சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நமது அரசியல் சட்டம் கூறுகிறது; ஆணும்
பெண்ணும் சமம் என்று நம்புபவன்; அதன் மூலம் நாட்டை முன்னேற்ற நினைப்பவன்
நான். ஆனால் தற்போது குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கும் பல சட்டங்களைக்
அரசு கொண்டுவருகிறது.
2013ம் வருடத்திய இந்து திருமண திருத்த மசோதாவின் படி, ஒரு பெண் விவாகரத்து
கோரி்ப் பெற்றால், அவருக்கு கணவரின் சொத்தில் பாதி வழங்கப்பட வேண்டும்.
கணவரின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் சேர்த்த
சொத்தாகவும் இருந்தாலும், அதில் பாதியைப் பெற விவாகரத்து கோரும் மனைவிக்கு
உரிமை உண்டு என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தம். மேலும் மனைவி விவாக
ரத்து கோரினால் அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை.
இது சட்டமாக மாறினால், அது சமுதாயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
இந்த திருத்த மசோதா ஒரு தலைப்பட்சமானது; பாரபட்சமான இத்தகைய சட்டங்களை
எதிர்க்க வேண்டும். நம்பிக்கை அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப
நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்ற
விடக்கூடாது.
இந்த திருத்த மசோதாவை மேலோட்டமாக படித்தாலே, நாம் திருமணம் இல்லாத ஒரு
சமுதாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்ிழோம் என்பது தெளிவாகும். இதனால்
முறையற்ற உறவுகளும் தந்தையர் இல்லாத குழந்தைகளும் உருவாகும் நிலை ஏற்படும்.
பொறுப்பற்ற பெண்களுக்கு இந்த சட்டத் திருத்தம் மேலும் ஒரு அராஜக ஆயுதமாக
கிடைத்து விடும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதென்பது, ஆண்களின் உரிமைகளை
ஒடுக்குவதாக இருக்கக்கூடாது.
இந்த புதிய சட்டத் திருத்ததின்படி, மனைவி விவாகரத்து கோரினால், கணவனால் அதை
மறுக்க முடியாது. இது அரசியல் சட்டத்ததுக்கு எதிரானதல்லவா? ஏன் கணவன்
விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்யக்கூடாது? விவாகரத்து பெறும்
மனைவிக்கு கணவனி்ன் பரம்பரைச் சொத்திலும், சுயமாக சேர்த்த சொத்திலம்
பங்குஎன்பது எப்படி நியாயம்? ஒரு நாள் மனைவியாக இருந்தாலும், கணவனின்
பரம்பரைச் சொத்திலும், அவன் உழைப்பால் சேர்த்த சொத்திலும் உரிமை
கோருவதென்பது அர்த்தமற்றதாக இருக்கிறதே.
சொத்தில் பங்கு கேட்பதற்கு, குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டு்ம் என்று நிர்ணயிக்கப்பட வேண்டும்.
சட்டம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்க வேண்டு்ம்; கணவன்
விவாகரத்து கோரினால் அதை எதிர்க்க மனைவிக்கு உரிமை இருக்கும்போது, மனைவி
கோரும் விவாக ரத்தையும் எதிர்க்க கணவனுக்கு உரிமை தரப்பட வேண்டும்.
விவாகரத்தின்போது பரபம்பரைச் சொத்தை கணக்கில் கொள்ளக்கூடாது. நிதிநிலைச்
சிரமம் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்; இல்லையேல்
பெண்கள் இதையே வியாபாரமாக கருதி விடக்கூடும்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தையும், இநத் திருமணத்தால் இருவருக்கும்
ஏற்பட்ட இழப்பையும் கருத்தில் கொண்டு நிதி .உதவி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் விவாகரத்து வழங்கப்படும் முன்
நிர்ணயிக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதால்
எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்த சட்டங்கள் அப்பாவி பெண்களுக்கு பயனுள்ளவைதான்; ஆனால் வேண்டுமென்றே
தவறும் செய்யும் பெண்கள் இதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
நிறைவாக இந்த பதிய திருத்த சட்டத்தால் குடு்ம்ப ஒற்றுமையை நாம் இழப்போம்;
தற்கொலைகள் அதிகரிக்கும். குழந்தைகள் தாய் தந்தையர் கவனிப்பின்றி
அனாதைகளாக அடிமைகளாக மாற்றப்படுவர். இததகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க,
இப்போதே நடவடிக்கை எடுப்பார்களா? .
Sourcse dinamalar
No comments:
Post a Comment