Blogger Widgets

Total Page visits

Wednesday, February 5, 2014

கணினித் துறையில் கணிசமான வாய்ப்புகள்!

பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக். இன்ஃபர்மேஷன் படிப்பவர்கள் படிக்கும்போதே தொழில்நுட்ப அறிவை புதுப்பித்துக்கொள்வதுடன் (Updating) எம்.இ., எம்.டெக். போன்ற மேற்படிப்புகளைப் படித்தால் மிகச் சிறந்த எதிர்காலத்தை பெறலாம். பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போதே, நீங்கள் தேர்வு செய்யக்கூடிய தொழிலின் தன்மை மற்றும் நிறுவனத்துக்கு ஏற்ற, கணினி அறிவை கற்பது அவசியம். 

ஆங்கில மொழி அறிவு மிக அவசியம். பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களின் பாடத் திட்டத்துக்கும் அவர்கள் செல்லும் பணியின் தன்மைக்கும் இடைவெளி அதிகமாக உள்ளது. இதனால் சிறந்த மதிப்பெண் எடுத்தவர்களும்கூட பணியில் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. எனவே, மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே, புதியதாக அறிமுகமாகும் கிளவுட் கம்ப்யூட்டிங், ஆர் - லேங்குவேஜ், பிக் - டேட்டா, ஹேடூப் (HADOOP), டேட்டா அனலைடிக்ஸ் போன்ற கணினி தொழில்நுட்பங்களை கற்பது அவசியம். 

பெரிய நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அதில் தகுதி பெறுவதன் மூலம் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். இதுபோன்ற தேர்வுகள் குறித்து பலரும் அறியாமல் இருக்கின்றனர். வேலை வாய்ப்பு இணைய தளங்களில் தொடர்பில் இருப்பதன் மூலம் மைக்ரோ சாஃப்ட் ஸ்டூடன்ட் பார்ட்னர் புரோகிராம், ஃபேஸ் புக் அம்பாசிடர், கூகுல் அம்பாசிடர், மொசிலா கேம்பஸ் ரெப்ரசென்டேட்டிவ், ஒபேரா கேம்பஸ் க்ரு, மைக்ரோசாஃப்ட் இமேஜின் கப், ஐ.பி.எம். கிரேட் மைண்ட், கூகுல் சம்மர் கோப், ஃபேஸ் புக் எக்கத்தான் போன்ற பெரும் நிறுவனங்களின் போட்டித் தேர்வுகளை அறிந்துகொள்ளலாம். 

அதேபோல், இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே சிஸ்கோ சர்டிஃபிகேஷன், மைக்ரோசாஃப்ட் சர்டிஃபிகேஷன், சன் சர்டிஃபிகேஷன், ஆரக்கல் சர்டிஃபிகேஷன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடிப்பது வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும். எம்.இ. படிக்க விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், வயர்லெஸ் நெட்வொர்க்கிங், சாஃப்ட்வேர் வொர்க்கிங் இன்ஜினீயரிங், சைபர் நெட்வொர்க்கிங் செக்யூரிட்டி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை தேர்வு செய்யலாம். 

ஐ.ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மென்ட் பட்ட மேற்படிப்பு உள்ளது. பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 இடங்களில், அக்கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. GATE தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை உண்டு. இதனை படிப்பவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பு உண்டு. தவிர எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகள் மூலமும் சிறப்பான வேலை வாய்ப்பு பெறலாம்.

No comments: