Blogger Widgets

Total Page visits

Tuesday, July 31, 2018

இன்ஜி., கவுன்சிலிங்கில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆதிக்கம் : கொங்கு மண்டல கல்லூரிகளுக்கு அதிக மவுசு!


சென்னை : அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கணினி அறிவியல் பாடப்பிரிவை, அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். முதல் சுற்றில், பெரும்பாலானோர், கொங்கு மண்டல கல்லுாரிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.



அண்ணா பல்கலை சார்பில், 509 கல்லுாரிகளில் உள்ள, 1.70 லட்சத்து, 628 இடங்களுக்கு, பொதுப் பிரிவு ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதல் சுற்றில், 190 வரையில், 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 10 ஆயிரத்து, 734 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 7,347 பேர் மட்டும், கட்டணம் செலுத்தினர். அதிலும், 7,303 பேர், விருப்ப பாடப்பிரிவை பதிவு செய்தனர். இவர்களில், 6,768 பேர் மட்டும், இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை, அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, குரோம்பேட்டை, எம்..டி., மற்றும் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். திருநெல்வேலி, நாகர்கோவில், ஆரணியில் உள்ள, பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளிலும், அதிக இடங்கள் நிரம்பின.

மேலும், கோவை, பி.எஸ்.ஜி., - மதுரை தியாகராஜர் கல்லுாரி, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை, அரசு தொழில்நுட்ப கல்லுாரி, கோவை குமரகுரு,ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி ஆகியவற்றிற்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரிகளை பொறுத்தவரை, எஸ்.எஸ்.என்., கல்லுாரி, திருவள்ளூர், ஆர்.எம்.கே., கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லுாரி, சோழிங்கநல்லுாரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லுாரி ஆகியவற்றை, அதிகம் தேர்வு செய்துஉள்ளனர். மாணவர்கள் இடங்கள் பெற்றுள்ள பல கல்லுாரிகள், தன்னாட்சி கல்லுாரிகள்.

பாடப்பிரிவு வாரியாக, கணினி அறிவியலை, 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்துஉள்ளனர். அரசு ஒதுக்கீட்டு கட்டணத்தில், கணினி அறிவியல் கிடைக்காதோர், சுயநிதி கல்லுாரிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.சுயநிதி கல்லுாரிகளிலும், கணினி அறிவியல் இடம் கிடைக்காதோர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவான, இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவை உறுதி செய்துள்ளனர். மெக்கானிக்கல் உட்பட மற்ற பாடப்பிரிவுகள், மெதுவாகவே நிரம்புகின்றன.

விருப்ப பட்டியல் முக்கியம்

ஆன்லைனில் விருப்ப பதிவு செய்த மாணவர்களில் முதல் 3,000 இடங்கள் வரை தரவரிசை பெற்றவர்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தமுதல் 10 பாடப்பிரிவுகளுக்குள் கிடைத்துள்ளது. தரவரிசையில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 59வது விருப்ப பதிவு வரை இடங்கள் கிடைக்கவில்லை.ஒரு மாணவருக்கு அவர் பதிவு செய்த 60வது விருப்ப பாடமேகிடைத்துள்ளது. இதேபோல் 1,000 மாணவர்கள் வரை 30 முதல் 60வது விருப்பம் வரை பதிவு செய்த இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில் 175 முதல் 190 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருப்ப பதிவு நேற்று துவங்கியது. நாளை மாலை 5:00 மணிக்கு பதிவு முடிகிறது. இதில் மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை அதிகம் பதிவு செய்வது நல்லது.அதேநேரம் தங்களின் கட் ஆப் மதிப்பெண் நிலவரத்துக்கு எந்த கல்லுாரி கிடைக்கும் என்பதை சரியாக கணித்து பதிவுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
'ஹவுஸ் புல்' கல்லுாரி

முதல் சுற்றில் அண்ணா பல்கலையின் நேரடி மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் 2,080; அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில் 2,430 மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் 2,258 இடங்கள் நிரம்பியுள்ளன. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில் 18 பாடப்பிரிவுகளில் 241 இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அதிலும் சிவில் இன்ஜி., மற்றும் மெக்கானிக்கல் இன்ஜி., பாடப்பிரிவில் தமிழ் வழியில் தலா 60 இடங்கள் வீதம் 120 இடங்கள் உள்ளன.

Click here for source link