கடந்த ஆண்டு மொத்தம் 1.05 லட்சம் பொறியியல் கல்லூரி இடங் கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன. இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் அதிக மாகும் என்றே தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் முடியவிருக்கும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, மொத்தம் எத்தனை இடங்கள் காலியாக இருக்கும் என்று உத்தேசமாகக்கூட கூறமுடியாத நிலையில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளனர்.
குறைந்தபட்சம் 100 கல்லூரி களுக்கு கணிசமான எண்ணிக் கையில் மாணவர்கள் வரவே இல்லை என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. பொறியி யல் கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பது புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்கிறது. ஆரம்பத்தில் மிகவும் குறைவாக இருந்த காலியிடங் கள் எண்ணிக்கை இப்போது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 572 பொறியியல் கல்லூரிகள் மாண வர்களைச் சேர்த்துக்கொண்டன. சில கல்லூரிகளில் 12க்கும் குறைவான மாணவர்களே சேர்ந் தனர். தொழில்நுட்பக் கல்விக் கான அனைத்திந்திய கவுன்சில்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
‘‘கல்லூரிகளுக்கு அங்கீ காரம் வழங்கும் நடைமுறை பெயரளவுக்குத்தான் கடைப் பிடிக்கப்படுகிறது, எனவே தகுதி யற்ற கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என்கிறார் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ். வைத்யசுப்ரமணியம். "சுமாரான அடித்தளக் கட்டமைப்பு வசதிகளையும், கற்பித்தலில் அதிக அனுபவமோ, திறமையோ இல்லாத ஆசிரியர்களையும் கொண்ட கல்லூரிகளால் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. வேலைக்கே வைத்துக் கொள்ளமுடியாத பட்டதாரி களைத்தான் இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் அனுப்பிக்கொண் டேயிருக்கும்" என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.
தரம் குறைந்த கல்லூரிகளால், மாணவர்களால் வேலைதேட முடிய வில்லை என்பதற்கு சமீபத் திய ஒரு சம்பவமே நல்ல உதார ணம். அண்ணா பல்கலைக்கழகம் நிறுவிய 'பல்கலைக்கழகம் - தொழில்துறை கூட்டுச் செயல் பாட்டுப் பிரிவு' என்ற அமைப்பு மொத்தம் 24,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சியை அளித்தது. ஆனால் அவர்களில் 2,600 பேர் மட்டுமே வேலை பெற்றனர். அது பயிற்சியில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை யில் சுமார் 11% தான்.
ஆனால் இந்த மையத்தின் இயக் குநரான டி. தியாகராஜன் இதை ஏற்க வில்லை. எந்த பல்கலைக்கழக வளாகத்தில் வேலைக்கு ஆள் எடுத் தாலும் அதிகபட்சம் 10% முதல் 15% வரையில்தான் ஆட்களைத் தேர்வு செய்வார்கள் என்கிறார்.
மற்றொரு பிரச்சினை, கல்லூரி களுக்குத் தரச்சான்று அளிப்பது. கல்லூரிகளின் கட்டிடம், ஆசிரியர்கள், நிர்வாகிகள் எண் ணிக்கை, மொத்தமுள்ள துறைகள், ஆய்வுக்கூடங்கள், நூலக வசதி, உயர் கல்விக்கு அவசியப்படும் இதர வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி அவர் களுடைய கல்வி அனுபவம், பட்டங்கள், ஆய்வு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரியும் தரப் படுத்தப்படுகின்றன. கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வில் அடைந்த தேர்ச்சி, அவர்கள் பெற்ற பல்கலைக்கழக சான்றிதழ் கள், ரேங்க், பரிசுகள் ஆகிய வற்றின் அடிப்படையிலும் தரச் சான்றுகள் தரப்படுகின்றன. இந்த தரச்சான்றை வழங்க தேசிய வாரியமும் இருக்கிறது. இதுவரை யில் மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகளில் 20% கல்லூரிகள் மட்டுமே இந்தச் சான்றிதழ் பெற முன்வந்துள்ளன என்று கல்வி ஆலோசகர் மூர்த்தி செல்வகுமரன் தெரிவிக்கிறார்.
அமைச்சரின் ஒப்புதல்
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை (2014) ஒற்றைச் சாளர முறையில் மூன்றில் ஒரு பங்கு இடம் காலியாக இருக்கிறது என்பதை உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் ஒப்புக்கொள்கிறார்.
"திங்கள்கிழமை வரையில் மொத்தம் 5,255 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்க ளில் 3,479 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு வந்து இடங்களைப் பெற்றனர். 1,776 இடங்கள் நிரப்பப் படவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பலர் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கலாம். சிலர் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் இடம் பெற்று அவர்கள் விரும் பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்திருக்க லாம்" என்கிறார் அமைச்சர்.
தமிழ்நாட்டில் உள்ள 572 பொறியி யல் கல்லூரிகளில் (2013-14 நிலவரப்படி) மொத்த இடங்கள் 2.88 லட்சம். இவற்றில் 1.82 லட்சம் இடங்கள் அரசினால் ஒதுக்கப் படுபவை. சில கல்லூரி நிர்வாகங் களே தங்களுடைய இடங்களிலும் ஒரு பகுதியை அரசிடமே ஒப்படைத்துவிட்டதால் இந்த எண் ணிக்கை 2.11 லட்சமாகிவிட்டது. ஆனால் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1.69 லட்சம்தான். எனவே குறைந்தபட்சம் 42,000 இருக்கைகள் இந்த ஆண்டு நிரப்பப் படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி திஹிந்து
No comments:
Post a Comment