நகரத்தில், ரெண்டு கிலோ மீட்டர் தூரம் அவசரமா போகணும்னா, பஸ்ஸுக்கு காத்திருக்க பொறுமை வேணும். ஒரு ஆட்டோவைப் பிடிச்சுப் போகலாம்னா, '50 கொடு 60 கொடுங்கிறாங்க. மனசு வராது. அந்த நேரத்துல, மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து,10 ரூபாய் கொடுங்க, நான் டிராப் பண்றேன்' என்றால் எப்படி இருக்கும்? இதுதாங்க, 'டூ வீலர் டாக்ஸி' கான்செப்ட்.
சீனாவின், முக்கியமான நகரங்களில் இந்த டூ வீலர் டாக்ஸி மிகவும் பிரபலம். அங்கு, 5 கிலோ மீட்டர் தூரம் வரை 50 ரூபாய். டாக்ஸி, ஆட்டோவைவிட ரொம்பக் குறைவு என்பதால், சீனாவில் ஹிட் ஆனதும் பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து, கம்போடியா, கேமரூன், இந்தோனேஷியா, நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலும் டூ வீலர் டாக்ஸி ஜோரா செயல்படுது. அங்கே, ஆட்டோவுக்கு ஸ்டாண்டுகள் இருப்பது போல பைக் டாக்ஸிக்கும் ஸ்டாண்டுகள் உண்டு.
இந்தியாவில்...
நம் நாட்டில், முதலில் ஆரம்பமானது கோவாவில். இங்கு, பல வருடங்களாக டூ வீலர்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. டூ வீலர் டாக்ஸி டிரைவர்களை 'பைலட்' என்கிறார்கள். மஞ்சள் கலரில் இருக்கும் இந்த மோட்டார் சைக்கிள் டாக்ஸியில் பயணிக்க, மினிமம் 10 ரூபாய் செலுத்த வேண்டும். 2 கிலோ மீட்டருக்கு மேல், 1 கிலோ மீட்டருக்கு 4 ரூபாய். இதில், டூரிஸம் பேகேஜும் இருக்கு. அதிலேயே கோவா நகரத்தைச் சுற்றிவிடலாம்.
அடுத்து, டூ வீலர் டாக்ஸி கேரளாவில் அறிமுகமானது. 'டாப் கியர் ரெண்ட்-ஏ-பைக்' (Top Gear Rent-A-Bike) என்ற பெயரில், ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இங்கு, கிலோ மீட்டருக்கு 4 ரூபாய். டிரைவரோடு சேர்ந்து, இந்த டூ வீலர் டாக்ஸியில் பயணம் செய்பவருக்கு, 1 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வசதியும் உண்டு. டூ வீலர் டாக்ஸி டிரைவர்களுக்கு என்று தனி யூனிஃபார்ம்.
'போக்குவரத்து நெரிசலால் டாக்ஸி, ஆட்டோவில் சென்றாலும் நேரம் வீணாகும். டிராஃபிக்கில் சிக்கினாலும் இந்த டூ வீலர் டாக்ஸியில், குறுகிய 'கேப்'பில் புகுந்து புகுந்து சென்று, சீக்கிரமாகவே இடத்தை அடையமுடிகிறது. அதோடு, பணமும் மிச்சம்' என்கிறார்கள், இதில் பயணம்செய்த வாடிக்கையாளர்கள்.
என்.மல்லிகார்ஜுனா
No comments:
Post a Comment