Blogger Widgets

Total Page visits

Tuesday, August 19, 2014

விண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள்

விண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள், பல்வேறு ஊடகங்கள் வழியாகக் கசிந்து கொண்டுள்ளன. விண்டோஸ் 8, தொழில் நுட்ப ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் பழகிப்போன செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக இருந்ததால், அவ்வளவாக எடுபடவில்லை. தோல்வியையே சந்தித்ததால், மக்கள் ஏமாற்றமடைந்த பல விஷயங்களை, வரும் விண்டோஸ் 9 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்துவிட முடிவெடுத்துள்ளது. 

Threshold என்ற குறியீட்டுப் பெயருடன், விண்டோஸ் 9 வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக Charms Bar நீக்கப்படும் என்று தெரிகிறது. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் Start menu தரப்பட உள்ளது. விண்டோஸ் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன், மெட்ரோ அப்ளிகேஷன்களும் டெஸ்க்டாப்பில் காட்டப்படும். இரண்டும் இயங்கும். நிச்சயமாக, வாடிக்கையாளர்களின் மிகப் பிரியமான இயக்க முறைமையாக இது இருக்கும் என தெரிகிறது. 

ஆனால், சார்ம்ஸ் பார் இயக்கம், டேப்ளட் பி.சி.க்களில் விரும்பப்ப் படுவதால், அதற்கான இயக்கத்தில் சார்ம்ஸ் பார் தொடரும். எனவே, பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 9, மக்களின் விருப்பங்களுக்கேற்ப செயல்படும் ஒரு சிஸ்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. விண்டோஸ் 9 சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அம்சங்களைக் காட்டிலும், விண்டோஸ்7 அம்சங்கள் அதிகம் கொண்டதாக அமையலாம். 
  O9qXJrA.jpg

புதிய முயற்சியாக, விண்டோஸ் 9 சிஸ்டத்தில், விர்ச்சுவல் டெஸ்க்டாப் (virtual desktop) அமைத்து இயக்குவதற்கான வசதிகள் தரப்பட இருக்கின்றன. தற்சமயம், மேக் ஓ.எஸ். மற்றும் உபுண்டு இயக்கங்களில் இந்த வசதி கிடைக்கிறது. 

விர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலம், நாம் வெவ்வேறு வகையிலான டெஸ்க்டாப்களை உருவாக்கலாம். இவை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டிருக்கலாம். இரண்டிலும் மாறி மாறி இயங்கலாம். எடுத்துக் காட்டாக, ஒரு டெஸ்க்டாப்பில் உங்கள் நிறுவனப் பணிகளுக்கான அப்ளிகேஷன்களை வைத்து இயக்கலாம். 

இன்னொன்றில், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் பெர்சனல் விஷயங்களுக்கானதாக அமைத்துக் கொள்ளலாம். இதிலிருந்து, டேப்ளட் பி.சி.க்களில் நன்றாக இயங்கிய சிஸ்டத்தினை, பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் விரும்பி இயக்கப்படும் என மைக்ரோசாப்ட் எண்ணி, விண்டோஸ் 8 கொண்டு வந்த்து தவறு என அது உணர்ந்து, தற்போது நிலைமையை மாற்றி, புதிய விண்டோஸ் 9 சிஸ்டத்தில் கொண்டு வரத் திட்டமிடுவது தெரிகிறது. 


விரைவில் விண்டோஸ் 9 இயக்கத்தின் சோதனை பதிப்பு வெளியிடப்படலாம்

Monday, August 11, 2014

பென் ட்ரைவில் இருந்த கோப்புகளைக் காணோமா?

படிப்பின் தேவைக்கோ பணியின் தேவைக்கோ பென் ட்ரைவ்களையும், எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்குகளையும் பயன்படுத்துகிறோம். நாம் அவற்றைப் பல கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் பயன் படுத்துவோம். அப்போது நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்திவிடுவோம்.

பல நாட்கள் உழைத்துச் சேகரித்த ஆவணங்கள் உள்ளிட்டு பெரும்பாலும் நமது அதிமுக்கியமான கோப்புகளை நாம் பென் ட்ரைவ்களில் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றைப் பயன்படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவைச் சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த கோப்புகள் எல்லாம் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட் கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.

ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள எல்லாம் போய்விட்டது என்று முடிவு செய்துவிடுவார்கள். அதனால் பென் ட்ரைவை பார்மெட்கூட செய்துவிடுவார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்று தலையில் கை வைத்து அமர்வார்கள்.கவலை வேண்டாம்.இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு வழி இருக்கிறது.

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS promptக்குச் செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்தக் குறிப்பிட்ட ட்ரைவிற்குச் செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் (நாம் இழந்ததாக கருதிய) அனைத்து கோப்புகளும் hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? DOS prompt -ல் இருந்து கொண்டு,

Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையைக் கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புகள் மீட்கப்பட்டுவிடும். பிறகு தேவையற்ற ஷார்ட் கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.

Friday, August 8, 2014

ஃபிளிப்கார்ட்:4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி ரூபாய்

சிறிய மளிகைக் கடைக்காரர்கள் சூப்பர் மார்க்கெட்களைப் பார்த்து பயந்தார்கள். பின்னர் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்தன. சமீபத்தில் எஃப்டிஐ, அதாங்க சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு. அதைப் பார்த்துப் பயந்தார்கள். இப்போது அனைவரும் ஆன்லைன் வணிக நிறுவனங்களைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

புத்தகங்கள், மளிகை, ஜூவல்லரி, ஆடைகள், காலணி, மொபைல் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் எல்லா வணிக நிறுவனங்களும் இணையம் மூலம் பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கு முன்னோடியாக அமேசான் (அமெரிக்கா), அலிபாபா (சீனா) உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டைச் சொல்லலாம்.

ஆரம்பம்

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தார்கள். அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். பின்னர் வெளியேறி 4 லட்ச ரூபாய் முதலீட்டில் பிளிப்கார்ட்டைத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் புத்தங்களை மட்டுமே விற்று வந்தார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் leaving microsoft to change the world என்னும் புத்தகத்தை முதன்முதலில் வாங்கியுள்ளார்.

பிஸினஸ் செய்வதற்கு முதலீடு தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும் என்பதற்கு இவர்கள் சரியான உதாரணம். இவர்களது ஐடியாவைப் பார்த்து வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. முதல் 18 மாதங்களுக்குத் தங்களுக்கான சம்பளத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

கிரெட் கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்கள் மட்டுமே ஆன்லைன் பொருள்களை வாங்க முடியும் என்பது தடையாக இருந்துவந்தது. அதனால் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்கள். பொருளை ஆர்டர் செய்துவிட்டுத் தேவை இல்லை என்று சொல்லலாம், வீடு பூட்டியிருக்கலாம் எனப் பல ரிஸ்க் இருந்தாலும் பன்சால் ஜோடி துணிந்தது. இது நிறுவனத்துக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

முதலீடு திரட்டல்

பிஸினஸ் வளர்வதற்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேசி நிதி திரட்டினார்கள். 2009-ம் ஆண்டு 10 லட்சம் டாலர் முதலீட்டை ஆக்செல் பார்ட்னர் நிறுவனம் பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனம் பிளிப்கார்ட்தான்.

வளர்ச்சி

திரட்டிய முதலீட்டை பிஸினஸில் முதலீடு செய்வது ஒரு வகையான வளர்ச்சி என்றால், நிறுவனங்களைக் கையகப்படுத்தி வளர்வதும் இன்னொரு வகையான வளர்ச்சி. இன் ஆர்கானிக் குரோத் என்பார்கள். ஃபிளிப்கார்ட் இந்த வேலையையும் செய்து வருகிறது.

மிக சமீபத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுத்து மிந்த்ரா டாட் காம் Myntra.com நிறுவனத்தை வாங்கியது.

2012-ம் ஆண்டு லெட்ஸ்பை (Letsbuy.com) என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது தவிர இன்னும் சில நிறுவனங்களையும் ஃபிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.

இப்போது ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி விற்பதால் அதிக அளவு தள்ளுபடி கொடுக்க முடிவதால் மோட்டோ நிறுவன செல்போன்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்க கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் சீனாவின் Xiaomi Mi3 செல்போன் சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்தது. இதை அறிமுகப்படுத்திய அன்று ஃபிளிப்கார்ட் இணையதளம் கொஞ்சம் ஆடித்தான் போனது.

6000 கோடி ரூபாய் (2013-14) அளவுக்கு வருமானம் இருந்தாலும் ஃபிளிப்கார்ட் இன்னும் லாப பாதைக்குத் திரும்பவில்லை. இது குறித்து கேட்டதற்கு, “லாபம் ஒரு விஷயமே இல்லை. என்றைக்கு விரிவாக்கப் பணிகளை நிறுத்துகிறோமோ அப்போதே லாப பாதைக்குத் திரும்பிவிடலாம். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் அதன் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால்.

4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி
ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

15 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இதில் 10 சதவீதம் நபர்கள்தான் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குகிறார்கள். ஆன்லைன் வணிகம் 2020-ம் ஆண்டு 7,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது 2020-ல் ஃபிளிப்கார்ட் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும், லாப பாதையில் திரும்பி இருக்கும். சிறந்த தொழில்முனைவோராக உயர்வது எப்படி இருப்பது என்று ஐஐஎம் கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால்...

ஃபிளிப்கார்ட் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் வணிகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிளிப்கார்ட் ஒரு எர்லி பேர்டு. அது மட்டுமல்லாமல் சரியான சமயத்தில் வந்த பேர்டும்கூட.

தகவல்: தி ஹிந்து  

Thursday, August 7, 2014

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.

என்ன ஆபத்துகள்?

1.யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும். 

3.கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

4.உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

5.உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படி தவிர்க்கலாம்?


உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்.

உஷார் தோழிகளே!

விகடன் நாளிதழில் வெளிவந்தது. 

Wednesday, August 6, 2014

ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க

நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.

ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.

நாமாக ஏற்படுத்தும் சேதம்: 

bMqp4iZ.jpg


ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க்கில் தான், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்? 

கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இட த்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும். 

ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.

 அதிக வெப்பம்: 


ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 

இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும்.

நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது. 
இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.


சிதறியபடி பதியப்படும் பைல்கள்:


 பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும்.

இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

7mJMccU.gif
  
இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு. 

டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும். 

அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்


ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும். 

இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது. 

குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.


மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு: 
jce6F6A.jpg


மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும். 

கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலி ருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்? சர்ஜ் ப்ரடக்டர் (surge protector) என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது

இணையத்தில் படித்தது. 

Tuesday, August 5, 2014

நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இவைதான்!

திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்வு, தமிழகத்தில் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
இன்றைய நிலையில் தமிழகத்தில் மட்டும் 550க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளனஆந்திரா மற்றும் தமிழகத்தில் தான் அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளனஅதேசமயம்கவுன்சிலிங் நிறைவில் 9ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே இருக்கின்றனஇது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளதுபொறியியல் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து முடித்த பிறகுபடிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில்தொழில்நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்புகளை பொறியியல் கல்லூரிகள் பூர்த்தி செய்கின்றனவாஎன்பதே இன்றைய பிரதான கேள்வி.
பெரும்பாலான கல்லூரி விளம்பரங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.மற்றொரு பக்கம் தொழில் நிறுவனங்களின் ஆய்வின்படி, 25 முதல் 30 சதவிதம் பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வேலைக்கான திறன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுஇந்த இரண்டிற்கும் ஏதோ இடைவெளி இருப்பதை உணர முடிகிறதுபடித்த படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வேலை செய்வது என்பது சரியானஎம்பிளாயபிலிட்டி ஸ்டேன்டர்டு’ ஆக கருதமுடியாது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதாஎன்றால், ‘இல்லை’ என்பது தான் பதில்அதே எதிர்ப்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றனஉற்பத்தி துறைக்கும்தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால்அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை.
பாசிட்டிவ் எனர்ஜி
எந்த ஒரு நிறுவனமும் நேர்காணலில் Attitudeக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனஎந்தளவுக்கு நிறுவனத்திற்கு பாசிட்டிவ்ஆக இருப்பார் என்பதை சில கேள்விகள் மூலம் சோதிப்பார்கள்உதாரணமாக,வேலைக்கான நேர்காணலில் வெளியூர்களில் வேலை செய்யத்தயாராஎன்ற கேட்கப்படலாம்அந்த நிறுவனத்திற்கு சென்னையில் தேவை இல்லாமல் இருக்கலாம்உண்மையில்பெங்களூருவில் ஆட்கள் தேவைப்படலாம்அப்போது நான் சென்னையில் மட்டும்தான் வேலை செய்வேன்’ என்று கூறும்பட்சத்தில்,அவர் தனக்கான வாய்ப்பை குறைத்துக்கொள்கிறார்அதேநபரிடம்வெளிநாடுகளில் வேலை செய்யத் தயாராஎன்றால்உடனடியாக, ‘தயார்’ என்று சொல்லக்கூடும்இதைத்தான்ஆங்கிலத்தில் குளோபலி பிளக்சிபில்லோக்கலி இம்மொபைல்’ என்று சொல்வார்கள்.
நிலைத்து நிற்பாரா?
ஒருவர் எத்தனை நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வார் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறதுமுன்பு,பெரும்பாலானோர் ஓய்வு பெறும்வரை ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர்அரசுத் துறைகளில் இந்தநிலை மிக அதிகம் என்றாலும்தனியார் துறையிலும் அதிகமாக காணப்பட்டதுகடந்த 10ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வின்படிசராசரியாக முதல் ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்பட்டது.
அதே தற்போதைய ஆய்வின்படிஒருவர் முதல் ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது பெரிய விஷயமாக இருக்கிறதுஎனவேகுறைந்த ஆண்டுகளே வேலை செய்வார் என்று தோன்றும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய நிறுவனங்கள் யோசிக்கும்கிரிக்கெட்டில் ‘20-20’க்கும் டெஸ்ட் மேட்ச்க்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே உதாரணமாக கூறலாம். ‘டெஸ்ட் மேட்ச்’ போன்று நிரந்தரமாக நின்று வேலை செய்பவர்களையே இன்றைய நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றன.
தீர்வு காணும் திறன்
பொறியியலில் சிவில்மெக்கானிக்கல்.டி., .சி.., ..., என எந்த பிரிவை படித்தவராக இருந்தாலும்சிறந்த Problem Solving Skills’, ‘Logical and Analytical Thinking’ திறனை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனநேர்முகத் தேர்வில் ஒரு தர்க்கத்தை கொடுத்துஅதை சரியாக பிரித்துமுன்னுரிமை அடிப்படையில் வரிசையாக அதற்கு தீர்வு அளிக்க முடிகிறதாஎன்பது பரிசோதிக்கப்படுகிறதுஎனவே இவற்றை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் பள்ளிகல்லூரிகள் பயிற்சி அளிக்க வேண்டும்;மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும்.
துறை சார்ந்த அறிவு
கல்லூரியில் எந்த பிரிவு படித்திருந்தாலும்அந்த துறையில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு உள்ளதாஎன்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கும்புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்து முதல் மதிப்பெண் பெற பள்ளிக் கல்வியில் முடியும்ஆனால்கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் குறைவுஅப்படியே தேர்வாகினாலும்,எந்த ஒரு வேலைக்கான நேர்காணலிலும்புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை.செயல்முறைத் திறன் அடிப்படையிலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும்.
குழுவாக செயல்பட முடியுமா?
மாணவர்களுக்கு குழுவாக செயல்பட சில கல்லூரிகள் மட்டுமே போதிய பயிற்சி அளிக்கின்றன. ‘மாணவிகளிடம் பேசக்கூடாது’ என்று கூறும் கல்லூரிகள் இன்றளவும் உள்ளனஆனால்பொதுவாக நிறுவனங்களில் இருபாலரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டியது அவசியம். ‘தனிமனிதாக வெற்றி பெற்றுவிட்டேன்ஆனால் குழு தோற்றுவிட்டது’ என்றாலும்உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காதுஎனவேகுழுவாக இணைந்து செயல்படும் திறன் உங்களிடம் உள்ளதா?அனைவரிடமும் சகஜமாக பழக முடிகிறதாஎன்பதை நிறுவனங்கள் தெளிவாக பரிசோதிக்கும்.
தொடர் கற்றல்
ஒரு மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை இன்றும் பயன்படுத்தி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தால் அவர் ஒதுக்கப்படுவார்எந்த துறையாக இருந்தாலும் துறை சார்ந்த தொடர் கற்றல்நவீன அறிவு ஆகியவை அவசியம்இவையும் நேர்முகத் தேர்வில் பரிசோதிக்கப்படும்.
தகவல் தொடர்புத் திறன்
இன்றும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் கம்யுனிகேஷன் ஸ்கில்ஸ்’. அனைத்து திறன்களும் உங்களுக்கு இருந்தாலும்அவற்றை மற்றவருக்கு அழகாக வெளிப்படுத்த பேச்சுத் திறமை அவசியம்தகவல் தொடர்பில் ஆங்கிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

-சுஜித் குமார்மனிதவள மேம்பாட்டு ஆர்வலர்