Blogger Widgets

Total Page visits

Saturday, August 27, 2016

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனியொருவனா, ஆயிரத்தில் ஒருவனா? உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் நீங்கள் யார் என்பதை...!  
உலகின் பெரும் ஆளுமைகள் அனைவரும் தனித்துவமான உடல்மொழியை  கொண்டவர்கள். நம் அருகாமை உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் முதல் காட்சி சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினிகாந்த். உடைமைகளை பெற்றுக்கொண்டு சிறை வாசலுக்கு நடந்து வர கதவுகள் திறக்கின்றன.அவர் நடந்து வருவது மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது. ஆனாலும் அவரின் முகத்தைக் காட்டும் வரையில் கூட பொறுத்திருக்காமல் எழுந்து நின்று கைதட்டி விசிலடிக்கிறோம் என்றால். அது அவரது உடல்மொழி செய்யும் மேஜிக். உங்கள் உடல்மொழியை மேம்படுத்திக் கொள்வதற்கான சில சிம்பிள் டிப்ஸ் இங்கே...
1. நம்மில் பெரும்பாலானோரும்  பேசுகையில் கைகளை மார்புக்கு குறுக்காக  கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்போம். கைகளை காட்டிக்கொள்வது என்பது நம் எதிராளியிடம்  நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.  மேலும் அந்த உரையாடலில்  கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து  அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவும் செய்கிறோமாம்.
2. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது. தாடையை சொறிவது. மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு ந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.   

3. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதின் மூலமே சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள்  உங்கள் சின்ன சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும். 
5. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.   
6. போலியாக  செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள். 
7. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர்  காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ. அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது. காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம். நம் மீதான நம்பிக்கையை  சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனியொருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான்.  ஆனால் நம் உடல், நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!
- க.பாலாஜி

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Wednesday, June 1, 2016

சிக்கல்களை எதிர்கொள்வதே வாழ்க்கை!

மனித வாழ்வில் எவ்வளவோ சிக்கல்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் அனைவராலும் தீர்வு கண்டுவிட முடியாது. ஆனால் அதேசமயம் நமது வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். வாழ்வின் சிக்கல்களுக்கு வயதான அனுபவம் உடையவர்களிடமும் இதற்கென்றே ஆலோசனை கூறுவதற்காக உள்ள மையங்களிலும் சென்று ஆலோசனை பெறலாம்.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில் இருந்த பெரியோர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டினர். அவர்களின் மதிப்புமிக்க வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்று தனிக்குடும்பங்கள் அதிகம் உருவாகியுள்ள நிலையில், வழிகாட்டவோ, ஆலோசனை சொல்லவோ யாரும் இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் +2 தேர்வு முடிவுகள், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அத்தேர்வுகளில் தோல்வி அடைவோர் தங்களின் வாழ்வை அத்தோல்வியால் முடித்துக் கொள்கின்றனர். இது முறையான செயலல்ல. ஒரு சிக்கலுக்குத் தீர்வு தன்னை மாய்த்துக் கொள்வதுதான் என்றால் யாருமே, இந்த உலகில் வாழ முடியாது. அதனால் எந்த ஒரு சிக்கலுக்கு ஆட்பட்டாலும் தக்கவர்களிடம் ஆலோசனை பெற்று அதிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கலாம்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நண்பனால், ஆசிரியரால், நிர்வாகத்தால், சக வகுப்புத் தோழனால் ஏற்படும் சிக்கல்கள் பல உள்ளன. இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு நல்ல நண்பனைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதுதான். இன்றைய நவீன ஊடக உலகில் செல்பேசி, இணையம், கணினி, கட்செவி அஞ்சல் என்று பல உள்ளன. அவற்றின் மூலம் வளரவும் முடியும்தாழ்ந்து போகவும் முடியும். அதனால் அவற்றைத் தம் வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும்.
 தமது படிப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் கூட ஏதோ ஒரு சிக்கலால் மனம் பாதிக்கப்பட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். முறையான கல்வி, தகுந்த ஆலோசனை, அன்பு, நல்ல நண்பன் கிடைக்காமை, பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமை, பெற்றோரின் அறியாமை, ஆசிரியர்களுக்குப் பயப்படுதல், பெற்றோருடன் பல வருடங்களாகப் பேசிக் கொள்ளாமல் இருப்பதால் மன இறுக்கம் என்று பல்வேறு சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுவதும் அவற்றிற்குத் தகுந்தத் தீர்வுகள் கிடைக்காததும்தான் காரணமாகும். எனவே எந்தச் சிக்கலாக இருந்தாலும் கூச்சப்படாமல், தன்னைத் தாமே மிக உயர்வாக நினைத்துக் கொண்டு தனிமைப்படாமல், தகுந்தவர்களிடம் ஆலோசனை பெற்று, அதிலிருந்து மீண்டு வருவதில்தான் வாழ்வின் வெற்றியே அடங்கியுள்ளது.
படிக்கும் காலங்களில் மனத்தைக் கட்டுப்படுத்திபடிப்பில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வாழ்ந்து வந்தால், பிற்கால வாழ்க்கை மிகவும் நன்றாக அமையும். அனைத்து வளங்களும் நம்மைத் தேடிவரும். அதனால் இளமைப்பருவத்தில் மனத்தை அடக்கி வாழ்வது, ஒழுக்கம், கட்டுப்பாடு  ஆகிய  தன்மைகளைப் பின்பற்றுவது மிக மிக முக்கியம்.
  

Saturday, May 28, 2016

7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி!

டித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர். 



மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர். 
அதோடு 300 பார்சல் லாரிகளும்  நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன்,  பெரிய  பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.

தனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்....
'' நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில்  பெரிய நாட்டம் இல்லை.  சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு  அதிகம்.  ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதுக்கு 'வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்'  என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு  ட்ரிப் அடித்தேன். 


அந்த ஒற்றைப் பஸ்ஸின்  ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள். எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் 
இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன்.  எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். 'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.

மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி,  அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக  வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன்.  எனது தாத்தா குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து 'என்' ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரைவைத்து,  டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.
'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர  மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு  இடையே இயக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில்,  கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின. 
பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம்  உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட,  இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து,  ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன்  உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.


அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.


இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில், 95 படுக்கை வசதி கொண்டவை. இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு. நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.


ரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது. 


ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான்  17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர்,  24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து,  இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்" என்ற நடராஜன்," அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட  அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.'' என சொல்லி முடித்தார். 


-ஜி.பழனிச்சாமி   
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Monday, January 11, 2016

**அலாரம் வைத்து எழுந்திருக்கக் கூடாது**


நம்மில் பலருக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும். காலையில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நிம்மதியாக உடல் முழுவதும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதுஅலாரத்தின் சத்தம் வேகமாக அடிக்கும்பொழுதுநாம் திடீரென எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி அலாரத்தின் மூலமாக நம் தூக்கம் கலையும் பொழுது நமது உடல் பாதிப்பு அடைகிறதுநமது உடலில் ஒருவிதமான டென்சன் ஏற்படும். அந்த டென்சன் அந்தநாள் முழுவதும் நமக்கு இருக்கும். எனவே தயவு செய்து அலாரம் வைத்து எழுந்திருக்காதீர்கள். சற்று சிந்தித்துப்பாருங்கள்ஒருவேளை அலாரம் அடிக்கவில்ல என்றால் என்ன நடந்திருக்கும். நீங்கள் ஒரு இரண்டு மணிநேரம் அதிகமாகத் தூன்கியிருப்பீர்கள் அல்லவாஅப்படி என்றால் என்ன அர்த்தம்நம்உடலுக்கு மேற்கொண்டு இரண்டு மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். நம் உடலுக்கு தூக்கம் தேவைப்படும்பொழுது அந்த தூக்கத்தை தூங்காமல் அதை கட் செய்து எழுந்திருத்தால் அந்த தூக்கத்தை யார் தூங்குவதுதினமும் நாம் அலாரம் வைத்து இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தைக் கட் செய்தால்பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் மொத்தமாக தூங்கவேண்டியிருக்கும்.


எனவே தயவுசெய்து அலாரம் பயன்படுத்தாதீர்கள். நாங்கள் சீக்கிரமாக எழுந்திருக்கவேண்டும் அலாரம் இல்லாமல் எப்படி எழுந்திருப்பது என்று சிலர் கேள்வி கேட்கலாம்காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று அனைவரும் பிரச்சாரம் செய்கிறார்கள்,. ஆனால் சீக்கிரம் படுக்கவேண்டும் என்று இதுவரை யாரும் பிரச்சாரம் செய்வதே கிடையாது. இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியும். நாம் T.V அல்லது சினிமா படங்கள் போன்றத் தேவையில்லாத காரியங்களை இரவு மணி வரை அல்லது இரண்டு மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு. இரவு இரண்டு மணிக்கு யார் படுத்தாலும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்எனவே இரவு தாமதமாகப்படுத்தால் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருக்கவேண்டும். எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும். எனவே அலாரம் பயன்படுத்துவது ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு தினமும் பயன்படுத்தாமல் எப்போதாவது அவசரக் காலத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

மனதில் அதிகம் குழப்பம் இருந்து இரவு நீண்ட நேரமாக தூக்கம் வராதவர்களுக்கு ஒரு சுலபமான வழியுள்ளது. படுத்து ஓய்வு எடுத்தால் ஓய்வு மெதுவாகத்தான் கிடைக்கும். ஆனால் உட்கார்ந்து ஓய்வு எடுத்தால் ஓய்வு சீக்கிரமாக கிடைக்கும். எனவே படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள். நீங்கள் நேரடியாக படுக்காமல் அமர்ந்து முதுகுக்கு சப்போட்டு கொடுத்து ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து தலைக்கு சப்போர்ட் கொடுத்து கண்களை மூடி அமைதியாக காலை நீட்டியோ அல்லது சம்மணம் இட்டு அமர்ந்து தூங்க ஆரம்பியுங்கள். அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும்,புத்தியும் மிகவிரைவாக அடுக்கி VAITHTHUVIDDU உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.

தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள். வர்ம சிகிச்சையில் கொண்டை கொள்ளி என்று கூறுவார்கள். இன்றும் கிராமங்களில் ஒரு குழந்தைக்கு ஏதாவது வியாதி வந்தால் ஒரு பாட்டி வைத்தியம் செய்வார்கள். பூக்கட்டும் வெள்ளை நூலை ஒரு அடி அல்லது இரண்டு அடிக்கு எடுத்து அதை வாயில் வைத்து பந்துபோல் உருட்டிஎச்சில் கலந்து குழந்தைகளை அமரவைத்துகுழந்தையின் உச்சந்தலையிலிருந்து இரண்டு அடி அல்லது நான்கு அடி உயரத்திலிருந்து அந்த தாய் வாயிலுள்ள எச்சில் கலந்த நூல் உருண்டையை துப்புவதால்அந்த உருண்டை நேரடியாக உச்சந்தலையில் படும்பொழுது அந்த ஒரு வினாடி தொடுவதன் மூலமாக குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுநோய்கள் குணமாகும் என்று பல கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். 

சிலர் கிராமங்களில் அந்த எச்சில் கலந்த பந்து உருண்டையை உச்சந்தலையில் ஒட்டி வைத்துவிடுவார்கள். எனவே உச்சந்தலை என்பது 72,000 நாடிநரம்புகள் சங்கமிக்கும் இடம். இந்த இடத்தில் நாம் சக்தியை செலுத்துவதன் மூலமாகவும் மசாஜ்செய்வதன் மூலமாகவும்தொட்டு தடவுவதன் மூலமாகவும் அல்லது நினைத்து பார்ப்பதன் மூலமாகவும் 72,000 நாடிநரம்புகளை நாம் அமைதிப்படுத்த முடியும். எனவே இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்றால்,உச்சந்தலையை உங்களுக்கு நீங்களே தடவிக் கொடுத்து தூங்கிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நோய் இருந்தாலோ அல்லது தூக்கம் வராமல் அழுதுக்கொண்டு இருந்தாலோஉச்சந்தலையைத் தடவிக்க்கொடுத்தால் அந்த குழந்தைக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நமது கையில் உள்ள சுண்டுவிரலையும்,கட்டைவிரலையும் தவிர மற்ற மூன்று விரல்களின் நுனிகளால் நமது தாடைக்கு கீழே உள்ள எலும்பில் லேசாக தடவிக்கொடுப்பதன் மூலமாக உடலில் தூக்கத்திற்கு தேவையான சுரப்பிகளை சுரக்கமுடியும். நமது வீடுகளில் குழந்தைகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருப்பார்கள். நடந்துகொண்டு படிக்கும்பொழுதும்அமர்ந்துகொண்டு படிக்கும்பொழுதும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆனால் kகுப்புறப்படுத்து இரண்டு மணிக்கட்டுகளையும் தாடைக்கு கீழே சப்போர்ட் கொடுத்துஎப்பொழுது படிக்க ஆரம்பிக்கிறீர்களோ கண்டிப்பாக அரைமணி நேரத்திற்குள் நன்றாக தூக்கம் வந்துஅவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு தூங்கிவிடுவார்கள். எனவே நமக்கு தூக்கம் வரவில்லை என்றால்,குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவீர்கள்.

வாழ்க லமுடன்!

தகவல் நண்பர்களுக்காக இந்த வலைத்தளத்தில் இருந்து பகிரபடுகிறது.