு ‘வெயில்’ மாதிரி படங்களைத்தான் என்பதை அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளாதது இப்படத்திற்கு பலத்தை விட, பலவீனத்தையே கூட்டுகிறது. பாவம்!

கதைப்படி அரவிந்த எனும் பரத்திற்கு லியானா எனும் மிருத்திகா மீது காதல். ஆனால் ஒரு விபத்துக்குபின் அப்படி ஒரு காதலோ, காதலியோ அல்ல, அந்த விபத்தில் சிக்கிய பரத்துக்கு மனநிலை சரியில்லை... அதன் விளைவு தான் இப்படி என்று பரத்தின் உடன்பிறந்த அண்ணன் கோபால் எனும் காமெடி சந்தானமும்(!), அவர்களது மனநல மருத்துவரும் அடித்துக்கூற குழம்புகின்றார் பரத். நம்மையும் குழப்புகிறார்! ஒரு வழியாக இதற்கெல்லாம் காரணம் லியானா எனும் மிருத்திகாவை தன் இறந்து போன காதலி சாயலில் இருப்பதால் ஒருதலையாக காதலிக்கும் ஐம்பது வயது பெரும் தொழில் அதிபர் தான் என்பதை கண்டுபிடிக்கும் பரத், அவரிடம் சிக்கித் தவிக்கும் காதலியை மீட்டு கரம்பிடிக்க என்னவெல்லாம் செய்கிறார்.?!, எதையெல்லாம் இழந்தார்?!, இறுதியில் காதலியை கரம்பிடித்து ஜெயித்தாரா? தோற்றாரா? என்பது தான் ‘‘ஐந்து ஐந்து ஐந்து’’ திரைப்படத்தின் மொத்த கதையும்!

இப்படி ஒரு வித்தியாசமான கதையை விறுவிறுப்பாக, சஸ்பென்சாக சொல்கிறேன் பேர்வழி... என்றும் திரைக்கதையில் நிறைய ‘திடுக்‘ திருப்பங்களை ஏற்படுத்துகிறேன் என்றும்... நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார் இயக்குநர் சசி! சசி சார் உங்களுக்கு சுவாரஸ்யமான காதல் போதாதா...?! எதற்கு சஸ்பென்ஸ், த்ரில்லர் எல்லாம்?!

பரத், 6 பேக் உடம்பை காட்டி போடும் சண்டைக்காட்சிகளிலும், மிருத்திகாவுடனான ப்ளாஷ்பேக் காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். சந்தானம், ஒருசில காட்சிகளில் வந்து காமெடி பண்ணி அதன்பின் தம்பி பரத்துக்காக உயிரை விடுவது ‘டிராஜிட்டி!’

லியானாவாக வரும் மிருத்திகா டூயல் ரோலிலும் தூள் பரத்துகிறார் என்றால், பரத்துக்காக 50 வயது தொழில் அதிபரால் செட்டப் செய்யப்படும் மஞ்சரி எனும் எரிக்கா பெர்ணான்டஸூம் தானும், மிருத்திகாவுக்கு சளைத்தவரில்லை... என பரத்துடன் படுபாந்தமாக டூயட்பாடி ஆடுவது படத்திற்கு ப்ளஸ் சேர்க்கிறது!

சைமனின் இசையில் அவர் எழுதிபாடும் ‘எழவு’ பாடல் தவிர மற்ற நான்கு முத்துக்குமாரின் பாடல்களும் நல்முத்துக்கள்! சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவும், ரவி ஸ்ரீசந்திரனின் சண்டைப்பயிற்சி உள்ளிட்டவைகள் சசியின் ‘டிரிபிள் பைவ்’வை ‘சேட்டிஸ்பை’ ஆக்கியுள்ளன!

ஆகமொத்தத்தில், 5 5 5(‘‘ஐந்து ஐந்து ஐந்து’’) - 35 ‘‘(ஜஸ்ட்பாஸ்!)’’