Blogger Widgets

Total Page visits

Sunday, March 31, 2013

CMS Educational Institutions

Wanted
HOD, Senior Lecturer, Lecturer (For Polytechnic)
AUTO
CIVIL
CSE
EEE
ECE
MECH
ENGLISH
MATHS
PHYSICS
CHEMISTRY 

CMS Educational Institutions
CMS Nagar,
Eranapuram-637003
Namakkal District
Phone: 04286-263019, 263045
Email: info@cmsce.ac.in
Website: www.cmsce.ac.in

For More Details READ:
March 31, 2013 Dinamalar Pg.3 Madurai

அம்பலத்துக்கு வரும் அந்தரங்க உரையாடல்கள்! – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பாத்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என நாம் முடிக்கும் முன் பே…“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என்மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார்.என்னையும் அவர் அளவுக்கு பேச வைப்பார்” ’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. 

அவரைத்தேற்றும் விதமாக நாம்..“சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்கு றதுதானே… இதில் என்ன பிரச்சினை?’’ என்றோம்..அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிர வைத்தது.

31- phone couple
“அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்… இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி… எங்களுக்கே தெரியாமல்… எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி… இப்படிப் பண்ணி யிருக்கான்.

இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு… அதிர்ந்துபோய்… எனக்குத் தகவல் சொன்னார். கூடவே “உங்ககிட்ட உதவி கேள்’னும் சொன்னார். அதான் வந்தேன்”’என்று நம்மை அதிரவைத்தவர் அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்… அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம். கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்… அங்கே பதியப் பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு… பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்… அங்கே தோரணம் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தன.

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம் நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ… ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு…“இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல்வகை, நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட் டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட் கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால் சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா… யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ண முடியும்.

பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலை யிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க… நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேச றாங்கன்னு ஒட்டு கேட்க முடியும்.நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், “உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்’னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்’என்றார் விரிவாக.

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார்.

“”பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந் தப்ப… “எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்’னு ஒரு வெப் ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப் படத்தைப் பார்த்தே… கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத்திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். 

எடுத்த எடுப்பிலே “என் பேரு நந்தினி.மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும் னு ஆசையா இருக்கு’ என்றவள்…. தன் உடல் பாகங்களை வர்ணித்து … அதில் உள்ள மச்சங்களையும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்து விட்டது.

காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்தபோது இணையதளத்தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் பிடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. 

லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி… பணத்தை அந்த ஆபாசக் கும்பலிடம் பறி கொடுத்துக்கிட்டு இருக்காங்களோ”’ என்றார் எரிச்சலாக.

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் “”சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங்செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா… அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம்.

சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போ வழியோட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதே போல்… இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்… அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண் முடியும்.

இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடி பண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க் கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்” என்றார் கவலையாக.

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது’”மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறதெல்லாம் குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப் பிருக்கு. நாங்க இத தீவிர மா கண்காணிக்கிறோம்”’ என்றார் உறுதியான குரலில்.

இனி மேல் மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்…. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் அம்பலமாகி விடும் ஆபத்து இருக்கிறது.

Ramesh Devakottai@ ஒரு வார இதழ், Aanthaireporter - Online Tamil Magazine

தமிழகம் முழுவதும் கல்லூரிகளை எப்போது திறப்பது?

சென்னை: தமிழகம் முழுவதும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என, தெரியாமல், உயர்கல்வித்துறை கையை பிசைந்து வருகிறது. அரசுத் தரப்பில் இருந்து, நேற்று மாலை வரை, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், நாளை கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என, தெரிகிறது.

இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இம்மாத ஆரம்பத்தில் இருந்து, கல்லூரி மாணவர்கள், தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

காலவரையற்ற விடுமுறை:
படிப்படியாக, அனைத்து மாவட்டங்களிலும், போராட்டம் பரவியதால், கடந்த 15ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லூரி களுக்கு, கால வரையற்ற விடுமுறையை, உயர்கல்வித் துறை அறிவித்தது. இதற்கிடையே, பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால், அவர்களுக்கும், 18ம் தேதி முதல், கால வரையற்ற விடுமுறையை, அரசு அறிவித்தது. எனினும், மாணவர்கள் ஆங்காங்கே, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ""மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்,'' என, சட்டசபையில், முதல்வர் கேட்டுக்கொண்டார். இதனால், நாளை (ஏப்ரல் 1) முதல், கல்லூரிகள் திறக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வரை, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக, அரசுத் தரப்பில் இருந்து, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் வரவில்லை. இதனால், நாளை, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என,கூறப்படுகிறது.

"செமஸ்டர்' தேர்வு: அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: ஏப்ரல் 1ம் தேதி, கல்லூரி திறப்பது தொடர்பாக, சனிக்கிழமை மாலை வரை, அரசிடம் இருந்து, எந்த உத்தரவும் வரவில்லை. 1ம் தேதி, கல்லூரிகள் திறக்க வேண்டும் எனில், இரண்டு நாள் முன்கூட்டியே, அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான், சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் மாணவ, மாணவியர், கல்லூரிகளுக்கு திரும்ப வசதியாக இருக்கும். முதல் தேதி இல்லாவிட்டாலும், அடுத்த ஒரு சில நாட்களில், கல்லூரியை திறந்து விட்டால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் ஒரு வாரம் தள்ளிப் போனால், அடுத்த, "செமஸ்டர்' தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டியது வரும். இவ்வாறு, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் மாணவர்களுக்கு, மே மாதம், அடுத்த செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான பாடங்களை, உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். இரு வாரங்களாக விடுமுறை இருப்பதால், குறித்த காலத்திற்குள், பாடத் திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

எதிர்பார்ப்பு:
இதனால், கல்லூரி திறக்கப்பட்டதும், அனைத்து சனிக்கிழமைகளிலும், வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும், பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் அக மதிப்பீடு தேர்வும், தள்ளிப் போகலாம். மாநிலம் முழுவதும், 550 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 65க்கும் மேற்பட்ட, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், அங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பு தேதியை அறிவிக்காததால், உயர்கல்வித் துறை, கையை பிசைந்து வருகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தமிழக அரசு, விரைவில், கல்லூரி திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என, உயர்கல்வி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Thanks Dinamalar

Saturday, March 30, 2013

ஜிமெயிலில் புதிய Compose வசதி

கூகிள் தளம் வழங்கும் மிகச்சிறப்பான வசதி ஜிமெயில். ஜிமெயில் பல்வேறுபட்ட வசதிகளை நமக்கு அளிக்கிறது. தற்பொழுது புதியதாக புதிய Compose வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

உங்களுடைய ஜிமெயிலைத் திறந்தவுடன், இந்த வசதியைப் பற்றிய அறிவிப்பு வரும்.
அதில் அந்த வசதியைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தையும் மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு Learn More என்ற இணைப்பையும் வழங்கியிருப்பார்கள்.

சரி. இந்த புதிய Gmail Compose வசதியினால் என்ன பயன்?

நாம் ஜிமெயில் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே புதியதாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைப்போம். அப்போது Compose பட்டனை அழுத்தி புதிய மெயிலை தட்டச்சிடுவோம். அப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் இமெயில் தானாகவே மறைந்து Compose விண்டோ திறந்துகொள்ளும்.

இனி அவ்வாறில்லாமல், மெயிலைப் படித்துக்கொண்டிருக்கும்பொழுதே புதிய இமெயிலை தட்டச்சிட்டு அனுப்பலாம்.

புதிய New Gmail Compose வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

உங்களுடைய மின்னஞ்சலை நீங்கள் திறந்த உடன் இவ்வாறானதொரு விண்டோ உங்களுக்குத் தோன்றும். அதில் நீங்கள் Continue என்பதைக் கொடுத்தால் இவ்வசதியை நீங்கள் செயல்படுத்தலாம்.

அடுத்து Compose பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு இவ்வாறானதொரு புதிய New Message என்ற தலைப்பில் அமைந்த பெட்டித் திறக்கும்.

Gmail's new compose and reply experience

அதில் Recipient என்பதில் கிளிக் செய்தால் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி தட்டச்சிடும் பெட்டி To தோன்றும். அதற்கு நேர் எதிராக இருக்கும் CC, BCC என்பதை கிளிக் செய்து தேவையான மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட முடியும்.
அடுத்து Subject என்பதில் கிளிக் செய்து எதுகுறித்த மின்னஞ்சல் என்பதை குறிப்பிடலாம்.
அதற்கு அடுத்து உள்ள பெட்டியில் தகவல்களை தட்டச்சிட்டு கீழிருக்கும் Send என்பதை கிளிக் செய்வதன் மூலம் வேண்டிய நபருக்கு மின்னஞ்சலை அனுப்ப முடியும்.
Text Format செய்ய A என்பதில் கிளிக் செய்து வேண்டிய பார்மட் செய்துகொள்ளலாம்.

அதற்கு அடுத்து பேப்பர் கிளிக் போன்றுள்ள ஐகானில் கிளிக் செய்து (Attach Files) மின்னஞ்சலுடன் கோப்புகளையும் இணைத்து அனுப்ப முடியும்.
அதற்கு அடுத்துள்ள + குறியில் மௌஸ் குறியை வைக்கும்பொழுது முறையே photos, links, emoticons, and Google Calendar events போன்ற வசிதிகளைப் பயன்படுத்த முடியும்.

insert files using drive


மீண்டும் பழைய Compose Mode - க்குத் திரும்புவது எப்படி? 

இப்புதிய வசதி தேவையில்லை என நீங்கள் நினைத்தால் இறுதியாக உள்ள கீழ்நோக்கி அம்புக்குறியின் மீது கர்சரை வைத்தால் ஒரு கீழ்விரி மெனு விரியும். அதில் முதலில் உள்ள Temporarily switch back to old compose என்பதனைத் தேர்வு செய்வதன் மூலம் மீண்டும் பழைய Compose Mode-ஐப் பெற முடியும்.

Thanks Good Morning by மனோ.