Blogger Widgets

Total Page visits

Saturday, April 15, 2017

இந்த டெக்னாலஜி தெரிந்தால் போதும் மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம்..!


உலகம் முழுவதிலும் உள்ள நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்தல், சம்பளத்தைக் குறைத்தல் ஆட்டோமேசன் தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் என்று செய்து வரும் போதிலும் பல தொழில்நுட்பங்கள் புதிதாக வந்துகொண்டே தான் இருக்கின்றன. அதனைக் கற்றுக்கொள்பவர்களுக்கு ஐடி துறையில் இருந்து வேலை இழப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது. ஆம், ஒரு காலத்தில் நாம் சி, சி++, ஜாவா, .நெட் உள்ளிட்ட கணினி மிழிகள் தெரிந்து இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று இருந்தது எல்லா இன்றளவும் நாம் கேள்வி பட்டு வந்தாலும் பல புதிய தொழில்நுட்பங்கள் புதிதாக ஐடி துறையை ஆக்கிரமித்து உள்ளன. இந்த டெக்னாலஜிகள் பெரும்பாலும் டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்றவை ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்களும் இது போன்ற புதிய டெக்னாலஜியை ஊழியர்களுக்குக் கூடுதலாகப் பயிற்சியும் அளிக்கின்றன. இப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நீண்ட கால ஐடி துறையில் உங்களால் இருக்க முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பங்களை நீங்கள் தெரிந்து வைத்து இருந்தால் மைக்ரோசாப்ட், ஐபிஎம் என மிகப் பெரிய நிறுவனங்களில் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம். எனவே இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் என்னென்ன, எந்த நிறுவனங்களில் எல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

ஸ்பார்க் (Spark) ஆரக்கிள், கேப்ஜெமினி, எம்பசிஸ், சிட்டி மற்றும் டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் ஸ்பார்க் தொழில்நுட்பம் தெரிந்தவர்களைப் பணிக்கு எடுக்கின்றனர். இந்த மென்பொருள் மூலமாகக் கிளவுடில் உள்ள மிகப் பெரிய தரவை எளிதாகத் தங்களுக்குக் கிடைத்துள்ள ப்ராஜக்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் மாற்றிக்கொள்ளும். ஸ்பார்க் தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்கள் 14.6 லட்சம் வரை ஆண்டுச் சம்பளம் பெற முடியும்.

அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) 2017-ம் ஆண்டு அதிக அளவில் எதிர்பார்க்கும் திறன் என்றால் அது அமேசான் வெப் சர்வீசஸ் தெரியுமா என்பதாகத் தான் இருக்கும். அக்சன்சர், ஐபிஎம், விப்ரோ மற்றும் அமேசான் மேம்பாட்டு மையங்களில் அமேசான் வெப் சர்வீசஸ் வல்லுநர்களுக்கான தேவை அதிகமாக இருக்கின்றது. இதுவும் ஒரு கிளவுடு தொழில்நுட்பம் தான். இந்த அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மென்பொருள் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் ஆண்டுக்கு 13.8 லட்சம் வரை சராசரியாகச் சம்பளம் வாங்கலாம்.

டேவ்ஓப்ஸ் (DevOps) டேவ்ஓப்ஸ் (DevOps) ஒரு ஆடோமேடிக் மென்பொருள் தளமாகும், இந்தத் தொழில்நுட்பத்தைத் தெரிந்தவர்களுக்கு அக்சன்சர், டெக் மஹிந்த்ரா, பார்க்லேஸ் மற்றும் எக்ஸ்பீடியா நிறுவனங்களில் எளிதாக வேலைக் கிடைக்கும். டேவ்ஓப்ஸ் உங்களுக்குத் தெரிந்தால் 13.7 லட்சம் ரூபாய் ஆண்டுச் சம்பளமாகப் பெற முடியும்.

மெஷின் லேர்னிங் மெஷின் லேர்னிங் தெரிந்த பொறியாளர்களுக்கு அமேசான் மேம்பாட்டு மையம், மைக்ரோசாப்ட் இந்தியா ஆர் & டி, அக்சன்சர், ஐபிஎம், GE இந்தியா மற்றும் ஹர்மன் உள்ளிட்ட நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. இந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் பணிபுரியக்கூடிய மென்பொருள் ஆகும். மெஷின் லேர்னிங் உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஆண்டுக்கு 13.7 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

ஏஜ்யூர் (Azure) மைக்ரோசாப்ட் இந்தியா ஆர் & டி, கேப்ஜெமினி, எர்னஸ்ட் & யங், டெல் மற்றும் ஹனிவெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஜ்யூர் (Azure) கிளவுட் மென்பொருள் தெரிந்து பொறியாளர்களை அதிகமாகப் பணிக்கு எடுக்கின்றன. இந்தத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ஆண்டுக்கு 13.1 லட்சம் வரை சம்பளம் வாங்கலாம்.

டேபில்யூ (Tableau) எர்னஸ்ட் & யங், அக்சன்சர், வோடபோன், மோர்கன் மற்றும் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் டேபில்யூ (Tableau) தொழில்நுட்பம் தெரிந்தவர்களை அதிக ஆளவில் பணிக்கு எடுக்கின்றன. டேபில்யூ (Tableau) ஒரு வணிக நுண்ணறிவு மென்பொருள் ஆகும். இந்தத் தொழில்நுட்பம் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் ஆண்டுக்கு 13 லட்சம் சம்பளம் பெற முடியும்.

பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் ஐபிஎம், கேபிஎம்ஜி, எச்பி, சேப் லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் தெரிந்தவர்களை அதிக அளவில் பணிக்கு எடுக்கின்றன. பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் ஆண்டுக்கு 12.4 லட்சம் வரை சராசரியாகச் சம்பளம் வாங்கலாம்.

சேல்ஸ்ஃபோர்ஸ் ஏடோஸ், லின்க்டுஇன், ஜேஸ்லர், கேப்ஜெமினி மற்றும் அக்செஞ்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர் உறவுகள் மேலாண்மைப் பயன்பாடுகளை அறியப்படும் சேல்ஸ்ஃபோர்ஸ் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை அதிக அளவில் பணிக்கு எடுக்கின்றன. சேல்ஸ்ஃபோர்ஸ் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் சராசரி சம்பளம் வருடத்திற்கு 11.8 லட்சமாக உள்ளது.

ஜீரா ஜேபி மோர்கன், ஹர்மன், டெக் மஹிந்த்ரா, விசா மற்றும் சிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் கண்காணிப்புப் பிழைகள் மற்றும் திட்ட மேலாண்மை செயல்பாடுகளைச் செய்யும் ஜீரா தொழில்நுட்பத்தைத் தெரிந்தவர்களைப் பணிக்கு ஆண்டுச் சம்பளம் 11.7 லட்சம் ரூபாயுடன் எடுக்கின்றன.

செலினியம் ஜேபி மோர்கன், எம்பசிஸ், டெக் மஹிந்த்ரா, ஆரக்கிள் மற்றும் டெல் போன்ற முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலை பயன்பாடுகள் பணிகளைச் செய்யக்கூடிய செலினியம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை ஆண்டுக்கு 9.9 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணி அமர்த்துகின்றன.


நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.