Blogger Widgets

Total Page visits

163743

Wednesday, October 2, 2013

ஆசிரியர் தினத்தை நினைவு கொள்வோம்.....

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் தான்.

இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான இருந்து டாக்டர் பட்டம் பெற்ற ராதகிருஷ்ணன் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறந்த மாணவர் சமூதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. மனிதர்களை மனிதனாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கை என்றால் என்ன? சமூகத்தில் எப்படி வாழ வேண்டும், சக மாணவ - மாணவிகளுக்கிடையே எவ்வாறு பழக வேண்டும், நல்லொழக்கம் ஆகிய உயர்ந்த கருத்துக்களை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் கற்று கொடுப்பது ஆசிரியர்கள் தான்.

மாணவர்களை படிக்க வைப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் படிப்பவர்கள் ஆசிரியர்கள். சிறந்த லட்சியத்தையும், குறிக்கோளையும் எடுத்துரைத்து, ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவர் மனதில் நன்கு பதிய வைத்து அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஏணி போல் உயர வைத்து அனார்ந்து பார்த்து பூரிப்பவர்கள் ஆசிரியர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் அன்பு, பாசம், குணம், பண்பு ஆகியவை மாணவர்கள் பார்த்து தானும் பின்பற்ற வேண்டும் என்று மனதில் பதிய வைக்கும். ஆரம்ப கட்டத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் போது, குழந்தைகளாகவே மாறி விடுகின்றனர் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு பள்ளி பருவத்தில் கிடைக்கும் அனுபவம் உண்ணதமான அனுபவம். அந்த அனுபவத்திற்கு காரணம் ஆசிரியர்கள்.

மாதா, பிதா, குரு தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமையும், ஆத்ம திருப்தியும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாணவ - மாணவிகள் அனைவரும் இந்த நன்னாளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும் சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தனது ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதோடு, லட்சிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்வோம்.

No comments: