Blogger Widgets

Total Page visits

Tuesday, October 29, 2013

வீணாக்கலாமா?

கல்வி என்பது கடைச்சரக்கான பிறகு, எவரும் நினைத்த மாத்திரத்தில், நினைத்த பட்டங்களைப் பெறுவது மிக எளிதாயிற்று. அதனூடே கல்வியின் தரமும் தாழ்ந்து போயிற்று. ஒரு சூழலில், "எம்.பி.ஏ.' என்றால் எட்டாக்கனியாக இருந்த படிப்பு இன்று எவரும் எளிதில் பெறும் நிலைமைக்கு மாறியிருக்கிறது. கூடவே அதன் மதிப்பும் போய்விட்டது. இது எம்.பி.ஏ. என்ற படிப்பிற்கு மட்டுமல்ல, அநேகமாக அனைத்துப் பட்டப்படிப்புகளுக்கும் இந்த நிலைமைதான். பொறியியல் படிப்பின் நிலையும் இதுதான். மருத்துவத் துறை மட்டும் இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறது. (அதுவும் ஏழைக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.)

மெக்காலேயின் கல்வித் திட்டம் அன்று ஆங்கிலேயர்களுக்குத் தேவையான எழுத்தர்கள், பொறியாளர்கள் போன்றோரை உருவாக்கியது. அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது.

கணினித் துறையில் பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் வெளி நாட்டில் வேலை என்று பெருமையோடு சொல்லிக் கொண்டாலும், அவர்களின் அறிவு, திறமை, ஆற்றல் அனைத்தும் தாய்நாட்டிற்குச் செலவிடப்படவில்லை என்பதை மறக்க முடியுமா? டாலரில் பெறுகின்ற சம்பளம் அவர்களின் கண்களை மூடிவிட்டது என்பதை மறுக்க முடியுமா? இன்றும் நாம் அன்னியர்களுக்குத் தேவையான எழுத்தர்கள், பொறியாளர்கள் போன்றோரைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அயல்பணி ஒப்படைப்பு மூலம் அதிகமான இளைஞர்களை மேலை நாடுகள் தமது பணிக்கு நியமனம் செய்கின்றன.

ஈடுபாடு குறைந்த கல்வி, வெளிநாட்டுச் சேவகர்களை உருவாக்கும் கல்வி, கற்பது பொருளீட்டவே என்ற மூன்று கருத்துகளும் சிந்திக்கவேண்டியவை. கல்வியின் மீது பதிந்திருக்கும் நமது பார்வை முற்றிலும் மாறுபடவேண்டும். மருத்துவம், பொறியியல், ஐ.டி. துறை சார்ந்த படிப்புகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதே இன்றைய பெரும்பாலான மக்களின் மனோநிலை.

மெடிக்கல் "கட்-ஆஃப்' குறைந்து விட்டது, பிடிஎஸ் - பல்மருத்துவப் படிப்புதான் கிடைக்கும் என்றால், மாணவனுக்கும், பெற்றோருக்கும் மன நிம்மதியில்லை. காரணம் எம்.பி.பி.எஸ். படித்து கிடைக்கும் சம்பளம் போல் பிடிஎஸ் - பல் மருத்துவப் படிப்பில் சம்பாதிக்க முடியாது என்பதே. சமூக அந்தஸ்து என்கிற துணைக் காரணமும் உண்டு. இந்நிலைமை அனைத்துத் துறைசார்ந்த கல்விக்கும் பொருந்தும். எந்தப் படிப்பு படித்தால் எளிதில் வேலையும், அதிக சம்பளமும் கிடைக்கும் என்பதே இன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேடலாக இருக்கிறது. பணத்தை மையமாகக் கொண்டு இன்றைய மக்கள் கல்வியைத் தேடுவதால், கல்வியின் அசல் நோக்கம் அழிந்துவிடுகிறது.

இதன் காரணமாக சில குறிப்பிட்ட துறையைத்தான் மக்கள் விரும்புகின்றனர். பொறியியல் படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்கிற தவறான சிந்தனையே காளான்களைப்போல் பொறியியல் கல்லூரிகள் இன்று உருவாகக் காரணமாகும். இவ்வாறு குறிப்பிட்ட பட்டப்படிப்புகளை மட்டுமே படித்து வந்தாலும் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனரா என்றால், இல்லை என்பதே உண்மை. இவ்வாண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்படுவர்?

கல்வித் துறையில் ஏன் இந்த பாரபட்சம் கடைப்பிடிக்கப்படுகிறது? மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கலை-அறிவியல் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை, ஏன்?

அரசும், ஊடகங்களும் தொடர்ந்து அதிக வரவேற்புள்ள துறை என்று ஒரு சில கல்வித்துறைக்கு மட்டும் கொடுக்கின்ற முக்கியத்துவம் காரணமாக மற்ற கல்வித்துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வமின்மையைத் தோற்றுவிக்கிறது.
இதனால்தான் மருத்துவம், பொறியியல் மற்றும் ஐ.டி. துறை தவிர மற்ற கலை-அறிவியல் துறைக்கு வருகின்ற மாணவர்கள் மதிப்பெண் குறைவாக வாங்கிய மாணவர்களாகவும், "வேறு வழியில்லை கிடைத்ததைப் படிப்போம்' என்கிற மனநிலையிலும் உள்ளனர். எந்தக் கல்வியும் வீணாவதில்லை, எந்தத் துறையில் படித்தாலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதில் அரசு மற்றும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு.

பட்டப்படிப்பு படித்து வெளிவரும் மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்கள் தவிர மற்ற பாடங்களில் குறைந்தபட்ச அறிவைக் கூடப்பெறுவதில்லை. பொறியியல் படிக்கும் மாணவனுக்கு உயிரியல் குறித்து விழிப்புணர்வு கிடையாது. உயிரியல் படிக்கும் மாணவனுக்குக் கணித அறிவு கிடையாது. பொருளாதார மாணவர்கள் புள்ளியியல் குறித்து அறிவதில்லை. வடமாநிலங்களில் பெருவாரியான பல்கலைக்கழகங்கள் இளங்கலை பட்டப்படிப்புகளில் கணிதம் அல்லது வேதியியல் அல்லது இயற்பியல் போன்ற பாடங்கள்கூட இல்லாமல் மாணவர்களுக்குப் பட்டம் வழங்குகின்றன. இத்தகைய மாணவர்கள் மேற்கண்ட பாடங்களின் அடிப்படை அறிவுகூட இல்லாமல் மேற்படிப்பு எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

ஒரு துறையில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் மற்ற துறைகளில் பயிலவேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பு பெறும்படி நமது கல்வித் திட்டம் அமைய வேண்டும். இதன்மூலம் எல்லாத் துறைகளிலும் மாணவர்கள் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதுடன், வேலை வாய்ப்புகளுக்குத் தனது துறையையே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். அதுமட்டுமின்றி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் அனைத்துத் துறைகளின் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியமாகும்.

வெளிநாடுகளில் ஆராய்ச்சித் துறையில் அதிக முன்னேற்றம் அடைவதற்கு அடிப்படைக் காரணம் இதுவே. அங்கே மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் அடிப்படை அறிவைப் பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து அரசு வரை மாணவ ஆற்றலை வளர்ப்பதிலும், பயன்படுத்துவதிலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். நம் நாட்டில் வகுக்கப்படும் கல்விக் கொள்கையும் இத்தகைய சூழலை எதிர் நோக்கி அமைய வேண்டும். கல்வியானது நமது நாட்டிற்குத் தேவையான மாணவர்களை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் நாம் இன்னும் 90-களில் வாழ்வதாகத்தான் தோன்றுகிறது.

கல்வியில் கடைப்பிடிக்கப்படும் பாரபட்சம் களையப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் வெளிவருகின்ற மாணவர்களின் ஆற்றலை எந்தத் துறையில் பயன்படுத்தலாம், எந்தத் துறையில் தேவை அதிகமிருக்கிறது எத்தகைய மாணவர்களை உருவாக்கவேண்டும் என்று அரசு திட்டமிட வேண்டும். இல்லையென்றால் இந்த மனித ஆற்றல், அயல்பணி ஒப்படைப்பு மூலம் வெளிநாடு செல்வதைத் தடுக்க இயலாது. நமது கல்வி நிறுவனங்களின் விளம்பரமே, திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியும் என்கிற ரீதியில் அமைந்திருப்பது கவலைக்குரிய ஒன்று.

புற்றீசலாய்ப் பெருகிவரும் கல்வி நிறுவனங்களும், சுயநிதிக் கல்லூரிகளும் தரமான மாணவர்களை நாட்டுக்காக உருவாக்குவதில் போட்டி போடவேண்டும். வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் நாட்டிற்குத் துரோகமிழைக்கின்றன என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 11,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; 438 அரசு மற்றும் தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளும், 565 பொறியியல் கல்லூரிகளும், 18 அரசு மற்றும் 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இவ்வாண்டு 7.04 இலட்சம் மாணவர்கள் "பிளஸ்-2' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 28,785 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெறப்பட்டன. மீதி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும், கலை-அறிவியல் கல்லூரிகளின் வாசல்களிலும் காத்துக்கிடக்கின்றனர் என்று நம்பலாம். இதில் எத்தனை லட்சம் மாணவர்கள் மேற்படிப்பைக் கைவிடுவார்கள் என்பதற்கு இதுவரை எந்தப் புள்ளிவிவரமும் நம்மிடம் இல்லை.

ஆண்டுதோறும் "பிளஸ்-2' தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் இவர்கள் அனைவரும் வேலையில் சேர்கின்றனரா, இவர்கள் நிலைமை என்னவாகும் என்பது பற்றி அரசோ அல்லது மக்களோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அரசு நிர்வாகத்தின் முக்கியப் பணி இங்கு தேவைப்படுகிறது.

மக்களின் தேடல் எந்தத் துறையில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பதுதான். எந்தத் துறையில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பதை விட, எந்தத் துறைக்கு மனிதஆற்றல் தேவைப்படுகிறது, எங்கு தேவையில்லாமல் மனிதஆற்றல் வீணாகிறது என்பதைக் கணிக்கவும், மாறுதலுக்கு உட்படுத்தவும், அரசு மற்றும் கல்வித்துறை முயலவேண்டும். நமது நாட்டிற்குப் பன்முகத்திறன் கொண்ட மனிதவளம் உருவாவது அரசின் திட்டமிட்ட செயல்பாட்டில் தான் அடங்கும். மருத்துவம் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் மட்டுமே நாட்டின் தேவையல்ல. நமது நாட்டிற்குக் கலை-அறிவியலிலும் வல்லுநர்கள் தேவை. வரலாற்று நிபுணர்கள் தேவை, புவி - தகவலியல், விவசாயம்-பாசனப் பொறியியல், உயிர் - தகவலியல் என்று ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு உருவாகும் மாணவர்களை ஆராய்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் பயன்படுத்துவது அரசின் கடமை. நமது நாட்டில் உருவாகும் மனித ஆற்றல் அன்னிய நாடுகளில் பணிபுரியச் செல்லுமானால் அது அரசின் செயல்படாத - அவலமான தன்மையை வெளிப்படுத்துகிறது.

இன்ஜினீயரிங் படிப்பின் மோகம்

வருடத்திற்கு சராசரியாக 7 லட்சம் மாணவர்கள் +2வில் தேர்ச்சி பெற்று மருத்துவம், மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், டிப்ளமோ போக மீதமுள்ளவர்கள் இன்ஜினீயரிங் படிப்பில் மேனேஜ்மென்ட் மற்றும் கவுன்சிலிங் மூலமாக வருடத்திற்கு 525 கல்லூரிகள் மூலமாக படிக்கின்றனர். இதில் வருடத்திற்கு சுமார் 1,25,000 மாணவர்கள் தமிழகத்திலிருந்து மற்றும் இன்ஜினீயர்களாக வெளிவருகின்றனர். எல்லா வசதிகளும், தகுதிகளும் பெற்றுள்ள கல்லூரிகளில் சேர மாணவர்களும், பெற்றோர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விரும்பும் பிரிவு, விரும்பும் கல்லூரி என தேர்வு செய்வதில் பெற்றோரும், மாணவர்களும் பகீரத பிரயத்தனமே செய்கின்றனர். ஆனால் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தீர்வும் அமைகிறது. இதுபோக சிலருக்கு விரும்பிய பிரிவு கிடைத்தும், விரும்பிய கல்லூரி கிடைக்காது, சிலருக்கு விரும்பிய கல்லூரி கிடைத்தும் விரும்பிய பிரிவு கிடைக்காது. இருந்தாலும் சிலர் ஏதோ கிடைத்ததே என்று கிடைத்ததைக் கொண்டு படித்துவிட்ட வருவோரும் உண்டு.

÷கல்லூரியைவிட்டு வெளிவரும் மாணவர்கள் அனைவருக்கும் காம்பஸ் எனும் வளாகத் தேர்வில் வெற்றி பெறுவதில்லை. ஐ.ஐ.டி. போல சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யுமளவிற்கு எல்லா கல்லூரிகளிலும் தகுந்த கட்டமைப்பு இல்லை என்பதே உண்மை. இதுபோக காம்பஸில் தேர்வானவர்கள் போக பாக்கி உள்ள அனைவருக்கும் கல்லூரியை விட்டு வெளியே வரும்போது வேலைவாய்ப்பு உள்ளதா? அதுவும் அவர்கள் படித்த துறையிலேயே உள்ளதா? ஏற்கெனவே கல்லூரி காம்பஸில் தேர்வானவர்களில் கூட அவரவர் படித்த படிப்பில் தேர்வானவர்கள் மிகச் சிலரே என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஏனெனில் படித்தது ஒன்று, தேர்வானது மற்றொன்று. மெக்கானிக்கல் முடித்திருப்பார் ஆனால் சாப்ட்வேர் கம்பெனிக்கு தேர்வாகியிருப்பார். அதைப்போல படித்தவர் அனைவருக்கும் அரசுத் துறைகளில் (மத்திய, மாநில) வேலைவாய்ப்பு என்பதும் சாத்தியமில்லாத விஷயம். படிக்கும்போதே சொந்தமாக தொழில் தொடங்கி நமக்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டும் என்று படிப்பவர்கள் எத்தனை பேர்? ஒருவழியாக தொழில் தொடங்க ஆர்வமுடன் வருபவர்களுக்கு, அரசு செய்யும் உதவிகள், அணுக வேண்டிய நபர்கள் என அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் போன்று ஒரே இடத்தில் நடைபெற்று மாணவர்களை கல்லூரிகளுக்கு அனுப்புவதைப் போல அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்களை தொடர்பு கொள்ள வசதிகள் செய்து கொடுத்தால் அவர்களுக்கும், மற்றும் நமது நாட்டின் எதிர்காலம் வளம்பெற செய்ய வசதியாக இருக்கும். இல்லையென்றால் இங்கு போ! அங்கு போ! என இழுத்தடித்தால் அவர்களின் ஆர்வம் கடைசிவரை நீண்டுபோகுமா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

÷வங்கித் துறையாகட்டும், அரசுத் துறையாகட்டும், காப்பீட்டு துறையாகட்டும், ஆட்சியர் மற்றும் இராணுவத் துறை அதிகாரிகள் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தாலே தேர்வெழுதி, தேர்ந்தவர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்! ஆனால் தற்போது நடப்பது என்ன என்றால் பெரும்பாலான இடங்களுக்கு இன்ஜினீயரிங் முடித்தவர்களே தேர்ச்சி பெற்று வருவதைப் பார்க்கிறோம். 

படித்த படிப்பில் தொடர்ந்து படிக்கும்போது அல்லது வேலை செய்யும்போது மட்டுமே எண்ணற்ற சாதனைகளை செய்ய முடியும் என்பதுதான் நிதர்சன உண்மை. ஆனால் நட ப்பது என்னவோ வேறுவிதமாக உள்ளது. கல்லூரிகளில் படிக்கும்போது அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடுகிறது. குறைந்த மதிப்பெண் பெறுபவர்களின் கதி என்ன? 40% முதல் 80% வரை பெறும் (மதிப்பெண்கள்) மாணவர்களை அவர்கள் தகுதிக்கேற்ப பயிற்சி கொடுத்து அவர்களையும் தகுதியுள்ள நிறுவனத்தில் சேர்க்க அரசோ, அல்லது தனியார் நிறுவனங்களோ அல்லது அந்தந்த கல்லூரிகளோ முன்வர வேண்டும். அதன் மூலமாக வேலைவாய்ப்பையும் உறுதி செய்ய முடியும் அல்லவா!

÷அளவுக்கதிகமான இன்ஜினீயரிங் கல்லூரிகள் இருப்பது, தரமான, தகுதியான மாணவர்களை உருவாக்க, வளமான தேசத்தை உருவாக்கவா? அல்லது நாம் இவ்வளவு தொகை செலவு செய்து கல்லூரியை கட்டிவிட்டோம்; வருடா வருடம் நமக்கு இவ்வளவு தொகை வரவு வரவேண்டும் என நிர்ணயம் செய்து கட்டப்பட்டுள்ளதா? என்று புரிய நமக்கு இன்னமும் எவ்வளவு காலம் ஆகுமோ? இன்ஜினீயரிங் படித்தவர்களில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதிகமா? அல்லது பெறாதவர்கள் அதிகமா? பெறாதவர்கள் அதிகம் என்றால் வேலைவாய்ப்புகள் குறைவா? அல்லது படித்தவர்களில் தகுதியானவர்கள் இல்லையா? பெரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அதிகாரிகள் செய்திகளில் பேசும்போது படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் தகுதியானவர்கள் குறைவு என்கிறார்கள்? ஏன் இந்த நிலை? இதற்கு யார் பொறுப்பு? தகுதியான கல்லூரிகளுக்கு தரச்சான்று, நிர்வாகத் திறன், தகுதி போன்றவற்றை நிர்ணயிக்கும்போது, தகுதி குறையும்போது யாரிடம் முறையிடுவது?

÷படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பை பெற்றுத் தந்தால் அவரவர் வாழ்க்கை தரம் உயர எதிர்காலம் சிறக்க வழி வகுக்கலாம். இல்லையென்றால் விளையாட்டு போட்டிகளில் முதலில் வரும் மூன்று பேருக்கு மட்டும் பரிசு அறிவித்துவிட்டு மற்றவர்களுக்க ஒன்றுமில்லை என்று சொல்வதுபோல் அமைந்துவிடும்.

ஆர். பாண்டியன், அணைக்கட்டுச்சேரி,

பெற்றோரே! கண்காணிப்பு தேவை!

காதல் புனிதமானது', "அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அருமை புரியும்' என்றெல்லாம் காதலுக்கு மரியாதை செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. காதல் தேவைதான். எங்கே, எதற்கு காதல் தேவை என்பதுதான் முக்கியம்.

முன்பெல்லாம் காதலுக்கு சிறிதளவுதான் எதிர்ப்பு இருந்து வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணத்தக்க வகையில் காதல் பிரச்னைகள் தலைதூக்கி வந்தன. இவற்றால் பெரிய அளவில் சமுதாய பிரச்னைகள் உருவாகவில்லை.

இன்றைக்கு பல்வேறு இடங்களில் காதல் என்பது சமூக பிரச்னைகளுக்கு தலையாய காரணகர்த்தாவாக மாறியிருப்பதுதான் வேதனை. காதல் தேவையா, இல்லையா என்ற உள்விவகாரத்தை ஆய்வு செய்வதால் பயனில்லை.

அதேசமயம், இன்றைய காலகட்ட காதல் எங்கே, எப்படி உருவாகி, எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதுதான் தலையாயப் பிரச்னையாக காணப்படுகிறது. ரெண்டும் கெட்டான் வயதான 16-க்கும் 20-க்கும் இடைப்பட்ட வயதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், காதல் என்ற வலையில் சிக்கி தங்களது எதிர்காலத்தை வீணாக்கி வருவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், காதல் என்றால் என்னவென்பதே அறியாமல் நண்பர்கள், தோழிகள் பெருமைபடப் பேசுவதை நம்பி, காதல் என்ற பெயரில் பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் தங்களது வாழ்க்கையைச் சீரழித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில், நண்பர் ஒருவரின் மகளான பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவி, குடும்ப நண்பர் ஒருவரிடம் கூறுகையில், "எனது வகுப்பறையில் படிக்கும் மாணவர்களில் குறிப்பிட்ட ஒரு மாணவன் மீது என்னை அறியாமல் ஆர்வம் ஏற்பட்டது.

அவனது நடவடிக்கைகள் சரியில்லாதபோதும், அவனை விட அழகான, நன்றாகப் படிக்கும் சில மாணவர்கள் இருந்தபோதும் அவனிடம் பழகவே எனது மனம் துடித்தது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.

இதனால், எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது' என்ற அந்த மாணவி, இந்த குழப்பத்திலிருந்து விடுபட ஆலோசனை வழங்குமாறு கூறியிருக்கிறார். அந்த நண்பரும் ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். ஆனாலும், அவரது மனதில் குழப்பம் நீடிப்பதாகவும், படிப்பில் முழு ஈடுபாடு காட்ட முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த மாணவி மட்டுமின்றி, இதே நிலையில் இவரது வயதுடையவர்கள் தவிப்பதை அறிய முடிகிறது. இதற்கு தற்கால திரைப்படங்கள் காட்சிகள், தொலைக்காட்சி தொடர்கள் என பொத்தாம் பொதுவாக கருத்துகளை கூறிவிட்டு ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் தப்பித்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றனர். தங்களது குழந்தைகள் காதல் பாதைக்கு செல்வதற்கு காரணம் என்ன என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் அறியாமலேயே இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்கின்றனர் கல்வியாளர்கள்.

முந்தைய காலத்தில் இருந்த கூட்டுக்குடும்ப கட்டமைப்பில் பெற்றோர் மட்டுமின்றி, பிற குடும்பத்தினரும் குழந்தைகளைக் கண்காணிப்பர். பல்வேறு வகையான ஆலோசனைகளும் கிடைக்கும். தவறி பாதை மாறிச் செல்லும்போது கண்காணித்து நல்வழிப்படுத்தவும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துவிட்ட நிலையில், தனிக் குடும்ப கட்டமைப்பில் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற சூழலில், குழந்தைகளை கவனிப்பதில் இருந்து பெரும்பாலான பெற்றோர் தவறிச் செல்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட, பெற்றோரின் கவனிப்பிலிருந்து குழந்தைகள் எப்படியெல்லாம் பாதை மாறிச் செல்கின்றனர். முக்கியமான விஷயங்களில் கூட பெற்றோர் விழிப்பாக இல்லாமல் போவதை இயக்குநர் சுட்டிக் காட்டியுள்ளார். இவர்களைப் போன்றவர்கள் காதல் என்ற பெயரில் செய்த தவறால் அநாதை குழந்தைகள் உருவாவதாக, அந்த திரைப்படத்தில் முடிவை கொண்டு சென்றிருந்தாலும், இருவரது பெற்றோரும் செய்யத் தவறும் சில கடமைகளை ஓரளவு தைரியமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் காதல் என்ற வலையில் வீழ்ந்து பாதை மாறிச் செல்வதற்கு பெற்றோரின் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடே முக்கிய காரணம் என்பதை புறந்தள்ளி விட முடியாது. தனிக் குடித்தன வாழ்க்கை முறையில் குழந்தைகள் பாதை மாறிச் செல்ல ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்றைய பணத் தேவை அதிகம் உள்ள சூழலில், அவற்றுக்காக ஓடுவதற்கே நேரமில்லாத நிலையில், குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு எங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது என பெரும்பாலான பெற்றோர்கள் கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது. பணம் தேவைதான். கோடிகோடியாக செல்வத்தைக் குவித்தாலும், அதற்கெல்லாம் மேலான குழந்தைச் செல்வத்தின் எதிர்காலம் முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். எத்தனை நெருக்கடிகள் இருந்தாலும், குழந்தைகளைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் பணியை ஒவ்வொரு பெற்றோரும் செய்து விட்டோமென்றால், அவர்களை நல்வழிப்படுத்தி விடலாம்.

கே.எஸ். பசும்பொன்முத்து, மதுரை.

வாழ்ந்து பாருங்கள்!

ஆரோக்கியத்தை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் அன்றாட சந்தோஷத்தை சாட்டிலைட் சானல்களிலும் அடகு வைத்துவிட்ட இன்றைய சமூகம் நிழலைத் தொடரும் நிஜமாக இருக்கிறது.

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தாலும் குழந்தைப் பிறப்பில் எப்போதும் ஏற்றத்துடன்தான் இருக்கிறது. விஞ்ஞானம் இன்று ஒவ்வொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து விட்டுதான் குழந்தையை வெளியில் எடுக்கிறது.

ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம் புகட்டப்படுகின்றன என்பது புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாக சமூகத்தில் ஆகிக் கொண்டிருக்கிறது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைப்படத்திற்காக தற்கொலை செய்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

பகட்டுப் படிப்பு, 12 மணி நேர அலுவல், கைபேசிக் காதல், கணிப்பொறி ஜாதகம் பார்த்து கல்யாணம் என இன்றைய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பணம் சம்பாதிக்கப் போய் நோய் பெற்று, நோயைத் தீர்க்கப் பணம் கொடுத்து என இன்றைய மனிதன் வேலைகளின் விளைவால் இறுதியில் கடன்பட்டே நிற்கிறான். இந்த மாதிரி சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமை கண்ணீரைத் தாண்டிய கொடுமை. 20 வருடங்கள் முன்பு வரை என் அம்மா, என் நண்பனின் அம்மா எல்லோரும் பல குழந்தைகளைப் பெற்று எடுத்தவர்கள். அத்தனையும் சுகப் பிரசவம். இன்று என் சகோதரியின் தோழிகளுக்காட்டும், நண்பர்களின் சகோதரிகளுக்காகட்டும் எனக்குத் தெரிந்த வரையில் சுகப் பிரசவம் என்பதே இல்லை.

ஏவுகணைகளைச் செவ்வாய்க்கு அனுப்பத் தெரிந்த இன்றைய விஞ்ஞானத்திற்கு ஒரு சிசுவை கர்ப்பத்திலிருந்து சுக முறையில் எடுக்கத் தெரியவில்லை. நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது என்பது அடுத்தடுத்த நோய்களுக்கு நாம் எடுத்து வைக்கும் படிக்கட்டு என்று சொன்னால் அது மிகையல்ல.

துரித உணவுகள் தமிழனின் சரிதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. நோய்களுக்குத் தீர்வு மருந்தல்ல. நோயாளியின் நடத்தை. குழந்தையின் பிறப்புக்கு தாய் கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய, குழந்தையின் பிறப்புக்கு தாய்க்கே கருவி தேவைப்படக் கூடாது. கர்ப்பத்தில் அவளுக்கு வேண்டிய முக்கிய மருத்துவம் ஆரோக்கியம் மட்டுமே. உடலுழைப்பு, தியானம், சக்தியிழக்காத காய்கறிகள், பழங்கள், கீரை இவையே வயிற்றிலிருக்கும் சிசுவை வலிமையானதாக்கும். எதையும் சுலபமாக அணுகும் மனம், சிரித்துப் பேசும் குணம் இவையிருந்தாலே நிச்சயமாக ஒரு பெண்ணால் சுகப் பிரசவம் என்னும் சிகரத்தை அடைய முடியும்.

இதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களின் உடம்பில் சுகப் பிரசவம் நிகழ வாய்ப்பில்லாத பல சிக்கல் நிலைகள் இருக்கலாம். அது வேறு. ஆனால், நம்மேல் நமக்கில்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும்?

உடற்பயிற்சிக் கூடம் சென்று உடம்பைக் குறைக்க நாம் மாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயார். ஆனால் ஒரு காசு செலவில்லாமல் ஒரு மணி நேரம் மைதானத்தில் தொடர்ந்து ஓடினால் சில மாதங்களில் உடம்பின் அத்தனைக் கொழுப்பும் இறங்கி அது நாம் இட்டக் கட்டளையை செய்யும். ஆனால், பகட்டாய் வாழ விரும்பும் மனிதன் அதை விரும்புவதில்லை.

பெண்களே! மாற்றுங்கள். நம்பிக்கை ஊசியை உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவிலும் ஏற்றுங்கள். உங்கள் உடற்பயிற்சியை துவங்குங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது அது இருக்கட்டும்.

நீரால் குளிக்கும் முன் வேர்வையால் உடல் கசடுகளைக் கழுவுங்கள். சிரித்து பேசுங்கள். ஓய்வு நேரத்தில் சோம்பேறியாக இருக்காமல் விளையாடியே பொழுதைப் பொன்னாக்குங்கள்.

கீரை, கேழ்வரகு, கம்பு, சோளம் - நம் உடல் நல வரலாறு. கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் இருந்து ஒதுக்காதீர்கள்.

அது உங்கள் கேச நிறத்தையும், பற்களையும் உங்களிலிருந்து ஒதுக்கி விடும். யோகம் வாழ்வின் முக்கிய ஆதாரம். வாழும் முறையை கற்றுக் கொண்டு நடக்காதீர்கள். நடந்து நடந்து கற்றுக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் எதிர்காலம்?

தமிழ்நாட்டிலுள்ள ஐந்தாறு பொறியியல் கல்லூரிகளில் நூற்றுக்கும் அதிகமான தனியார் கல்லூரிகளில், இந்த ஆண்டு குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்திருக்கிறார்கள். 50 சதவிகிதம் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையே இல்லை. ஒட்டு மொத்த சேர்க்கையில் (ஞஇ) மாணவர்கள்தான் அதிக இடங்களில் விண்ணப்பித்து இடம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்குதான் எஸ்.சி. மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் இன்னமும் ஏறத்தாழ 16,755 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலை வருவதற்கு காரணம் சரியான கட்டமைப்பு இல்லாத, கல்வித் தகுதி இல்லாத ஆசிரியர்கள், பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாகப் புரிய வைக்காதது இவைதான். வந்தேன், பார்த்தேன், கொடுத்தேன் என்று (அஐஇபஉ) போன்ற மைய அரசு அமைப்புகள் சகட்டுமேனிக்கு ஒப்புதல் வழங்கி வருவது இன்னொரு காரணம். இந்த ஆண்டு மட்டும் 27 பொறியியல் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 77,505 மாணவர்கள் இடங்கள் சேர்க்கை பெறவில்லை.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளை பார்த்தால் அதிகபட்ச மாணவர்கள் சேர்க்கை பெறுகிறார்கள். இதில் பெருவாரியான கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சதவீதத்தில் ஒரு சீட்டிற்கு அரைகோடி ரூபாய் என கொள்ளையடிக்கிறார்கள். சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒரு சில கல்லூரிகளுக்கு முதலாண்டு சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படியிருந்தும் மறுப்பு தேதிக்கு பின்னால் மாணவர்களிடத்தில் லட்சக்கணக்கில் நன்கொடை பெற்றிருக்கிறார்களாம். இது குறித்து ரகசிய புலன் ஆய்வு செய்ய வேண்டும்.

இப்போது கொடுத்த நன்கொடை தொகையை பெற முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றார்கள். அரசு கல்லூரிகளுக்கு கூடுதல் சீட் வழங்கப்பட்டிருந்தும், இந்த மாணவர்களை அரசு ஏன் அங்கு மாற்றவில்லை? கட்டிய தொகையை ஏமாற்ற முற்படும்போது, தேர்வுகளில் (ஙஇஐ)அனுமதிக்காதபோது, மாணவர்கள் கொதிப்படைந்து கல்லூரிக்கு சேதம் விளைவிக்க முற்படுகின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

சரியான ஆய்வு செய்யாமல் மருத்துவக் கவுன்சில் உரிமம் வழங்கியதுதான் இதற்கு காரணம். ஒரு கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கும்போது குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் எல்லா வகை பிரிவுகளுக்கும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எல்லா துறைகளிலும் எல்லா உபகரணங்களும் வாங்கியிருக்க வேண்டும். நூலகங்களில் எல்லா மருத்துவப் பிரிவுகளுக்குரிய இந்திய வெளியீடு, பன்னாட்டு வெளியீடு போன்ற எல்லா வகையான புத்தகங்களும் மற்றும் மெடிக்கல் கவுன்சில் ஆராய்ச்சி புத்தகங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆய்வு நேரத்தின்போது பிற மாநில கல்லூரிகளில் வேலை செய்யும் டாக்டர்கள், சர்ஜன்கள், செவிலியர்கள் போன்றவர்கள் ஒரு சில நாள்களுக்கு மட்டும் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றார்கள்.

இவர்கள் எங்கு பணியாற்றி இருந்தாலும் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையில் இருந்து செயல்படும் பட்சத்தில் அவர்கள் சில ஆண்டுகள் பிராக்டிஸ் செய்ய தடை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றும் கல்லூரிகளுக்கு உரிமம் தடை செய்வதில் தவறில்லை. அதிகமான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த அறிஞர்கள் வயது உச்சவரம்பு பார்க்காமல் கல்லூரியில் பணியாற்ற, விதிமுறை தடைகள் நீக்கப்பட வேண்டும். உயரிய ஆராய்ச்சி சாதனங்கள், சோதனைக்கூட உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கவேண்டும். அவர்கள் கட்டியிருக்கும் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றார்கள். எத்தனை அறுவை சிகிச்சை நடந்தேறியது நோயாளிக்கு தந்த சிகிச்சை எண்ணிக்கை அறிக்கை கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மைதானா என்பதை ஆய்வுக் குழு உறுதி செய்யவேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் போதனைத் திறன், செய்முறை சோதனை திறன் எங்ஙனம் உள்ளது என (ச்ங்ங்க்க்ஷஹஸ்ரீந்) மாணவர்களிடம் கேட்டறிய வேண்டும். அதன் பின்னர்தான் ஆசிரியர்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். மருத்துவ கல்லூரிகள் நிலை இப்படி இருக்கும்போது மருத்துவம் சார் படிப்புகள் எந்த நிலையில் உள்ளது என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 20க்கு 30 அடியில் 500 மாணவர்கள் அல்லது 600 மாணவர்கள் படிக்கின்றார்கள்.

நர்சிங் பாடம் நடத்த இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழம் தவிர வேறு எவருக்கும் உரிமம் தர சட்டத்தில் இடமில்லை. அல்லது மனிதவள மேம்பாட்டு துறை அனுமதித்திருக்க வேண்டும். நிலைமை அப்படி இருக்க ட்ங்ஹப்ற்ட் ஹள்ள்ற் பயிற்சி வகுப்பு என தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தி உரிமம் பெறுகின்றார்கள். ஆனால் மாற்று சான்றிதழ் வழங்கும்போதுட்ங்ஹப்ற்ட் ஹள்ள்ற் பக்கத்தில் சன்ழ்ள்ண்ய்ஞ் என எழுதி வழங்குகின்றார்கள். 10-வது பெயில், 10-வது பாஸ் என சேர்த்துக்கொண்டு வெள்ளை உடை அணியவைத்து ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் என வசூல் செய்கின்றனர்.

1000 மாணவிகளை ஒருசேர கொண்டு கால்நடைகளை அடைத்துவைப்பதுபோல் அடைத்து வைத்து பயிற்சி என்ற பெயரில் பல லட்சம் பணம் பார்க்கின்றனர். ள்ற்ன்க்ஹ் ஸ்ரீங்ய்ற்ழ்ங் அல்லது ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ஸ்ரீர்ப்ப்ங்ஞ்ங் உரிமம் வழங்குவதற்கு முன் பல்கலைக்கழகம் ஏன் ஆய்வு மேற்கொள்வதில்லை? தொலைதூர கிராமங்களில் இருந்து வரும் மாணவியர்களுக்கு ஆய்வுக்கூடம், நூலகம், விளையாட்டுத்திடல், பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏன் செய்துதரப்படுவதில்லை? எல்லாவற்றையும்விட அரசு வேலை தேடித் தரும் நிறுவனம் இவர்களைப் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை.

அது ஏன்? ஒருசில இரண்டாம் தர மருத்துவமனைகளில் ரூ.3 ஆயிரத்துக்கு வேலை செய்ய அடிமைகளைப்போல பயன்படுத்துவார்கள். நம் குழந்தைகள் எதிர்காலம் எங்கே போகிறது என பெற்றோர்கள் உணரவேண்டாமா? சேர்க்கும் கல்வி கூடத்தில் எந்த படிப்புகளுக்கு உரிமம் பெற்றிருக்கின்றார்கள் என்ற சான்றிதழை வாங்கிப் பார்க்க வேண்டும்.

÷கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதி, கழிவறை வசதிகள், நூலகம், ஆய்வுக்கூடம், உரிமம், சான்றிதழ் மற்றும் இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்ற ஆதாரப் பட்டியலை வினவி பார்ப்பதற்கு பெற்றோர்களுக்கு உரிமை உண்டு. பார்த்தாக வேண்டும். அப்படி பார்த்தால்தான் உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலம் உண்டு.

ஆடம்பரம் வேண்டாம்; அன்பு வேண்டும்!

உறவினர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் நலம் விசாரிக்கும் போது மனதில் ஒரு நெகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை.

உறவினர் வீட்டில் வயது வந்த மகனோ, மகளோ இருந்தால் நம்ம வீட்டு விருந்து சாப்பாடு எப்போது? என உரிமையோடு நாம் கேட்பதுண்டு. உங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறதா? என்பதை அறிவதற்காக இப்படிக் கேட்பதுண்டு.

சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்வரை கிராமங்களில்தான் பெரும்பான்மை திருமண நிகழ்வுகள் நடைபெறும். அவரவர் வீடுகளே திருமண மண்டபமாக அழகு பெறும்.

இங்கே நடைபெறும் திருமணங்களின் அழகு அதன் எளிமையில்தான் இருந்தது. வாசல்களில், தெருவின் முன்பகுதியில், வீட்டின் தோட்டப்புறத்தில் பசுந்தழைகளால் பந்தல் போட்டு அலங்கரிப்பர். அந்த அழகு தனியழகு. உற்றார் உறவினர் அனைவரும் உள்ளன்போடு வந்திருந்து திருமண நிகழ்வை நடத்தி முடிப்பார்கள். அதிலொரு சுகமுண்டு.

சமையல் வேலையிலிருந்து உணவுப் பரிமாறும் பணிகளையும், திருமணம் சார்ந்த பிற வேலைகளையும், அவரவர் பொறுப்பேற்றுக் கொண்டு முன்னின்று செய்வார்கள். திருமண நாளுக்கு இரண்டு நாள் முன்னதாகவே உறவினர்கள் வந்திருந்து பணிகளைத் தொடங்கி விடுவார்கள். திருமண வீடு மகிழ்ச்சியின் அடையாளமாக விளங்கும்.

திருமணத்தில் நடைபெறும் விருந்தில் அன்பு, மரியாதை, உறவு, உரிமை, சுவை அத்துணையும் சேர்ந்திருக்கும். திருமண வீட்டில் சாப்பிடச் செல்வதும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

காலம் மெல்ல, மெல்ல கடந்து திருமணங்கள் கிராமத்தைப் புறக்கணித்து விட்டன. அனைத்து வசதிகள், வாய்ப்புகள் இருந்தாலும் நகரத்தில் திருமணம் நடைபெறுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

இன்றைய திருமணங்களில் ஆடம்பரத்திற்கு மட்டுமே முதலிடம் தரப்படுகிறது. விருந்துக்கு மிகப் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. பரிமாறப்படும் உணவின் தன்மையில் தன் செல்வாக்கு, புகழ், பெருமை, செல்வச் செழிப்பு வெளிப்படும் என்னும் தவறான சிந்தனை வலம் வருகிறது.

திருமணத்திற்கு வந்தவர்களும் வந்தோம், பார்த்தோம், அன்பளிப்பு தந்தோம், சாப்பிட்டோம், தாம்பூலம் பெற்றோம் இதற்கு மேல் வேலை ஏது? என வந்த நோக்கத்தை மறந்து சிட்டாய்ப் பறக்கிறார்கள், நின்ற இடத்திலிருந்தே வாழ்த்தினை வீசி எறிந்துவிட்ட கடமை உணர்வும் முடிந்த நிலையில் பயணித்து விடுகிறார்கள்.

விருந்துகளில் பரிமாறப்படும் உணவு தற்காலங்களில் செயற்கை சுவை ஊட்டப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலை நிரம்ப பரப்பியுள்ள உணவில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தொட்டுவிட்டுப் பெரும் பகுதி உணவை வீணாக்கும் அவலநிலையை எல்லாரும் அறிவர்.

பட்டினிக் கிடக்கும் பல வயிறுகளின் தஞ்சம் புகா உணவுகள் குப்பைமேட்டிற்குச் சென்று விடுகிறது. இலட்சக் கணக்கில் உணவுக்காக செலவிட்டு அதில் பாதியளவு வீணாக்கிச் சீரழைக்கும் அறியாமையிலிருந்து சமுதாயம் இன்னமும் விடுபடவில்லை.

புகழின் ஏக்கம், மரியாதை மயக்கம், பெருமித தள்ளாடல், ஆடம்பர அறியாமை இவைகளிலிருந்து திருமணங்கள் விடுபட வேண்டும். எளிமை, உரிமை, உறவு, நட்பு என்னும் அடிப்படை பண்புகள் வேரூன்ற வேண்டும்.

இயல்பான பண்புகள் மீண்டும் மலர வேண்டும். அந்த மலர்ச்சியில் நம் வீட்டுத் திருமணங்கள் மங்கலமாய் அமைய வேண்டும். இல்லையேல் மங்கலம் மங்கியதாய் ஆகும் சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம்.

அறிவு தந்த மன்றங்கள்

இயற்கையை ஆராதிக்கும் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் ஒரு முறை விருந்தினர் ஒருவருக்கு தம் வீட்டைச் சுற்றிக் காட்டியபோது நூலகத்திற்கு அழைத்துச் சென்றாராம். அங்கிருந்த நூல்களை எல்லாம் காட்டிவிட்டு, "இதுதான் என் நூலகம், ஆனால் என் படிப்பெல்லாம் இதற்கு வெளியிலேதான்' என்றாராம். அவர் இயற்கையிலிருந்து பாடம் படிப்பதைத்தான் அப்படிச் சொல்லியுள்ளார். அதுபோல மாணவர்கள் வகுப்பறையில் கற்பதைவிட அதிகமாகக் கற்கும் இடங்களாக கல்வி நிலையங்களில் இருந்த பல்வேறு மன்றங்கள் சில ஆண்டுகளுக்கு முன்புவரை விளங்கின.

அந்நாளில், வகுப்பில் பாடம் தொடர்பான நூல்களைக் கற்றார்கள். அரசியல் நிலை, தமிழுணர்வு, ஆங்கிலத்தின் அழகு, பொது அறிவு ஆகியவற்றை தங்கள் கல்வி நிலையங்களில் இருந்த மன்றக் கூட்டங்களில் அறிஞர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளால் பெற்றார்கள். சில பொழுது வகுப்பறையில் கேட்டிராத அரிய செய்திகளை இம்மன்றங்களிலிருந்து அறிந்துகொண்டார்கள். அக்கூட்டங்கள் படிப்பினைப் பாதிக்காத வகையில் பெரும்பாலும் வகுப்பு முடிந்தபின் நிகழ்ந்தன.

முன்னாளில் சென்னைக் கல்லூரிகளில் பயின்றவர்கள் ராஜாஜி, பெரியார், சி.சுப்பிரணியம், அண்ணா, நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் பேச்சை அடிக்கடி கேட்டு அரசியல் அறிவு பெற்றார்கள். சிதம்பரநாதன் செட்டியார், ம.பொ.சி., கி.வா.ஜ., அ.ச. ஞானசம்பந்தம் போன்றோர் பேச்சுகளைக் கேட்டு சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற தமிழ்க் காப்பியங்களின் சிறப்பையும் தமிழின் வளத்தையும் அறிந்து மகிழ்ந்தார்கள்.
தேவநேயப்பாவாணர், குன்றக்குடி அடிகளார் போன்றோர் பேச்சுகளால் தமிழுணர்வு பெற்றார்கள். கண்ணதாசன், அகிலன் போன்றோர் பேச்சுகளைக் கேட்டுப் படைப்பிலக்கியத்தில் ஆர்வம் கொண்டார்கள். செüந்தரா கைலாசம் பேச்சைக் கேட்டு இலக்கிய இன்பத்தில் திளைத்தார்கள். திருக்குறளார் முனுசாமி பேச்சைக் கேட்டுக் குறளின் பெருமையை அறிந்ததோடு குலுங்கிக் குலுங்கிச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

அப்பெருமக்கள் மேடையிலும் உரையாடலிலும் சொன்ன கருத்துகளை அடுத்த நாள் மாணவர்கள் தங்களுக்குள் விவாதித்தார்கள். அவ்வப்பொழுது எண்ணி அசைபோட்டு மகிழ்ந்தார்கள்.

ஒருமுறை தம் பேச்சை முடித்த கவிஞர் கண்ணதாசன் காரில் ஏறுவதற்கு முன்பு ஒரு வட்டமான பெட்டியைத் திறந்து மாத்திரைகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். வழி அனுப்புவதற்காக அருகில் நின்ற கல்லூரி முதல்வர், ""என்ன இவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறீர்கள்?'' என்று வியப்போடு வினவினார். கண்ணதாசன் சிரித்துக்கொண்டே, ""இப்பொழுது மாத்திரையில்தான் என் யாத்திரையே இருக்கிறது'' என்றார். கவிஞர் தம் நலக்குறைவையும் இலக்கிய நயத்தோடு சொன்ன முறையைக் கேட்டவர்கள் நெடுநாள் அது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா பேச வந்தபோது மாணவத் தலைவர் "இங்குக் கற்றது எதற்காக" என்னும் தலைப்பில் அண்ணா உரைநிகழ்த்துவார் என்று அப்பொழுது தலைப்பை அறிவிக்க, அவர் அழகாகப் பேசியது ஆண்டுகள் பல கழிந்த பின்னரும் நெஞ்சில் நீங்காமல் இருக்கிறது.

ஆங்கிலத்தில் உரையாற்றியவர்களும் மாணவர்களின் நிலை அறிந்து எளிமையாகப் பேசினார்கள். அண்ணாவின் ஆசிரியராகத் திகழ்ந்த ஆங்கிலப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஒரு கல்லூரியில் விளையாட்டு விழாவில் சொற்பொழிவு நிகழ்த்த வந்திருந்தார். அது இரண்டாண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்ட கல்லூரி. ஆசிரியர்கள் அனைவரும் இருபத்தைந்துக்கும் குறைந்த வயதினர். முதல்வராக இருந்தவருக்குச் சுமார் நாற்பது வயது. பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்தில் "மிக இளமையான கல்லூரி இளமையான மாணவர்கள் இளமையான ஆசிரியர்கள் அப்படி ஒன்றும் அதிக வயதாகிவிடாத முதல்வர்' என்று பேச்சைத் தொடங்கிய பொழுது மாணவர்கள் அனைவரும் ஆரவாரித்து அவருடைய பேச்சாற்றலை எண்ணி மகிழ்ந்தார்கள்.
தேசியவாதியும் சிறந்த ஆங்கிலப் பேச்சாளருமான செங்கல்வராயன் ஒரு கல்லூரியில், "இன்றைய மாலை உங்களிடையே இருப்பதில் பெருமகிழ்ச்சி. தலைவர் அவர்களே, எனக்கு நீங்கள் தலைப்பு ஏதும் தரவில்லை. எதைப்பற்றிப் பேசுவது? பொருளாதாரம் பற்றிப் பேசலாம் என்றால் அது சப்பென்று இருக்கும்: அரசியல் பேசலாம் என்றால் அது ஆபத்தானது: உலக அமைதியைப் பற்றிப் பேசலாம் என்றாலோ அமைதி அக்குவேறு ஆணிவேறாகச் சிதைந்து கிடைக்கிறது' என்று பேசத் தொடங்கியபோது மாணவர்கள் எழுப்பிய கையொலி அடங்க நெடுநேரம் ஆயிற்று.

இராஜாஜி, பெரியார், நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர் போன்றவர்கள் தங்கள் கல்லூரிக்கு வந்தபோது அவர்களை அருகில் சென்று கண்டும் சில பொழுது அவர்களோடு பேசியும் மகிழும் அரிய வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தன. தங்கள் ஆசிரியர்களுள் சிறந்த சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் பேசியபோது இத்தகைய ஆசிரியர்களிடம் பயிலும் பேறு பெற்றோமே என்று மகிழ்ந்தார்கள். சிலர் தாங்களும் அவர்களைப் போல எதிர்காலத்தில் வரவேண்டும் என்னும் ஆர்வம் கொண்டார்கள். அவர்கள் பேசும் முறையைக் கூர்ந்து நோக்கி அம்முறையில் பேசிப் பழகினார்கள். சிலர் தங்கள் குரலை அவர்கள் குரல் போல மாற்றிக்கொண்டு பேச முயன்றனர்.

மாணவர்களின் பேச்சு தலைவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியதும் உண்டு. 1955 ஆம் ஆண்டு பச்சையப்பன் விடுதி விழாவில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கலந்து கொண்டார். அப்பொழுது மாணவத் தலைவராக இருந்த திருப்பத்தூர்ப் பேராசிரியர் பா. நமசிவாயம் பாராட்டுரை வழங்கினார். அவர் பேச்சைக் கேட்ட பின் எப்பொழுதும் கல்லூரி விழாக்களில் ஆங்கிலத்திலேயே பேசும் அமைச்சர் தம் பேச்சை, கல்லூரி முதல்வர் அவர்களே என்று விளித்து முதன்முதலாகத் தமிழில் பேசத் தொடங்கினார். மாணவர் பேச்சு தம்மை மாற்றிவிட்டதாகவும் இனித் தாம் கல்லூரிகளில் தமிழிலேயே பேசப் போவதாகவும் கூறினார். அண்ணா தாம் படித்த கல்லூரியில் ஒரு மாணவன் பேச்சைக் கேட்டு அமைச்சர் தமிழில் பேச உறுதி பூண்ட செயலைப் பாராட்டி அடுத்த வாரம் தனது "திராவிட நாடு' பத்திரிகையில் எழுதினார். சில நாள்களுக்குப் பின் தெற்கே ஒரு கல்லூரியில் அமைச்சர் சி. சுப்பிரமணியம் தமிழில் பேசத் தொடங்கியபோது மாணவர்கள் ஆங்கிலம் ஆங்கிலம் என்று குரல் கொடுக்க அதனைப் பொருட்படுத்தாமல் தமிழிலேயே பேசி முடித்தாராம்.

மன்றங்கள் மாணவர்கள் திறமையை வளர்தன. ஆசிரியர்கள் அணிக்கு தலைமை தாங்க மாணவர்கள் துணைப் பேச்சாளர்களாக அமைந்து விவாதம் புரிந்தார்கள். அம்மன்றங்கள் பல்வேறு போட்டிகளை நிகழ்ந்திப் பரிசுகளும் சுழற் கோப்பைகளும் வழங்கின. இதனால் மாணவர்கள் வகுப்பு இல்லாத நேரங்களில் வீண் வம்புகளில் ஈடுபடுவதற்கு நேரமின்றி ஏதோ ஒரு போட்டிக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இன்று பெரும்பாலான கல்வி நிலையங்களில் மன்றங்கள் இல்லை. கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா போன்றவற்றை முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தப் பேராசிரியர் ஒருவர் நன்றியுரை கூறத் தாங்களே நடத்தி முடித்துவிடுகிறார்கள். மாணவர்க்குரிய திடலில் ஆசிரியர்கள் அத்துமீறிப் புகுந்து பயிற்சி பெறுகிறார்கள்

இந்த நிலை ஏன்? மன்றங்களுக்கு தேர்தல் நிகழும்போது வன்முறை நிகழ்வதும், மாணவத் தலைவர்கள் அரசியல் சார்புடையவர்களாக அமைந்து தட்டிக் கேட்க முடியாத வகையில் செயற்படுவதுமே இவை முடங்கியதற்குக் காரணங்கள் என்கிறார்கள்.

தேர்தல்களில் மாணவர்களிடையே மோதல் நிகழ்வதும், எழுதுகோல் பிடிக்கும் கைகள் கத்தியையும் தடியையும் எடுத்துத் தாக்கிக்கொள்வதும், அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக மாறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே. அதற்காக மன்றங்களைக் கலைத்துவிடுவதா? ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு மாணவப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவர்களைக்கொண்டு மன்றங்களுக்குரிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யலாம். அவர்களை பேராசிரியர்களின் மேற்பார்வையில் செலவுகளைச் செய்யுமாறுகட்டுப்படுத்தலாம்.

மின்சாரம் எதிர்பாராமல் பாய்ந்து ஆளைத் தூக்கி எறிந்துவிடுகிறது என்பதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமா? நெருப்புச் சுட்டுவிட்டது என்பதற்காக அடுப்பைப் பற்ற வைக்காமல் விடுகிறோமா? மாணவர் மன்றங்களினால் சில சிக்கல்கள் உண்டாகின்றன என்பதற்காக அவற்றை மூடுவது சரியான நடவடிக்கை ஆகாது.

மாணவர்களிடையே மொழியுணர்வு, மொழி அறிவு, இலக்கிய ஆர்வம், அரசியல் தெளிவு, தலைமைப் பண்பு முதலியவை வளர்வதற்கும் அவர்கள் ஓரளவு திசைமாறாமல் இருப்பதற்கும் வாய்ப்பளிக்கும் மன்றங்களை இயங்கச் செய்வது இன்றியமையாத தேவை. மன்றங்களில் அறிஞர்களின் உரைகளைக் கேட்டு மாணவர்கள் மகிழும் நாள் எந்நாளோ?

கட்டுரையாளர்: தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு), பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

காதலுக்கு மரியாதை!

இந்திய கலாசாரத்தைப்போல் வேறெங்கும் குடும்ப அமைப்புகளும், கணவன் - மனைவி உறவு முறைகளும், போற்றப்படவில்லை என்னும் எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. அதுவும் தற்போது நம்மில் சிலர் அமெரிக்கக் கலாசாரம் என்றாலே, "யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் எப்படியும் வாழலாம் என்பதே' என்றெண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த எண்ணத்தைத் தகர்த்தெறியும் வகையில் ஒரு வழக்கு அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தின் உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் முடிக்கப்பட்டது.

 ஷாஜகான் மட்டுமே மனைவிக்காக தாஜ்மஹால் கட்ட முடியும் என்பதையும், அமெரிக்காவில் குடும்ப அமைப்புகளுக்கும், அறம் சார்ந்த இல்லற வாழ்க்கைக்கும் மதிப்பில்லை என்னும் கருத்தியலையும், அந்த வழக்கு பொய்ப்பித்துக் காட்டியது. அந்த வழக்கின் சாராம்சம்: அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஸ்டீவென்சன். அந்நகரத்தில், பிராட் தெருவில், கதவு எண் 202-இல் தன் அன்பு மனைவி பாட்சி ரூத் டேவிஸ்-úஸாடு 35 ஆண்டுகளுக்கு மேலாக ஜேம்ஸ் டேவிஸ் என்பவர் வசித்தார். ஜேம்ஸ் டேவிஸ், தனது மனைவி பாட்சியை சந்தித்தபோது, அவருக்கு வயது 11. பாட்சிக்கு வயது ஏழு. அச்சந்திப்பிற்குப் பின், சில ஆண்டுகள் வளர்ந்த நட்பு, காதலாகி, கனிந்து, திருமணத்தில் முடிந்து, காதல் இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்த 48 ஆண்டு கால வாழ்க்கையில், அவ்விருவரும் 35 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த இல்லம் தான் அவ்வில்லம்
 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் நாள் பாட்சி ரூத் டேவிஸ் காலமானார். அவர் காலமாகும் முன், தன் கணவன் டேவிஸிடம், தான் காலமானபின் தன்னை அந்த வீட்டிலேயே புதைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். எனவே ஜேம், டேவிஸ், 2009 ஏப்ரல் 19-ஆம் நாள் ஸ்டீவென்சன் நகராட்சிக்கு ஒரு மனு செய்தார். அந்த மனுவைப் பரிசீலனை செய்யக் கோரி அந்நகராட்சியின் ஆட்சிமன்றக்குழு, அம்மாவட்டத்தினுடைய சுகாதாரத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியது.

 ஒருவரது வசிப்பிடத்திலிருந்து 35 அடியாவது கல்லறை பூமி தள்ளி இருக்க வேண்டுமென்ற காரணத்தால், ஜேம்ஸ் டேவிஸ் தன்னுடைய நுழைவாயில் மண்டபத்தை இடித்தார். அவரது மனுவைப் பரிசீலித்த மாவட்ட சுகாதாரத்துறை ஏப்ரல் 30-ஆம் நாள் "சுகாதாரத் துறையைப் பொறுத்த அளவில், அக்கல்லறையின் அமைவிடத்திற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை' என்று தெரிவித்தது.

 எனவே, ஸ்டீவென்சன் நகரின் நகராட்சிக்குழு, 2009 மே 14-ஆம் நாளன்று கூடி, அப்பொருள் பற்றி விவாதித்தது. சுகாதாரத் துறையினரிடமிருந்து எவ்விதமான மறுதலிப்பும் இல்லையென்ற போதிலும், அக்கம் பக்கம் குடியிருப்போரின் ஆட்சேபணைகள், அந்த இடத்தின் சொத்துகளின் சந்தை மதிப்பு குறையக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதித்த ஆட்சிமன்றக்குழு, அம்மனுவை நிராகரிப்பது என்று முடிவு செய்தது.

 இதைத்தவிர, ஜேம்ஸ் டேவிசின் காலத்திற்குப் பின்னால், ஒருவேளை அந்தக் கல்லறையைப் பராமரிக்கும் சுமை மாநகராட்சிக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் ஆட்சிமன்றக் குழுவினரிடம், மேயரால் தெரிவிக்கப்பட்டது. எனவே, மே 14, 2009 அன்று ஜேம்ஸ் டேவிசின் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சிக் குழுவினரின் தீர்மானத்தை முற்றிலும் புறக்கணித்து விட்டு, ஜேம்ஸ் டேவிஸ் 2009 மே 23-ஆம் நாள் தனது மனைவியின் உடலை தனது சொந்த வீட்டில் முகப்பு மண்டபம் இருந்த இடத்தில், வீட்டின் தோட்டத்திற்குள் புதைத்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன மாநகராட்சிக்குழு, ஜாக்சன் மாவட்டத்தின் உலா நடுவர் குழுவின் முன் (சர்க்யூட் கோர்ட்) ஒரு வழக்கைத் தொடுத்தது.

 அந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள், மாநகராட்சிக்குச் சாதகமாக ஒரு தீர்ப்பை வழங்கியது. தன்னுடைய சொந்தச்சொத்து என்பதாலேயே அச்சொத்தை இடுகாடாக மாற்றக்கூடிய அதிகாரம் சொத்தின் உரிமையாளருக்கு இல்லை என்றும், ஒட்டுமொத்த சமூக நலனைக் கருத்திற்கொண்டு நகராட்சிக்குழு எடுத்த முடிவு சரியானதென்றும் தீர்ப்பளித்த நீதிமன்றம், 30 நாள்களுக்குள் ஜேம்ஸ் டேவிஸ் தனது மனைவியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி முறையான இடுகாட்டில் புதைக்க வேண்டுமென்ற தீர்ப்பை வழங்கியது.

 அத்தீர்ப்பை எதிர்த்து ஜேம்ஸ் டேவிஸ் அலபாமா மாநிலத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம் மேல்முறையீட்டு மனுவை, "விசாரிக்கத் தகுதியற்ற மேல்முறையீடு' என்று கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வருடம் மே மாதம் 4-ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. உடனே, ஜேம்ஸ் டேவிஸ், அலபாமா மாநிலத்தின் உச்சநீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீட்டைத் தொடுத்தார்.  உச்சநீதிமன்றமும் அதை "விசாரிக்கத் தகுதியற்ற மேல்முறையீடு' என்று கூறி, 2013 அக்டோபர் 11-ஆம் நாளன்று தள்ளுபடி செய்தது. இத்தீர்ப்பைப் பற்றிய செய்திக் குறிப்பு, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அக்டோபர் 22-ஆம் நாள், ""வருவது வரட்டும் - வீட்டின் முகப்பு வெளியில்தான் மனைவிக்குக் கல்லறை'' என்ற தலைப்பில் சில சுவையான தகவல்களோடு வெளியானது.

பெருத்த பொருட்செலவிற்குப் பின், மூன்று  நீதிமன்றங்களில் தோல்வியைத் தழுவிய ஜேம்ஸ் டேவிஸ், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப்போல் ஒரு புது வழியைக் கையாள யோசித்திருக்கிறார். அவர் தனது மனைவியின் உடலை மாநகராட்சி அனுமதியோடு மின்சார எரியூட்டு மையத்தில் எரித்துவிட்டு, அதன் சாம்பலை ஒரு குடத்திலிட்டு, வீட்டிற்குள் அதே இடத்தில் புதைத்து விடலாம் என்றும், அப்படிச்செய்தால், நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பிரபல வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில், ஜேம்ஸ் டேவிஸ் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அந்த அறிவுரையைப்பரிசீலனை செய்யும்போது, ஜேம்ஸ் டேவிஸ் குறிப்பிட்டார்: ""உயிருடன் இருக்கும்போது எரியூட்டுவதைப் பற்றி என் மனைவி அச்சப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் தற்போது எரியூட்டுவது அவளுக்கு எந்த வலியையும் தராது என்று எண்ணுகிறேன்''.

 வழக்குரைஞர்கள்தான் நீதிமன்ற தீர்ப்பை முறியடிப்பதற்காக இப்படியொரு உத்தியை டேவிஸ்க்கு கொடுத்தார்கள் என்றால், இரண்டு பாதிரியார்கள் இன்னொரு விதமான உத்தியை அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவருடைய வீட்டை தேவாலயமாக மாற்றிவிட்டால், ஞானஸ்நானங்கள், திருமணங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள் அனைத்தையும் சட்டப்படி அந்த இடத்தில் செய்யும் உரிமை அவருக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

 தற்போது 74 வயதாகும் ஜேம்ஸ் டேவிஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே, தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஒரு குச்சியை நட்டு, அதில் ஒரு பலகையில் கீழ்க்கண்ட வாசகங்களை எழுதியிருந்தார்: "நான் அவளைத் தோண்டி எடுக்கப் போவதில்லை. அவளை அமைதியாக உறங்க விடுங்கள்'.
 2009 ஏப்ரல் 18 அன்று தன் மனைவி இறந்தது முதல் இன்றுவரை, தங்களது படுக்கை அறைக்கே போகாமல், டேவிஸ் தினமும் சாய்வு நாற்காலியிலேயே உறங்குகிறார். தனது வழக்கு விசாரணையில் இருந்தபோது, மாநகராட்சியின் முடிவை மாற்றும் எண்ணத்தில், டேவிஸ், மேயர் பதவிக்காக தேர்தலிலும் போட்டியிட்டுப் பார்த்தார்.

 நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், வருத்தத்தோடும், பெருமையோடும் டேவிஸ் சொன்னார்: "எங்களைப் போல் காதலர்கள் இதுவரை இருந்ததில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கவே படைக்கப்பட்டவர்கள்'. தன் மனைவியைப் புதைத்த இடத்திற்கு அருகிலேயே, ஜேம்ஸ் டேவிஸ், தனக்கும் ஒரு கல்லறையைத் தயாரித்து விட்டார்.

 தனது ஆட்சியின் ஆளுமைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் எங்கு வேண்டுமானாலும் தனது அன்பு மனைவியாகிய மும்தாஜுக்குக் கல்லறை கட்டும் அதிகாரம் ஷாஜகானுக்கு இருந்தது. எந்த மாநகராட்சியின் ஆட்சிமன்றக் குழுவும், ஷாஜகானுக்கு அன்று அனுமதி மறுத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி மறுத்திருந்தால், அந்த ஆட்சிமன்றக் குழு நீடித்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால், அப்படிப்பட்ட வாய்ப்போ, அதிகாரமோ, வசதியோ இல்லாத அலபாமா மாநிலத்தின், ஸ்டீவென்சன் நகரக் குடிமகனான ஜேம்ஸ் டேவிஸ் மறைந்து போன தனது காதல் மனைவிக்காக நடத்தும் போராட்டத்தை ஒப்பிடும்போது, மாமன்னன் ஷாஜகானும், தாஜ்மகாலும் அதற்கு முன்னே எம்மாத்திரம்!

இப்படிப்பட்ட ஷாஜகான்கள் இருப்பதால்தான் காதலுக்கு இன்றும் மரியாதை தரப்படுகிறது. 14லிலும், 24லிலும் இருப்பதல்ல காதல். 74லிலும் தொடரும் ஜேம்ஸ் டேவிஸின் காதலே உண்மையான காதல்!

கட்டுரையாளர்: நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.

மதிப்பெண்ணில் இல்லை வாழ்க்கை

அன்றைக்கு ஆசிரியர் என்றால் அவர் கையில் பிரம்பு ஒன்று குறியீடாக இருந்தது. இன்று அது போய்விட்டது. பெற்றோர்கள் யாரும் தன் குழந்தைகளுக்கு அடித்துப் பாடம் சொல்லிக் கொடுங்கள் என்று ஆசிரியர்களிடம் சொல்வதில்லை. பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ இல்லை. அதுபோலவே மற்றவர்கள் அடிப்பதையும் அவர்கள் விரும்புவது கிடையாது. சமூகத்தில் ஏற்பட்ட கலாசார மாறுதலோடு, குழந்தைகள் பற்றிய  புரிதலும் மாறிவிட்டது.

 கற்றலில் ஒரு மாணவனுக்கு குறைபாடு ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்பதை ஆசிரியர் அறிந்து அதனைப் போக்க முயற்சி எடுத்துக் கொள்கிறார். கல்வி கற்பிப்பதோடு உளவியல் காரணங்களை அறிந்து கொண்டு செயல்படுகிறார். பிரம்பைக் கையில் எடுப்பது இல்லை. அதோடு பெற்றோர்களிடம் மாணவர்களுக்கு கற்றலில் உள்ள குறைபாட்டை, அதனைப் போக்குவதற்கு உள்ள வழிகளை எடுத்துச் சொல்கிறார். சூழ்நிலை, உளவியல் முறையில் கற்றலில் உள்ள குறைபாட்டைப் போக்க இரு பிரிவினரும் சேர்ந்து பாடுபடுகிறார்கள்.

 சில மாணவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை உடனடியாகப் பிடித்துக்கொண்டு விடுகிறார்கள். வேறு சிலர் சிறிது காலம் தாழ்த்தி - ஆனால் சரியாகக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். அதுவரையில் காத்திருக்கும் பொறுமை ஆசிரியருக்கோ, பெற்றோர்களுக்கோ இல்லை. சரியாகக் கற்றுக் கொடுக்கவில்லை என்று, ஆசிரியர் நிர்வாகத்தாலும் பெற்றோர்களாலும் தண்டிக்கப்படுகிறார். மகனோ - மகளோ படிப்பில் பின்தங்கிப் போய்விடுகிறார்கள் என்று பெற்றோர்கள் மனம் பதைக்கிறார்கள். அதனால் மாணவர்களை விளையாட விடுவதில்லை - மற்ற குழந்தைகளோடு பேச, பழக விடுவது கிடையாது. டியூஷன் அனுப்புகிறார்கள். திரும்பி  வந்ததும் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்கள்.

 ஆறு வயதில் இருந்து தன் மகனோ மகளோ வகுப்பில் எல்லா பாடத்திலும் முதலாக இருக்க வேண்டும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும், கிரிக்கெட், டென்னிஸில் சிறப்பாக பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆசைப்படுவதில் தவறொன்றும் இல்லை. முயற்சி செய்தால் சிலவற்றில் முதன்மை பெற முடியும். பலவற்றில் முதன்மை பெற முடியாமல் போகும். எல்லாரும் எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்க முடியாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

 பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் இவையெல்லாம் அறிவின் களஞ்சியங்கள் இல்லை. அவற்றில் இருந்து அறிவு என்பதை அள்ளிக்கொண்டு வந்துவிட முடியாது. அவை மனித அறிவால் உண்டாக்கப்பட்டவை. மனிதர்கள் உண்டாக்கியவை எல்லாம் குறைபாடு கொண்டவை. வளர்ச்சிக்கும், மாறுதலுக்கும் உட்பட்டவை.

 சிலருக்குக் கணிதம் படிக்க எளிதாக இருக்கும். பலருக்கு வேதியியல், இயற்பியலில் படிக்கப் பிடிக்கும். இன்னும் சிலர் பொருளாதாரம், சட்டம் படிப்பார்கள். தொல்லியல், இசை, நடனம், இலக்கியம் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை என்பதில் ஒரு படிப்புதான் என்பதில்லை. எதில் உண்மையான  ஈடுபாடு, ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து அதில் ஆற்றுப்படுத்தினால் சிலர் முதலாவதாக வருவார்கள். அதுதான் அசலான கல்வி. இது உளவியல் உண்மை.

 வாழ்க்கையின் யதார்த்தம் அசலான கல்வி என்பதைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. எதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமோ அது முன்னே வந்து விடுகிறது. அந்தக் கல்வியைப் பெற ஒவ்வொருவரும் முன்னே நிற்கிறார்கள். மனிதர்கள் தோற்றத்தில் ஒன்றுபோல் இருந்தாலும் மூளையின் செயல்பாட்டில் எல்லாரும் ஒன்றில்லை. ஒவ்வொருவரின் அக்கறையும் விருப்பமும் வேறுபட்டு இருக்கிறது. எனவே எல்லாரும் டாக்டர், எஞ்சினியர் என்று படிக்க முடியாது. அதோடு தரமான கல்வி கொடுக்க சர்வதேச அளவில் மதிப்புப் பெற்ற பல்கலைக்கழகங்கள் இங்கு இல்லை. ஏழைகளுக்கு ஏற்ற எளிய கல்வி என்பதுபோல ஒரு மாதிரியான கல்வியே கிடைக்கிறது. அதைப் பெறவே பெரும் போட்டி நடக்கிறது.

 கல்லூரிகளில் படிக்கும் எல்லா மாணவர்களும் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியாது. அதற்கு ஏற்ற மாதிரி கற்பிக்க பேராசிரியர் இல்லை. கற்க மாணவர்களும் தயார் கிடையாது. கல்லூரிகளில் தகுதி அடிப்படையிலும், பணம் கொடுத்தும் சிபாரிசு முறையிலும் சேர்ந்தவர்களில் பலர் புதிய சூழ்நிலையில் தங்களை அறிந்து கொள்கிறார்கள். 

தேர்ந்த துறையில் ஆர்வம் இல்லாமல் போகிறது. தங்களால் படித்து முடிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். பெற்றோரின் பெரு விருப்பம், பணச் செலவு, வங்கிக் கல்வி கடன் போன்றவை அவர்களை வருத்துகிறது. மனச் சிதைவுறுகிறார்கள். மலர வேண்டிய இளம் பருவத்தைத் தொலைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள்.  வெகு சிலர் தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்கள்.

 கல்வி எப்பொழுதும் படிக்கும் மாணவர்களின் இயல்போடு இணைந்திருப்பது இல்லை. மகா மேதைகளை அது வஞ்சித்து விடுகிறது. சராசரி ஆள்களோடு சேர்த்துக் கொண்டு விடுகிறது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் ஆங்கிலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெயில். இரண்டு முறை அந்தக் காலத்து எம்.ஏ. எழுதினார். அதை முடித்தால்தான் கல்லூரியில் படிக்கலாம். இரண்டு முறையும் பெயில். எனவே சென்னை துறைமுகக் கழகத்தில் டாலி கிளார்க் வேலைக்குச் சேர்ந்தார். குறைந்த சம்பளம். டாலி கிளார்க்கின் வேலை, கப்பலில் இருந்து கிரேனில் வரும் மூட்டைகள் தரையில் இறக்கப்படுவதற்கு முன்னரே அவற்றை எண்ணி எழுதி வைக்க வேண்டும். ஆனால், அவர் சோர்ந்து போகவில்லை. வேலை பார்த்துக்கொண்டே தனக்குத் தெரிந்த, பிடித்தமான கணிதத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சாதாரணமான நோட்டுப் புத்தகத்தில் மகத்தான கணக்குகள் போட்டார். அவர் போட்ட பல கணக்குகள் புதிர் கணக்குகளாக உள்ளன.

 உலகம் முழுவதிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் படித்து மகிழும் சிறந்த கதைகளை எழுதியவர் ஆர்.கே. நாராயணன். அவரின் "மால்குடி கதைகள்' இன்றுவரை தொடர்ந்து படிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய அவர் பி.ஏ. ஆங்கிலத்தில் பெயில். அதனால் அவர் படைப்பாற்றலோ, எழுத்தின் தரமோ பாதிக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மகாஞானி என்று அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் மாணவப் பருவத்தில் அப்படியொன்றும் ஜொலிக்கவில்லை. ஒரு சாதாரண மாணவனாகதான் இருந்தார். அவர் பொது விதிக்கு உட்பட்டவர் இல்லை. அதுதான் முக்கியம். பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால் அறிவை, ஞானத்தை அள்ளிக்கொண்டு வந்துவிட முடியாது.

 மாணவர்கள் திறமை என்பது மனப்பாடம் செய்வதோ மதிப்பெண் பெறுவதோ இல்லை. மனத்திற்கு இருக்கும் ஆற்றலை செயலாக மாற்றுவதுதான்.  படிக்கவில்லை, அதிகமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக மாணவர்களை அவமரியாதையாகப் பேசுவது, நாவால் சுடுவது போன்றவை அவர்களை கோபமும் வருத்தமும் அடைய வைக்கின்றன. பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து அவமானப்படுத்துவது தாள முடியாமல் போய்விடுகிறது. அதன் காரணமாக தன்னிலை இழந்துவிடுகிறார்கள். அது சமூகத்தின் குற்றமாகிறது.

 மாணவர்கள், கல்லூரிகள் பணம் கறக்கக் கிடைத்த மாடுகள் இல்லை. அவர்கள் அதிகமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக பால் வற்றிப் போன மாடுகள் போல விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை. அவர்கள் தங்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெற ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும். கல்வியின் பயன் என்பது நல்லறிவும், நல்லொழுக்கமும், பண்பாடும், கலாசாரத்தில் ஈடுபாடும் கொண்ட மனிதர்களை உருவாக்குவதுதான்.அதில் பயிற்சியோடு திறமையும் சேர்ந்து போகிறது. அதனால் பணம் சம்பாதிப்பது கார் வாங்குவது, மாளிகை கட்டிக் கொண்டு வாழ்வது எல்லாம் வந்துவிடுகிறது. பணம் சம்பாதிக்கவே படிப்பு என்ற பேராசையை, வெறியை பெற்றோர்கள் முதலில் கைவிட வேண்டும். கல்வி வியாபாரிகளின் தந்திரங்களில் இருந்து இளந்தலைமுறை மாணவர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த சூழ்நிலையை சமூகம் ஏற்படுத்த வேண்டும். அதுதான் சமூகப் பிரச்னை. சமூகத்தைப் பழிவாங்குவதாக எண்ணி தற்கொலை செய்து கொள்கிறார்கள்; ஆசிரியர்களைக் கொல்கிறார்கள்.

 படிப்பு என்பது மதிப்பெண் சார்ந்ததில்லை. குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், பெயிலாகிப் போனவர்கள் எல்லாரும் உதவாக்கரையாகப் போனவர்கள் கிடையாது. அவர்களில் பலர் சமூகத்தின் அச்சாணியாக இருந்து மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள். 

எனவே குழந்தைகளை குழந்தைகளாகவும் மாணவர்களை மாணவர்களாகவும் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் இருக்கிறது என்பதே உண்மை.

The Future of Android !!!

The year 2011 saw Android grow to become a force to reckon within the smartphone OS market. Android phones have claimed over 40% of the world market share in 2011


The dominance of Android is not limited to a single market like USA either. It has passed iOS in UK in 2011, starting from almost nowhere year and a half ago. Growing from around 10% market share, today Android holds over 50% of the UK smartphone market share (source).  Android has even taken over the high potential market of China with over 60 million models sold in 2011. (source) Even in India the pace of adoption of Android smartphones has been accelerating for quite some time now.

It is an interesting juncture for us to ponder about the future of Android from the perspective of Developers, Google and an Android User.
  

Perspective 1 – Developers:

For the developers, these are the important times as they are catering to over 250 million Android users the world over. The net activation of greater than 700,000 handsets a day promises an average developer a massive potential of clients for his App. The number is significantly higher compared to iOS where the number of handset activations is only 190,000 per day.

But is this the only consideration for a Developer to jump on the Android bandwagon?

Ease of development

Android Apps are fairly complex to develop due to fragmentation, with manufacturers running a different version of Android. Also with the existence of multiple customized user interfaces and hardware, Android App developers have a hard time developing and maintaining code for their apps.

 

However, based on a popular survey conducted by Baird William Powers, while development for  Android OS is more difficult than developing for the iOS, it is a lot more easier compared to developing applications for RIM’s Blackberry or Nokia’s Symbian.
The Application can be easily registered for a low fee of $25 and can be fairly easily uploaded into the market place, which makes the Android OS a great platform to develop Apps for despite the problems for
fragmentation.


.

Monetization

While android developers are enamored by the fact that over  250 million Android users exist in the world, Android Developers are getting just 7% as much revenue as Apple iOS Developers.

Recently there has been a  flurry of activity with Instagram, one of Apple’s most successful Apps making its foray into Android while Battle heart, another hugely popular Android App making their official exit from Google Play (source). The simultaneous entry and exit does prove that it isn’t just about the possibility for monetization in Android .

While customers may not willingly shell out money to purchase a premium version of an App, applications such as Rovio’s Angry Birds and Instagram show that monetization is still possible by adopting in-app advertising or freemium as strategies. Certainly monetization in the purest sense may not be the way forward for App developers. There is no doubt app developers will have to turn smarter and come up with more strategies similar to in-app advertising and freemium to gain the true potential offered by Androids large volume of users.

For now however, Developers seem to be losing interest in Android OS at an alarming rate, according to a survey done by IDC and Accelerometer.

The survey shows a dip from interest among 85% of developers to about 80% while Apple’s iOS still excites up to 90% of developers.

How Google would entice the developers who are losing interest is indeed going to be interesting to observe in the future.
Perspective 2: Google
Kindle
 
For Google, the revenue source of Android still heavily depends on Advertising through its own properties such as Search, Maps, YouTube and Gmail. Amazon however has bypassed Google almost entirely for its Kindle Fire tablet.  Kindle Fire sold more than 6 million units in the 4th quarter of 2011, making kindle the second largest selling tablet computer in the world by a large margin.

Kindle Fire is made on the Android Platform , however it features its own Market place and App store and doesn’t come with the regular Google applications such as YouTube , Gmail etc., which are found in other Android Tablets. The issue of “control” thus becomes significant for Google, who has missed out on the success of Kindle because of this open source platform.

Samsung
 
Samsung moves more than 55% of Android smartphones around the world and thus holds the potential to dictate terms to Google about the future of Android. Google pays up to $1bn dollars to Apple for using Google as the default search engine in Apple machines. One may wonder what Samsung, who sold more than 35 million smartphones for Android in q4 2011, could do considering it has greater power of influence over Google than any other mobile manufacturer. (Source)

Motorola

Google may use Motorola to produce exclusive Android phones with higher specifications than the models available in the market. Google may even move its exclusive Android phones without customization, the Nexus into Motorola smartphones and make future upgrades available only for Motorola.

Google Nexus Tablet

Google is partnering with Asus to compete with the Amazon Kindle Fire with a low price feature packed Tablet. The Google Nexus Tablet is expected to be priced $50 lower than Kindle fire at $ 149. (Source)

Google no longer wishes to miss out on the opportunity of an Android tablet, while Amazon Kindle and iPad reign supreme in the market, not a single Android tablet has a market share greater than 5%. (Source)

Perspective 3: Android User
Malware, privacy and security

Today’s smartphone user stores all his private data, be it photographs of near and dear ones, Banking passwords or even official email in the power packed smartphones . Android OS has been subject to heavy attack of Malwares in the recent past. The attack growing by up to 472% in the 3rd quarter of 2011 alone, while iOS was left untouched (Source).

Having a popular open platform will often come with this shortfall for Androids. While one group of developers are busy making outstanding applications to gain traction, visibility and generate revenues, another group would engage in developing malicious content to take advantage of the unsuspecting Android user.

Google’s Android had even encountered criticism similar to Apple for allowing applications to access private photographs on User’s mobile phone. While allowing the application to track location, the application also managed to gain access to user photographs without asking for consent (source) .  Once the user allows an App to connect to the internet, it can automatically upload the images to a remote server without asking the user for permission. To a great extent, smartphones these days hold more sensitive data than even the typical laptops and desktops. It is alarming for an Android user due to the consequences of the complex privacy policies stated by Google or individual App developers.

Google wallet had recently found itself mired in controversy thanks to a hacker who found an easy way to crack its 4 digit numeric Pin. Even though this issue happened for rooted android phones, the security loophole has negative impact on users’ intent to adopt new payment methods (source).

If the security threats are not curtailed, users may slowly shift to more secure platforms.

Upgrades

Google has already released the latest version of Android, Android 4.0 Ice Cream Sandwich in November 2011, yet only 1.2% of Android phones in the world have the latest Operating system (source).  Apple’s devices get an automatic update of new operating system depending on the hardware capability. Users are constantly exposed to newer Apps and features that are launched even to the latest devices.
It is here that typical android user feels left out. Despite shelling out considerably high amount of money, a typical Samsung Galaxy S2 or Samsung Galaxy Note customer still have to wait at least 3-4 months to be able to download the latest update of Ice Cream Sandwich. The upgrade process is also equally difficult to do and might not be possible for an average user.  Android 2.3 (Gingerbread) today is available in over 60% of Android devices despite being launched in the end of 2010.

The issue is not restricted to upgrades alone. Even now newly launched entry-level smartphones and several mid-range ones are being launched with Android 2.3 (Gingerbread).

If Google aims to make Android the ultimate smartphone operating system, it will have to reduce the delay in adoption of latest operating system and provide for faster upgrades for existent versions.

Dropping price points

Android is going to be available for the average Joe in the market. With the prices dropping significantly the world over and leading mobile makers planning on launching even cheaper entry-level smartphones powered by Android, Android can expect significant growth in market share. While low priced android phones have been available for quite some time, they were not good enough for most of the smartphone activity. But that has changed with the entry of Samsung Galaxy Y. Even though the Samsung Galaxy Y price is only slightly above the 100$ mark, it has not compromised on the quality. With the Samsung Galaxy Pocket expected to be priced below the Y, we can expect even greater number of people adopting the Android ecosystem.

Summary

Android phones are becoming the top sought after models in the market, perhaps second only to Apple. With a growing user base and more applications available in Google Play, Google has the platform set for a great future. However, growing crisis in privacy and security would prove a turn off for users to adopt the phone immediately and may even force them to move out. While Google’s lack of control on its platform will always create potential for spin offs such as Kindle Fire to arise and gain market share, Google’s real challenge would be to provide greater monetization for its developers. If the developers don’t find value in developing Apps for Android, they would rather put effort in iOS and Windows phones to gain monetary benefit. Developers on the other hand must also find unique methods to gain market share and monetize their apps.  Google must strive to make its upgrades easily available for an ever eager user base. The future is bright for Google; however it may turn dark if the issues it faces are not dealt with swiftly and with determination.

About the Author:

Sitakanta is the co-founder of MySmartPrice.com. MySmartPrice helps you find the best price of anything sold online in India.

Source androids.in

What is Android?

Android is a computing platform designed for use in some smart phones and other devices. This technology, which is owned by Google, Inc., includes an operating system, software, and applications. The operating system is based on Linux®, which provides advanced computer processing. Android™ technology is maintained and continually developed by the Android Open Source Project (AOSP).

Google purchased Android Inc., a 22-month-old Palo Alto, California, startup in July 2005. Android Inc. was co-founded by Andy Rubin, maker of mobile device Danger Inc.™ The purchase was key in Google's move into the wireless technology market. In 2008, Google introduced the HTC Dream™ as the first marketed phone to use Android™ technology. Since that time, this platform use has expanded to other smart phones, tablet computers, E-readers, netbooks, and other devices.

Although Android™ technology is increasingly being used on a range of devices, the most common hardware to use this platform is mobile phones. A large community of developers regularly write applications (apps), including games, social networking, and business modules, for Android™ smart phones. There are a wide range of free Android™ apps, including games and productivity titles, and paid apps are even more common. Android™ technology — which is used by thousands of developers because it is freely available for download — has given software developers the opportunity to sell their creations to a wide group of consumers.

Android™ technology is based on Java® software applications. This technology requires the use of a special software development kit (SDK) to create applications for an Android™ device. The SDK is freely available for download from the Internet. For this reason, and because it will work on multiple operating systems, many software developers prefer Android™ technology over that used in other smart phones.
Smart phones have evolved into devices that use touch screens for navigation. Android™ technology provides specific application programming interface (API) modules to developers that take advantage of this. The touch screen enables the user to select and scroll through information with the stroke of a finger.
One of the key differences between Android™ technology and other smart phone systems is that it is open for modification. This gives vendors the opportunity to change and enhance their products based on their own preferences. This has created many versions of Android™ phones, which can vary by vendor, as well as a range of other devices that use this platform. In 2011, Google introduced a new arena for Android™ when it announced plans to launch Android@Home, a network that could allow users to automate and control home appliances.
Launcher is the name given to the part of the Android user interface that lets users customize the home screen (e.g. the phone's desktop), launch mobile apps, make phone calls, and perform other tasks on Android devices (devices that use the Android mobile operating system). Launcher is built into Android, however there are a number of Launchers available for download in the Android Market.

The threat or concern that a proliferation of diverging variants of the Android platform will result in the inability of some devices to properly run apps written with the Android SDK. With a large number of custom versions of the Android platform emerging, the concern is that interoperability will be weakened as a result of the potential for applications built specifically for one variant or device not being able to work with others.

Google has created an Android compatibility program to help quell fears of Android fragmentation and has also deemed the idea of Android fragmentation a "bogeyman" in a recent blog, but concerns about device-specific apps leading to interoperability issues persist nonetheless.

Source webopedia

Monday, October 28, 2013

கணினியின் வேலைநிறுத்தம்

அண்மையில் பத்திரிகைகளில் அடிபட்ட வணிகச் செய்தி பலருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. ஐ.ஓ.பி. வங்கியில் தொடர்ந்து ஐந்து நாள் முடங்கி பிறகு சீரான கணினிச் சேவையைத்தான் குறிப்பிடுகிறேன்.

வங்கியில் செர்வர் செயல்பாட்டில் பழுது ஏற்பட்டு அவ்வப்போது சில மணி நேரம், எந்தவிதப் பரிவர்த்தனையும் செய்ய இயலாமல் போன அனுபவம் உண்டு. அப்போது கூட, ஏதாவது ஒரு முக்கிய கணினி மூலம் எவ்வளவு இருப்புத் தொகை, கிளியரிங்கில் போடப்பட்ட காசோலை "பாஸ்' ஆகி விட்டதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இது போல் ஆதார வங்கி செயல்பாட்டில் (Core Banking Services) பழுது நேருவது அதிசயமாகத்தான் உள்ளது.

எனக்கு ஏற்பட்ட சிக்கல் மிகச் சிறியது, சினேகிதர் கொடுத்த ஐ.ஓ.பி. காசோலையை எங்கள் வங்கியில் போட்டு எடுக்கத் தாமதாயிற்று. புரசைவாக்கத்தில் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள் என்றும், சனிக்கிழமை இருப்பைக் கவனித்து ஒரு சில வாடிக்கையாளர்கள் தொகை எடுக்க ""அனுமதி''க்கப்பட்டார்களென்றும் ஏடுகள் தெரிவித்தன. இதுபோன்ற "கணினி வேலைநிறுத்தம்' பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

ஒரு முக்கிய மங்களகரமான நிகழ்ச்சிக்கு முன் பணம் கொடுக்க இயலாத நிலைமை; குறிப்பிட்ட தேதி முன்னால் பெருந்தொகை தந்தால்தான், குறிப்பிட்ட பொருளை டிஸ்கவுண்டில் கொடுக்க இயலும் என்கிற நிலை; ஏற்றுமதி இறக்குமதி பரிமாற்றம் இயக்க முடியாத தன்மை - போன்ற பல விதங்களில் வாடிக்கையாளர்கள் தவித்திருப்பார்கள். ஐ.ஓ.பி. மட்டுமன்றி பிற வங்கி வாடிக்கையாளர்களும் அல்லலுக்கு ஆளாகியிருப்பார்கள். இதற்கான பண நஷ்டம்; மன உளைச்சல் இவற்றுக்கு வங்கி ஈடு செய்யுமா - ஓரளவாவது - என்பது ஒரு கேள்விக்குறி.

கணினி வரவால், வாடிக்கையாளருக்கு பல வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஏடிஎம் வசதி, ஒரே வங்கியின் பிற கிளைகளின் இருப்பை ஒரு கிளையில் எடுக்கும் செளகரியம், இல்லத்திலிருந்தே கணினி மூலம் பரிமாற்றம் - போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். அதேசமயம், எல்லாவற்றுக்கும் கட்டணம் உண்டு என்பதையும் ஞாபகமூட்ட வேண்டும். இருப்புத் தொகை குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் போனால் கட்டணம்; பணமிருந்தும் வேறு காரணிகளால் காசோலை திரும்பினால் கட்டணம்; நடப்புக் கணக்கில் ஆறு மாசத்துக்கொரு முறை கட்டணம்; காசோலையைத் தபாலில் அனுப்ப "சார்ஜ்' - என்று பட்டியில் நீளுகிறது.

நியாயமாக எழுகிற கேள்வி இதுதான்:- கணினி சேவைகளுக்குக் கட்டணம் வசூல் செய்யும்போது, கணினி தொடர்ந்து சில நாட்கள் பழுதுபட்டு சேவை தர இயலாவிட்டால், அதற்கு வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு தர வேண்டியதுதானே?

மற்றொரு சந்தேகம்: இன்று ஐ.ஓ.பி.யில் நடந்த கோளாறு நாளையே ஏன் பிற வங்கிகளிலும் ஏற்படக் கூடாது? பொதுவாகவே, சில வங்கிகளில் கணினி பற்றிய விஷய ஞானம் அறிந்தவர்கள் மிகக் குறைவு. மேலும், வங்கிகளில் பிற நிறுவனங்கள் போல், கணினி சேவையை இயக்குவது கடினம், டெபாஸிட் வாடிக்கையாளர்; கடன் பெறுகிற வாடிக்கையாளர் - இவர்களிடையே பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் வட்டி விகிதம் தனி. ஏதாவது கணினி பதிவில் தவறு ஏற்பட்டால் அனுபவமிக்க ஊழியர்கள் ஏதோ விருப்ப வகைகளை (Options) மாற்றி மாற்றிப் போட்டுச் சரி செய்கிறார்கள். ஏன்- பாஸ் புத்தகம் பதிவு செய்கிற கருவியில் கோளாறு நேர்ந்தால் சரி செய்ய ஆட்கள் இல்லை!

தற்சமயம், காப்பீட்டில் "நிகழ்ச்சி காப்பீடு' (Event Insurance) என்ற ஒரு புதிய பிரிவு நுழைந்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் உறுதியானவுடன், இடைப்பட்ட காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதை ஈடு கட்டுவது போல, (மரணம்; விபத்து; எதிர்பாரா நிகழ்வுகள்) இதுபோல, ஐ.ஓ.பி.யில் நிகழ்ந்தது போல், எதிர்காலத்தில் நேர்ந்தால் அத்தகைய நஷ்டத்துக்கு ஈடு செய்யும் வகையில் ஏதாவது நிதி ஒதுக்கலாம்.

வருங்காலத்தில் வங்கியில் கணினி சேவை பல்கிப் பெருகி, விரிந்து கொண்டே போவதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது. அந்தச் சேவை சிக்கல் ஆகாமலிருக்க, வங்கித் தலைவர்கள் சேர்ந்து ஒரு தீர்வு காண வேண்டும்.

கடுமையான தண்டனை வேண்டும்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?' - இது ஒரு திரைப்படப் பாடல்.

குற்றம் புரிந்தவன் நிம்மதியாக இருக்க மாட்டான்; இருக்கவும் முடியாது. இருக்க நினைத்தாலும் மனம் இருக்கவிடாது. சதா அவனை பிறாண்டிக் கொண்டேயிருக்கும். அதனால்தான் "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது' என்பார்கள். அதெல்லாம் ஒரு காலம்!

இப்போது அப்படியல்ல. குற்றம் செய்வதென்பது இனிப்பு சாப்பிடுவது போலாகி விட்டது. குற்றத்தை கண்டுபிடித்தால் பார்த்துக் கொள்ளலாமென்ற அலட்சியப் போக்கு மனதுள் படிந்துவிட்டது. சிறைச்சாலை என்பதை யார், எப்போது "மாமியார் வீடு' என்றார்களோ தெரியாது. இப்போது சிறைவாசம் அப்படித்தான் ஆகிவிட்டது. அது வீட்டை விட பாதுகாப்பான இடமாகவும், மூன்று வேளை நல்ல உணவும், இன்னும் பல வசதிகளும் கிடைக்கக் கூடிய இடமாக இருப்பதால், குற்றங்கள் மலிந்துவிட்டன!

சமீப காலமாக வீடு புகுந்து திருடுவது, கொலை செய்வது, நகைக் கடை கொள்ளை, பாலியல் வன்முறை என தினசரியைப் பிரித்தாலும், தொலைக்காட்சியைப் பார்த்தாலும் இதே செய்திதான்! இதற்கெல்லாம் என்ன காரணம்? கடுமையான தண்டனை இல்லாததும் தண்டனையை விரைவாக வழங்காததுமே காரணம்.

காவியுடை கதாநாயகர்கள் வலம் வந்து காமக் களியாட்டம் போட்டுக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது என எண்ணிக் கொண்டிருக்கும்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் நடத்தி வரும் 72 வயது சாமியார், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இளைத்திருத்தல் துறவிக்கு அழகு. கொழு கொழு வென்றிருத்தல் குழந்தைக்குதான் அழகு. இப்போது நிலைமை தலைகீழ். ஊட்ட குறைபாடு காரணமாக குழந்தைகள் வலுவிழந்திருப்பதும் எல்லா வசதியும் கொண்ட சாமியார்கள் கொழுத்திருப்பதும் கண்கூடாக பார்க்கின்றோம்! எத்தனை சாமியார்களின் வேடத்தைக் கலைத்து சிறையில் அடைத்தாலும், இந்த மக்கள் திருந்துவதாகத் தெரியவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. பண பலம், அரசியல் பலம் மட்டுமின்றி நான்தான் கடவுள் என்று அருள்வாக்கு சொல்பவராகயிருந்தாலும் அவர் குற்றவாளியெனில் அவருக்கு விரைவாகவும் அதிகபட்சமாகவும் தண்டனை வழங்க வேண்டும்.

இப்போது நிதி நிறுவனங்களில் கோடி கோடியாய் மோசடி நடக்கின்றன. படித்தவர்கள் கூட ஏமாந்து போய், தான் இவ்வளவு கட்டியிருக்கிறோம் என்று ரசீது காட்டி காவல் துறையும் முறையிடுவதைப் பார்க்கிறோம். காவல் துறையும் தனிப்படையமைத்து குற்றவாளியைப் பிடித்து விடுகிறார்கள். பிடித்து வரும்போது குற்றவாளிகள் தங்கள் முகத்தை மறைத்து கொள்கிறார்கள். ஏழை பாழைகளிடமிருந்து சீட்டுப் பிடித்தல் என்றும் வைப்பு நிதி என்றும் பணம் பறிக்கும்போது வராத குற்ற உணர்ச்சி கைது செய்ததும் வந்து விடுகிறது போலும்! பொதுமக்கள் பார்த்துவிட்டால் தனக்கு அவமானம் எனக் கருதி குற்றவாளிகள் முகத்தை மூடிக் கொள்வதை காவல் துறை அனுமதிக்கக் கூடாது. தப்பு செய்தவர் யாரென்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏதோ ஒரு வழி (?!)யில் அவர்கள் வெளியே வந்தாலும், வேறெங்கும் போய் அதே மோசடியை செய்யாமலிருக்க மக்கள் முன் அடையாளம் காட்டப்படுவார்ககள். ஆகவே, குற்றவாளியை முகத்தை மூடி அழைத்து வரும் வழக்கத்தை காவல் துறை அனுமதிக்காமல் இருப்பதே, அவர்கள் அவமானத்தால் மனம் கூசி குறுகி திருந்துவதற்கான ஆரம்ப நிலை என கொள்ளலாம்!

நம் நாட்டில் நீதிக்கும் நேர்மைக்கும் பஞ்சமில்லை. நீதி வழுவாது ஆட்சி செய்தவர்கள் நம் மன்னர்கள். தண்டனை என்ற பெயரில் ஐந்து வருடமோ ஏழு வருடமோ சிறையிலடைத்தால் குற்றவாளி திருந்தி வருவான் என்பது நிச்சயமல்ல. ஏனெனில் சிறைவாசம் இப்போது சொகுசாக இருக்கிறது. நான்கு சுவர்களுக்குள் இருக்கிறோம் என்ற கஷ்டத்தைத் தவிர வேறெந்த வேதனையோ குறையோ அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சிறைக்குச் செல்லும் குற்றவாளிகள், "போதுமடா சாமி, இனிமே இந்தப பக்கமே வரக்கூடாது என்று உணரும் வண்ணம் சிறைவாசம் அமைய வேண்டும்; அப்போதுதான் குற்றங்கள் குறையும்!

வலைதளமா? வக்கிர தளமா?

சமூக வலைத்தளங்களில் அதிகமாக உள்ள இந்தக் காலத்தில் இளைஞர்கிடையே மிகவும்  பிரசித்தி பெற்றது இந்த ஃபேஸ் புக் வலைதளம். பிரபலமானவர்கள் மக்களுக்கு தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த வலைத்தளங்களின் நோக்கம் என்று முதலில் சொல்லப்பட்டது. அது ஓரளவு உண்மைதான். விஸ்வநாதன் ஆனந்தோ, செரினா வில்லியம்úஸா, அப்துல் கலாமோ இப்படி புகழ் பெற்றவர்கள் தங்கள் எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கு இது சரியான ஊடகமாக இருந்தது.

சமீப காலங்களில் இந்த வலைத்தளத்தில் ஒரு இளைஞனோ, பெண்ணோ இணைந்து விட்டால் அவர்களுக்கு அதோகதி என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது. இந்த வலைத்தளங்களில் பதிவு செய்து கொள்பவர்களில் பாதிக்குமேல் பொய்யான விலாசத்துடன், மாறுப்பட்ட புகைப்படங்களுடன் பதிவு செய்பவர்கள் என இந்த வலைத்தளங்களை நிர்வகிப்பவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். உண்மையான பெயரையும் விலாசத்தையும் மறைப்பதற்கு என்ன காரணம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் உள்ள வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாக இந்த வலைத்தளங்கள் மாறுகின்றன.  அதில் எழுதும் நபர் யார் என்று தெரியாததால், எதையும் எழுதலாம் என்ற துணிச்சல் வந்துவிடுகிறது.  இங்கே தான் விபரீத விளையாட்டுகள் ஆரம்பமாகின்றன. தன்னுடைய புகைப்படத்தையே கொடுத்துவிட்டு, விவரங்கள் அனைத்தையும் மாற்றிக் கொடுத்துவிட்டு. "நான் அவனில்லை' என்று சொல்லலாம். இதனை மாற்றியும் செய்யலாம்.

கல்லூரியிலிருந்து சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை வைத்து, ஒரு மாணவனும், மாணவியும் நெருக்கமாக இருப்பது போன்று காட்ட முடியும். இந்தப் புகைப்படங்களை வலைத்தளங்களில் ஏற்றுபவருக்கு  விளையாட்டாகவும், புகைப்படத்தில் இருப்பவர்களுக்கு வினையாகவும் முடியும். இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் புகைப்படத்தில் இருப்பவர், அதனை அந்த வலைத்தளத்திலிருந்து அகற்ற முடியாது. சட்டத்தின் உதவியைத்தான் நாடவேண்டும்.

இந்த வலைத்தளங்களில் நல்லதே நடக்கவில்லையா என்று கேள்வி எழலாம். நல்லது நடக்கிறது, நிறையவே நடக்கிறது. ஆனால், இதனைப் பயன்படுத்தும் அனைவரும் நல்ல நோக்கத்துடன் தான் பயன்படுத்துகிறார்களா என்பதுதான் தற்போதைய கேள்வி. ஒரு பாவமும் அறியாத சிலர் ஃபேஸ்புக்கால் அலைக்கழிக்கப்படுவது என்ன நியாயம்?

இதில் பெயரைப் பதிவு செய்து கொள்பவரிடம், ஏன் இந்த வலைத்தளத்தில் இணைகிறாய் என்று கேட்டால், அனைவரும் சொல்லும் ஒரே பதில், நிறைய பேரிடம் மனம்விட்டுப் பேசலாம் என்பது. இது ஏற்றுக் கொள்ள முடியாத பதில். முதலில் நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் நன்றாகப் பேசுகிறோமா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். மற்றொன்று, நெருங்கிய நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மட்டும் தான் மனம்விட்டுப் பேச வேண்டும். முகம் தெரியாத ஒருவரிடம் மனம்விட்டுப் பேசக்கூடாது. பேசினால் வரப்போகும் விளைவுகள் நமக்குத் தெரியாது. பேசிவிட்டாலே பிரச்னை ஆரம்பித்து விடும்.
சமீபத்தில் 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த வலைத்தளங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதற்கு எதிர்த்தரப்பில் வாதாடியவர், தங்கள் கணினி மையத்தில் "13 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வலைத்தளங்களைப் பார்க்கக் கூடாது' என பெரிய அறிவிப்பு வைக்கப்பட்டிருப்பதாக வாதாடினார். இதுதான் தீர்வா? சமீபத்தில் சைனாவில் அந்த நாட்டின் வரைப்படத்தைத் தவறாகக் காட்டியதற்காகச் சில வலைத்தளங்கள் அந்த நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. ஆக, அறிவியல் பூர்வமாக நினைத்தால் நாடு முழுவதும் சில தேவைப்படாத விஷயங்களைத் தடை செய்யலாம். ஆட்சியாளர்கள் நினைத்தால் தான் முடியும்.

வருங்காலத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கும் நிலையில் பொதுவாக வலைத்தளத்தைப் பயன்படுத்தவே, அதனைப் பயன்படுத்தபோகும் பயனாளி தன்னை யார் என்று நிரூபித்தால் மட்டுமே குறிப்பிட்ட வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என விதிமுறை கொண்டு வர முயற்சி செய்யலாம்.

பார்க்காமலே காதல் என்பது திரைப்படம் எடுப்பதற்கு நல்ல கருத்துதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது சாத்தியமுமில்லை. அப்படி அது சாத்தியமானால் அதில் ஒருவர் ஏமாற்றப்படுவது நிச்சயம். வலைத்தளம் வழியாகப் பேசுவது, பழகுவது, அழுவது, சிரிப்பது என்பதெல்லாம் ஒரு மாய உலகம். ஒரு ஆணும், பெண்ணும் வலைத்தளம் வழியாக தன்னுடைய எண்ணங்கள்  என, பாதி உண்மையும், பாதி பொய்யும் கலந்து உரையாடுகிறார்கள். இதில் இளம் வயதினருக்கு நிறைய ஆர்வம் இருக்கும். இந்த மாய வலையில் விழும் இளைஞர்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அரசே முன்வந்து இதற்கான சட்ட திட்டங்களை வடிவமைப்பது, தற்போதைய அவசரத் தேவையாகும்.
 
Source dinamani.com
 

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

சமச்சீர் கல்விப் பாடத்திட்டம்,முப்பருவக் கல்வி முறை,தொடர் மற்றும் ஒருங்கிணைந்த முறையிலமைந்திட்ட தரப்புள்ளிகள் அடிப்படையிலான எளிய மதிப்பீடு என மாணவர் மைய கல்விக்கு அரசு வித்திட்டு நடைமுறைப்படுத்தியுள்ளபோதும்கூட மாணவ மனநிலையானது மாற்றம் பெறாதது பெருங்கேள்விக்குறியாகும். உண்மையில் ஒன்பதாம் வகுப்பு முடிய புதிய மதிப்பீட்டு முறையில் எழுத்துத் தேர்வென்பது அறுபது விழுக்காட்டிற்கே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.

மீதமுள்ள நாற்பது விழுக்காட்டு மதிப்பெண்ணானது மாணவர்களது ஆர்வம்,ஈடுபாடு,கற்றல் சார்ந்த செயல்திறன்கள்,செயல்திட்டங்கள்,எளிய சிறுதேர்வுகள் போன்றவற்றிற்கு வழங்கப்படுவதும் அதில் தொண்ணூறு விழுக்காட்டு அடைவைக் கற்றலில் பின்தங்கியோரும் அடையத்தக்க வகையில் பாடநூல் வல்லுநர்களால் எளிமையாக உருவாக்கப்பட்டு உறுதிசெய்துள்ளதும் நடைமுறைகளாக உள்ளன.

இருவகையிலான மதிப்பீட்டு முறைகளிலும் பெறப்படும் மதிப்பெண்கள் தரப்புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டுப் பல்வேறு தர நிலைகளாகக் கொள்ளப்படுவதன் வாயிலாக,மாணவரிடையே நிலவும் மதிப்பெண் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு மற்றும் போட்டி,பொறாமை நிலைகளிலிருந்து ஓரளவிற்கு விடுபட்டுச் சுமுகச் சூழல் உருவாவதற்கு வழிகோலும் வாய்ப்புள்ளது.

அனைவருக்கும் கல்வி என்கிற சிக்கலான,தொலைநோக்கு நிலையை நாட்டிலுள்ளோர் எய்திட கல்வியின் அனைத்துப் படிநிலைகளிலும் காணப்பட்ட இறுக்கம்,செறிவுத்தன்மை,விடாப்பிடியான போக்குகள்,ஆசிரியர் மைய நோக்குகள் போன்றவை பல்வேறு முயற்சிகளுக்குப்பின் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எந்த வகையான தேர்வாக இருப்பினும் கேள்விக்கான விடைகளை மறைவாகப் பார்த்து எழுதுதல் என்பது தீயொழுக்கமாகக் கருதப்படுகிறது.இத்தகு குற்ற நடவடிக்கைக்குப் பொதுவாக எல்லா காலங்களிலும் கடுந்தண்டனைகள் அளிப்பதென்பது பள்ளிகளில் நடைமுறையில் இல்லை.பெருந்தன்மையுடன் எச்சரிக்கப்பட்டும் மன்னிக்கப்பட்டும் விடுவதாகவே இருக்கின்றது.

  மேலும்,அரசுப் பொதுத்தேர்வுகள் நீங்கலாக ஏனைய தேர்வுகள் அனைத்தும் பள்ளிச் செல்லும் அனைவரும் தேர்ச்சி என்கிற உயரிய இலக்குடன் இலகுவாக மதிப்பிடப்பட்டு வரும் சூழலில் இவ்வித நடவடிக்கையென்பது தேவையற்ற ஒன்று.நியாயமற்ற,சட்டத்திற்கு புறம்பான,எல்லா வகையான தேர்வுகளிலும் மலிந்து காணப்படும் பிட் கலாச்சாரமானது இனியாவது மாணவச் சமுதாயத்தினரிடமிருந்து விலகி ஒழிதல் நல்லது.

தவிர,பதின்பருவ வயது என்பது உடலியல்,உளவியல் ரீதியாகப் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள்,மனக்குழப்பங்கள்,உளச்சிக்கல்கள்,ஆளுமைப்பண்பு மற்றும் வளர்ச்சி நிலைகள் போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைவதாகும்.இது இருபாலருக்கும் பொது.அதுமட்டுமின்றி,கூர்மையான கத்தி போன்றது இப்பருவம்.

ஆண்,பெண் இருபாலருக்குமே இப்பருவத்தின்போது தக்க நெறிப்படுத்துதல், வழிக்காட்டுதல், ஆற்றுப்படுத்துதல், அறிவுறுத்துதல் ஆகியன இன்றியமையாதத் தேவைகளாக உள்ளன. அறிவியல் பூர்வமான ஆலோசனைகளுக்கும் தீர்வுகளுக்கும் வீடு, பள்ளி, சமுதாயம் ஆகியவை வடிகால்களாகத் திகழுதல் என்பது தலையாயது.

எந்தவொரு நிலையிலும் இத்தகையோரிடமிருந்து தேவையற்ற அச்சுறுத்தல்,அருவருக்க வைத்தல்,தாழ்வு மனப்பான்மைக்கான உரமிடுதல் போன்றவை கூடாது. மேலும், இத்தகைய இளந்தலைமுறையினரின் உடல் ,உள்ளம், சமுதாய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அரும்பணிகளுக்கு மக்கள் ஊடகங்களாக விளங்கும் அச்சு இதழ்கள், தொலைக்காட்சிகள்,திரைப்படங்கள், இணைய தளங்கள் முதலிவை ஆக்கமும் ஊக்கமும் வழங்குதல் நன்மைப் பயக்கும்.அவற்றின் சமூகக் கடனும்கூட.இவற்றால் முறையான தணிக்கையின்றிப் பரப்பப்படும் பலவித விரும்பத்தகாத செய்திகள் மற்றும் காட்சிகள்,கூடா ஒழுக்கங்கள்,பண்பாட்டுச் சீரழிப்பு மற்றும் பேரழிப்பிற்கான வழிமுறைகள்,நுகர்வுக் கலாச்சாரப் போக்குகள்,நஞ்சாய்ப் பரவிவரும் உலகமய கருத்துகள் போன்றவை இத்தகையோரின் தனிநபர் மற்றும் சமூக நெறிபிறழ் நடத்தைகளுக்கு இவையே முக்கியக் காரணிகளாகச் சுட்டப்படுகின்றன.செவ்வியல்,வாழ்வியல் விழுமியங்களுக்கு இவை அடிகோலுதல் அவசர,அவசியமாகும்.ஏனெனில்,இம்மக்கள் ஊடகங்கள்தாம் பதின்பருவ வயதினரின் நெஞ்சங்களில் ஏனையோரைவிடவும் நீங்கா இடம்பெற்று ஆட்சி புரிகின்றன.

அதுபோல,எளிதில் கிடைக்கத்தக்க,நுகரத்தக்க வழியில் மலிந்து காணப்படும் புகையிலை, மதுபானப் பொருட்கள்,ஆபாச வீடியோ காட்சிகள்,பள்ளிச் சீருடையில் திரையரங்கிற்கு வரும் நிகழ்வுகள், செல்பேசி மற்றும் இணைய தளங்கள் மூலமாக நடைபெறும் தேவையற்ற, தீங்கு தரத்தக்க வீண் அரட்டைகள் மற்றும் பகிர்வுகள் முதலானவற்றிற்கு பெயரளவில் இல்லாமல் தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதென்பது சாலச்சிறந்தது. இதற்கு கடை நிர்வாகிகளும் பெற்றோர்களும் நல்ல ஒத்துழைப்பு நல்குதல் அவசியம். இவர்களுடைய கண்மூடித்தனமான பணத்தாசையும் பிள்ளைப்பாசமும் அக்கறையின்மையும் காரணமாக வளரிளம் குடிமக்களின் ஒழுக்கம்,நம்பிக்கை, வாழ்வாதாரங்கள் சிதைவுக்கு உள்ளாகின்றன.

குடும்பத்திலும் சமுதாயத்திலும் இவ்வயதினருக்குத் தேவைப்படுவது நிரந்தர தனிமையோ, தனிமைப்படுத்துதலோ அல்ல. பாதுகாப்பான நல்ல அரவணைப்பு. அதுமட்டுமின்றிப் போதிய அக்கறையுடனான கண்காணிப்பு. இவற்றை உறுதி செய்வதும் தக்க ஆவனச் செய்வதும் இன்றியமையாதக் கடமைகள் எனலாம்.

இதுதவிர, குடும்பமானது தனி மனித நல்லொழுக்கப் பண்புகள், நீதிநெறிகள், தலைசிறந்த பண்பாட்டுச் செய்திகள் ஆகியவற்றைத் தொடக்கக்காலம் முதல் புகட்டிடும் முதல் பள்ளிக்கூடமாக இருத்தல் வேண்டும்.அங்கு சுதந்திரமும் சமத்துவமும் கொடிக்கட்டிப் பறந்திடுதல் நல்லது.அன்பும் பாசமும் எப்போதும் இயல்பாகத் தவழ்ந்திடுதல் என்பது இயற்கை.எனினும்,குடும்பப் பின்னணி,பொருளாதார நிலை,சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டியதன் தேவை ஆகியவற்றைக் கலந்துரையாடி நம்பிக்கை விதைத்து நல்லதொரு குடிமைப்பண்பை வளர்க்கும் களஞ்சியமாகவும் விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்ப்பதன் வாயிலாக வீட்டையும் நாட்டையும் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.இதற்கு அரணாகப் பள்ளியும் சமூகமும் விளங்கிடுதல் நலம்.