Blogger Widgets

Total Page visits

Tuesday, April 29, 2014

விடுமுறையிலும் பயிற்சி தேவையா?

பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கோடை விடுமுறை பற்றிய பல வண்ணக் கனவுகள் இப்போதே மலர்ந்து கொண்டிருக்கும்.

ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த விடுமுறையில் சென்றது போலவே, இப்போதும் அப்பா, அம்மாவுடன் வெளியூர் பயணம் என்கிற கனவு; ஒரு சில குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதும் மற்ற குழந்தைகளுடன் முழுநேர விளையாட்டு; ஒரு சில குழந்தைகளுக்கு கொஞ்ச நாளைக்கு புத்தகத்தை தொட வேண்டாம் என்கிற மகிழ்ச்சி; இன்னும் சிலருக்கு தாத்தா, பாட்டியுடன் கிராமத்தில் விடுமுறையை இன்பமாகக் கழிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு - இப்படி பல வண்ணங்களில் அவர்களின் கனவுகள்.

அதே நேரத்தில், பெற்றோர் சிலருக்கு தங்கள் குழந்தைகளின் விடுமுறை தினங்களை அவர்களுடைய எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக மாற்றலாம் என்ற திட்டம் மனதில் இருக்கும். வேறு சிலருக்கு, விடுமுறையில் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற பயம். சிலருக்கு குழந்தைகளை சொந்த ஊரில் உள்ள உறவினர்களின் வீட்டில்  கொண்டு விட்டு விட்டு, வழக்கம்போல் தங்கள் பணிக்கு செல்லலாம் என்கிற திட்டம்.

அவ்வகையில் ஒரு சில பெற்றோர் தங்களது கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிப்பது வழக்கம். இதன் சாட்சியாகவே கோடை விடுமுறை நாள்களில் தனியார் கணினி பயிற்சி மையங்கள் முதல் விளையாட்டு பயிற்சி மையங்கள் வரை பள்ளி மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

இது போன்ற பெற்றோர்களின் விருப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் சில தனியார் நிறுவனங்கள், கோடை விடுமுறையில் அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி என்று விளம்பரம் செய்து வருமானம் பார்க்கின்றன.
இதில் ஒருவரை அழைத்து வந்து சேர்த்துவிடும் இன்னொருவருக்கு சலுகை கட்டணம் வேறு. இப்படிச் சலுகைக் கட்டணம் வழங்குவோரிடம் எவ்வகையில் தரமான பயிற்சியை எதிர்பார்க்க முடியும்?

குழந்தைகளும் தங்களது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக தங்களின் கனவுகள், மகிழ்வுகளை துறந்து, விருப்பமில்லாமல் கோடை விடுமுறை பயிற்சிகளில் சேர்வது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இது குழந்தைகளுக்கு மனதளவில் அழுத்தத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

பெற்றோர்கள் தங்களது கனவுகளுக்காக குழந்தைகளின் கனவுகளை காற்றில் பறக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? இவர்கள் கோடை விடுமுறையில் அனுப்ப நினைக்கும் பயிற்சியைத்தானே ஆண்டு முழுவதும் பள்ளியில் கற்றுத் தருவதாக கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். பிறகு எதற்கு கோடை விடுமுறையிலும் பயிற்சி?

ஒரு சில பெற்றோர் குழந்தைகளை பயிற்சி மையங்களில் பணம் கட்டி சேர்ப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் தாங்கள் செலுத்தும் பணத்திற்கேற்ப குழந்தைகள் பயிற்சி பெறுகிறார்களா, சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்களும், பயிற்சியாளர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களா, முன் அனுபவம் பெற்றவர்களா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள், அவசரத் தேவைக்கு, தங்களிடம் பயிற்சி பெற்றவர்கள், குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வர விரும்புவோர் அல்லது அனுபவம் பெறுவதற்காக பணிக்கு வர விரும்பும் அனுபவமில்லாத நபர்கள் - இவர்களையே பயன்படுத்துவது அனைவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் ஒரு விஷயம்.

கோவையில் 2012ஆம் ஆண்டு இதே போன்ற கோடை விடுமுறை தினத்தில், நீச்சல் பயிற்சிக்காக சென்ற 7 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி, பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தான்.

இச்சம்பவத்துக்கு அங்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தவரின் அஜாக்கிரதையே முக்கிய காரணம் என்று தெரியவந்தது. மற்றவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் அளவுக்கு தேவையான முன் அனுபவம் அவருக்கு இல்லை என்பதும் விசாரணையில் வெளிப்பட்டது.

இதில் உயிரிழந்த அந்த சிறுவன், அவனது பெற்றோருக்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவன். எத்தகைய துயரமானது அந்த பெற்றோரின் நிலை? அந்த சிறுவன் இறந்த துயரம் இன்னும்கூட அவர்களது குடும்பத்தை விட்டு நீங்கவில்லை.

எனவே குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் இது போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. கவனக்குறைவு வேண்டாம் பெற்றோர்களே.

தவிரவும், ஆண்டுதோறும் பள்ளி வேன் பயணம், மதிய சாப்பாடு, புத்தகம், பேனா, வகுப்பறைகள், ஆசிரியர்கள் என்று பார்த்துப்பார்த்து சலித்துப் போன குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பது புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். அதை அவர்கள் விருப்பப்படி கொண்டாட விடுங்கள் பெற்றோர்களே!

நன்றி தினமணி 

Monday, April 28, 2014

எந்த பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு?

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர மே 3 முதல் மாநிலம் முழுவதும் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து 56 வினியோக மையங்களுக்கு அனுப்பும் பணியை அண்ணா பல்கலை மும்முரமாக செய்து வருகிறது.
உயர் கல்வியில் பல வகையான படிப்புகள் கொட்டிக் கிடந்தாலும் மாணவ, மாணவியரின் விருப்பமாக பொறியியல், மருத்துவ படிப்புகள் தான் இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டு 2.34 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். முன்னணி கல்லூரியில் படித்தால் இறுதியாண்டு படிக்கும்போதே கைமேல் வேலைக்கான உத்தரவு கடிதம் கிடைக்கும் என, மாணவர்கள் கருதுகின்றனர். அதனால், கலந்தாய்வு துவங்கியதும் "டாப்" தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மள மளவென நிரம்பிவிடும்.
குழப்பம்
மாணவர்களுக்கு "சீட்" கிடைத்துவிட்டாலும் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது, எந்த பிரிவை படித்தால், உடனே வேலை கிடைக்கும் என்பதில், குழப்பம் ஏற்படுகிறது. இப்படி குழம்பும் மாணவ, மாணவியர் கடந்த கால கலந்தாய்வு முடிவை பார்த்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே மெக்கானிக்கல், சிவில், இ.சி.இ., (எலெக்ட்ரிகல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) போன்ற பிரிவுகளை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.
கடந்த ஆண்டு மெக்கானிக்கல் பிரிவை 31,184 பேர்; இ.சி.இ. பிரிவை 24,291; சிவில் பிரிவை 18,095; கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 15,363 பேர் தேர்வு செய்தனர். அதற்கு முந்தைய ஆண்டும், இதே நிலை தான். இந்த ஆண்டும், மெக்கானிக்கல், சிவில், இ.சி.இ., போன்ற பாடப் பிரிவுகளுக்கு கிராக்கி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த ஆண்டும், சிவில், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். மெக்கானிக்கல் பிரிவையும் அதிக மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். இ.சி.இ. படிக்கும் மாணவர்களில் 89 சதவீதம் பேருக்கு ஐ.டி., நிறுவனங்களில் தான் வேலை கிடைக்கிறது. தரமான, முன்னணி கல்லூரியில் சேர்ந்து நன்றாக பொறியியல் படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
ஆங்கில திறன்
படித்த உடன் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் மிக மிக முக்கியமானது. இந்த தகுதி இல்லாத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். "சிவில்" பாடப் பிரிவை படித்தாலும் உடனே வேலை வாய்ப்பு கிடைக்கும். கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் "டிமாண்ட்" இருக்கும். இவ்வாறு, ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு 2.34 லட்சம் விண்ணப்பம் விற்பனை ஆனது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் தாமாக முன் வந்து அண்ணா பல்கலைக்கு "சரண்டர்" செய்த இடங்கள் என, மொத்தம் 2 லட்சத்து 7,141 இடங்கள் கலந்தாய்வுக்கு வந்தன. இதில், இறுதியாக 1 லட்சத்து 27 ஆயிரத்து 838 இடங்கள் நிரம்பின. 79,303 இடங்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகள்

தமிழ்நாடு விவசாயத்தையே பெரும்பாலும் சார்ந்துள்ள மாநிலமாகும். இங்கு இரு வழிகளில் சாகுபடி நடக்கிறது. ஆறு, ஏரிகள், கால்வாய்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் நடக்கிறது. இந்த வசதி இல்லாத விவசாயிகள், பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்யவேண்டிய நிலை உள்ளது. முன்பெல்லாம் விவசாயிகள் கிணறு தோண்டியே தங்கள் நிலங்களில் சாகுபடி செய்து வந்தனர். கிணறுகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் கீழே போய்விட்டது. 30 அடி, 40 அடி ஆழத்தில் இருந்த நீர்மட்டம், இப்போதெல்லாம் பல இடங்களில் 500 அடி, 600 அடிக்கு கீழே போய்விட்டது.

இதுபோன்ற இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டித்தான் தண்ணீர் எடுக்கவேண்டிய நிலை தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுவிட்டது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், கட்டிட வேலைகளுக்கும் சரி, வீடுகளுக்கும் சரி, இப்போது ஆழ்குழாய் கிணறுகள் மூலமே தண்ணீர் எடுத்துவருகிறார்கள். சில நேரம் ஆழ்குழாய் கிணறு ஒரு இடத்தில் 400 அடிக்கு தோண்டப்பட்டு, பக்கத்தில் ஒருவர் 500 அடிக்கு தோண்டிவிட்டால், இந்த கிணற்றில் தண்ணீர் இருக்காது. அந்த நிலையில், இதை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்தில் 500 அடி அல்லது அதற்கு மேலேயே தோண்டச்சென்றுவிடுகிறார்கள். இத்தகைய ஆழ்குழாய் கிணறுகளில் சரியான பாதுகாப்பு இல்லாததால், இத்தகைய கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது. கடாந்த 10 நாட்களில் மட்டும் 3 சம்பவங்கள் நடந்துவிட்டன. விழுப்புரம் மாவட்டம், தியாகதுருவம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தில் கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை சரியாக மூடாததால் அதில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை மதுமிதாவும், திருவண்ணாமலை மாவட்டம், பொன்னகர் பகுதியில் இதேபோல கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறு சரியாக மூடப்படாததால், அதில் தவறி விழுந்த 1½ வயது சிறுவன் சுஜித்தும் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரி கிராமத்தில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் ஹர்ஷன் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மதுரை டி.வி.எஸ். சமுதாய கல்லூரியைச்சேர்ந்த மணிகண்டன் கண்டுபிடித்த ரோபோ மூலம் உயிர் பிழைத்தான்.

இனிமேலும், இப்படி ஒரு சோக சம்பவம் நடக்கக்கூடாது. ஆழ்குழாய் கிணறுகளைத்தோண்டும் பணிகளைச்செய்யும் கம்பெனிதான், அந்த ஆழ்குழாய்கிணறுகள் தோண்டி முடிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான பாதுகாப்புக்கான முழுபொறுப்பையும் ஏற்கவேண்டும். உடனடியாக அரசு தமிழ்நாட்டில் எத்தனை ஆழ்குழாய் கிணறுகள் பயன்பாட்டில் இருக்கின்றன?, எத்தனை கிணறுகள் பயன் இல்லாமல் அப்படியே விட்டுவிடப்பட்டுள்ளன என்று பார்த்து, பாதுகாப்பாக அனைத்து ஆழ்குழாய்கிணறுகளும் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும். உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. இதன்படி, ஆழ்குழாய் கிணறுகளைத்தோண்டவோ, பழுதுபார்க்கவோ விரும்பினால் 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி அமைப்புகள், நிலத்தடி நீர் துறை, பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் கம்பெனிகள் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளிடம் பதிவு செய்யவேண்டும். அந்த இடத்தில் நில உரிமையாளர் பெயர், அந்த கிணறு தோண்டும் பணியைச் செய்யும் கம்பெனி பெயர் கொண்ட போர்டு வைக்கப்பட வேண்டும். ஆழ்குழாய் கிணற்றைச் சுற்றிலும் .30 மீட்டர் உயரத்துக்கு தரைக்கு மேலும், கீழும் சிமெண்டு சுவர்கள் எழுப்பப்பட வேண்டும். இரும்பு மூடியால் மூடப்பட வேண்டும். வேலை முடிந்தவுடன் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் நன்றாக மூடப்படவேண்டும். கைவிடப்பட்டுள்ள ஆழ்குழாய் மணல் போன்ற பொருட்களால் நன்றாக நிரப்பப்படவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் பற்றிய தரைமட்டம் வரை சரியாக நிரப்பப்பட்டு, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெறவேண்டும். அந்த வழிமுறைகளை அரசு உடனடியாக உத்தரவாக பிறப்பித்து, இதை மீறுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், மீட்பு நடவடிக்கைக்கான புதிய தொழில்நுட்பங்களை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், அறிவியல் நிபுணர்களும் கண்டுபிடிக்க வேண்டும். மதுரை மணிகண்டன் கண்டுபிடித்த ரோபோவை இன்னும் நவீனப்படுத்தி பயன்படுத்தவும் பரிசீலிக்கவேண்டும்.

நன்றி: தினத்தந்தி

தனியார் பள்ளிக்கூடங்களில் ஏழை மாணவர்கள்

 
ந்தியா முழுவதிலும் கல்வி வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட அனைத்துக் கட்சிகளும், இப்போது ஆளும் கட்சியும் அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக இருந்து வந்திருக்கிறார்கள். சத்துணவு மட்டுமல்லாமல், அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, சைக்கிள், லேப்–டாப் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள். ஆனால், அரசு பள்ளிக்கூடங்களிலும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும், அரசு எவ்வளவோ உதவிகளைச் செய்தாலும், தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள கல்வித்தரம் இல்லையே? என்ற கவலை மக்களை வாட்டுகிறது. சில இடங்களில் அரசு பள்ளிக்கூடங்கள் தூரத்திலும், தனியார் பள்ளிக்கூடங்கள் சமீபத்திலும் இருந்தாலும், தனியார் பள்ளிக்கூடங்களை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்ற நிலை ஏழை மாணவர்களுக்கு இருக்கிறது.

இந்த கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசாங்கம் 2009–ம் ஆண்டில் நிறைவேற்றிய கட்டாய கல்வி சட்டம் நல்ல பல சலுகைகளை ஏழை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து மணவர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் தொடக்கக்கல்வி முடியும் மட்டும் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறுவது அவர்களின் உரிமை என்று வகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து கல்விக்கட்டணம் வசூலிக்கும் அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீத இடங்களை இந்த சட்டப்படி ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு திருப்பித்தந்துவிடும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் இருக்கக்கூடாது, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும் என்பதுபோல, பல நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன.

கல்விக்கட்டணம் என்பதில் சீருடைக்கான கட்டணம் மற்றும் புத்தகங்களுக்கான கட்டணம் ஆகியவற்றையும் அரசே கொடுத்துவிடும் என்றாலும், இந்த சட்டப்படி மாணவர்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் படிப்பதில் நடைமுறைச்சிக்கல்களும் இருக்கின்றன. அந்த பள்ளிக்கூடங்களில் படிக்கும் மற்ற மாணவர்கள் வளரும் விதம், அவர்களுடைய சூழ்நிலை போன்ற பல விஷயங்கள் இந்த மாணவர்களை, அந்தப்பள்ளிக்கூடங்களில் தனிமைப்படுத்தி விடுகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இதெல்லாம் காலப்போக்கில் மாறிவிடும். இதை அனைத்தையும் மீறி, இந்த சட்டத்தின் மூலம் எத்தனை ஏழைப்பிள்ளைகள் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர் என்ற கணக்கு இன்னும் திட்டவட்டமாக வெளியிடப்படவில்லை. அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீத இடங்களில் ஏழை மணவர்களுக்கு சேர்க்கப்படவில்லை. அப்படி சேரும் மாணவர்களும் படிப்பில் மற்ற மாணவர்களோடு போட்டிபோட்டு படிக்கும் சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை.

இந்த ஆண்டுக்காக இந்த சட்டத்தின் அடிப்படையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் தாக்கல் செய்வதற்கு மே மாதம் 18–ந்தேதி கடைசி நாள் என்ற வகையில், மாணவர்களின் பெற்றோர் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிதாக ஒரு தர்ம சங்கடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் அரசின் நிதி உதவியைப் பெற்று நடப்பதில்லை. தங்களின் நிர்வாகச் செலவுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுப்பதற்கான சம்பளத்துக்கும் மாணவர்களிடம் கட்டணம் வாங்கித்தான் சமாளிக்கவேண்டும்.

இந்த சூழ்நிலையில், ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்த்து கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து பணம் வரவில்லை என்று தனியார் பள்ளிக்கூடங்கள் குறைபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த தொகை வரவில்லையென்றால் எப்படி அவர்கள் சமாளிக்கமுடியும்?. இதனால் பல பள்ளிக்கூடங்களில் இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் நீங்கள் கட்டணத்தை செலுத்துங்கள், அரசிடம் இருந்து பணம் வந்ததும் திருப்பித்தந்து விடுகிறோம் என்று சொல்வதால், இந்த ஏழை மாணவர்கள் திக்கு முக்காடிப்போய்விடுகிறார்கள். இந்த சட்டத்தின் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும் நிலை தோன்றிவிட்டது. தேர்தல் நடந்து முடிந்தவுடன், அடுத்து வரும் மத்திய அரசாங்கம், மாணவர்களைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு கட்டணத்தை திருப்பிக்கொடுத்தால்தான், ஏழை மாணவர்களுக்கு இடம் கொடுப்பதற்கும், அவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் கல்வி வழங்குவதற்கும் உரிய சூழ்நிலையை தனியார் பள்ளிக்கூடங்களில் உருவாக்க முடியும்.

நன்றி: தினத்தந்தி

நிலத்தடி நீர்வளம்

ந்த ஒரு நாடு என்றாலும், அங்கு நீர்வளம் இருந்தால்தான், பூமி செழிக்கும். மக்களின் வாழ்வும் வளம் பெறும். பொதுவாக மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வன வளம் அதாவது, அடர்ந்த காடுகள் இருந்தால்தான் அங்கு மழை வளம் பெருகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகுந்த முயற்சிக்கு பிறகு இப்போதுதான் 21 சதவீத வனப்பரப்பு இருக்கிறது. தாமிரபரணி தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உருவெடுக்கவில்லை. அடுத்த மாநிலங்களில் இருந்துதான் ஓடிவருகிறது. அதனால்தான் அடுத்த மாநிலங்களை தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கெஞ்சவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆக, நமது மாநிலத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கல்களை நன்கு பராமரித்து, தண்ணீரை சேமித்து வைத்தால்தான், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.

சமீபகாலங்களாக நிலத்தடி நீர்மட்டம் தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துவருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமித்துவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளில் எல்லாம் தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்து இருக்கிறது. இந்த ஆகாயத்தாமரையால் எந்த வித பலனுமில்லை. பெருமளவு தண்ணீரை உறிஞ்சிவிடுகிறது. இந்த ஆகாயத்தாமரையை ஒழிப்பது என்பது எளிதில் முடியாது. மேலும், ஆகாயத்தாமரை நீர்நிலைகளையும் மேடாக்கிவிடும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இனி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் அதை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும். அடுத்து அழிக்கப்படவேண்டியது சீமைக்கருவேல மரம். இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள மரம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு விறகுக்காக வெளிநாட்டில் இருந்து இந்த மரங்களின் விதைகளைக்கொண்டுவந்து போட்டார்கள். இன்று அனைத்து நீர்நிலைகளின் கரைகள் மட்டுமல்லாமல், நீர்நிலைகளுக்குள்ளும், பெரும்பாலான நிலப்பகுதிகளிலும் அடர்ந்த காடுபோல வளர்ந்து சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருக்கிறது. புவி வெப்பமயமாதலின் அபாயத்தைப்பற்றி உலகமே பேசுகிறது. ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு உதவும் கரமாக திகழ்வது இந்த சீமை கருவேலமரம்தான். மற்ற மரங்கள் கார்பன்–டை ஆக்சைடை தனக்குள் உறிஞ்சி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிடும். ஆனால் இந்த சீமை கருவேலமரம் இதற்கு எதிர்பணிகளைச் செய்கிறது. நிலத்தடி நீரை அப்படியே டியூப் போட்டு உறிஞ்சுவதுபோல உறிஞ்சிவிடுகிறது. நிலத்தடி நீரை மட்டுமல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகிறது. இதன் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இந்த சீமை கருவேல மரத்தை அழிப்பதற்கும் அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து மீனவர்கள். கடலில் மீன்வளமும் குறைந்து, இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்படும் அபாயத்தில் உள்ள மீனவர்களுக்கு உள்நாட்டு மீன்பிடி தொழில் வாழ்வழிக்கலாம் என்றால், இப்போது நீர்நிலைகளில் பலுகி பெருகி உள்ள ஜிலேபி கெண்டை மீனால் அதற்கும் ஆபத்து வந்துள்ளது. அயிரை, உளுவை, விரால், விலாங்கு போன்ற பல மீன்களுக்கு இடையே ஆப்பிரிக்காவில் இருந்து 1952–ல் இறக்குமதி செய்யப்பட்ட ஜிலேபி கெண்டை மீன்களால் பாரம்பரிய மீன்கள் அழிந்துபோய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஜிலேபி கெண்டையை பொதுவாக யாரும் சாப்பிடுவதில்லை. உரத்துக்குத்தான் போடுகிறார்கள். மற்ற மீன்கள் நீர்நிலைகளில் உள்ள பூச்சிகள், அழுக்குகள், தாவரங்களைச் சாப்பிட்டு வளரும். ஆனால், இந்த ஜிலேபி கெண்டை மீன்கள் மற்ற மீன்களின் முட்டைகளைத்தான் உணவாக சாப்பிடுவதால், விரைவில் மக்கள் சாப்பிடும் மற்ற மீன்வகைகள் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஜிலேபி கெண்டை மீனையும் உடனடியாக அழிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டிய அவசர அவசிய நிலையில் இருக்கும்போது, இப்போது இருக்கும் ஏரிகள், குளங்கள், கால்வாய்களிலேயே பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உடனடியாக அனைத்து நீர்நிலைகளின் பரப்பளவு என்ன? என்பதை கணக்கிட்டு, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும். மொத்தத்தில், ஆகாயத்தாமரை, சீமை கருவேலமரம், ஜிலேபி கெண்டை மீன், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கையும் அழித்தால்தான், நீர்வளம் குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் பெருகும். விவசாயமும், மீன்வளமும் உயரும்.

நன்றி: தினத்தந்தி

Sunday, April 27, 2014

ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் மிகக் குறைந்த சிறப்பு இரவுக் கட்டணங்கள் மூலம் ஏர்டெல் நைட் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.7க்கு அளவில்லாத லோக்கல் ஏ2ஏ அழைக்கும் வசதி அல்லது வெறும் ரூ.8க்கு 2ஜியில் அளவில்லாத இன்டர்நெட் வசதி மற்றும் பல சலுகைகளில் இருந்து பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்துள்லது

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,”நீங்கள் இரவில் நண்பர்களுடன் பேசுபவர்களா? மொபைலில்பெரும்பாலும் இன்டர்நெட்டில் உலா வருபவர்களா? ஆம் என்றால் இப்போது உங்கள் ஏர்டெல் மொபைலில் அதை உச்சகட்டமாக அனுபவிக்கலாம் இல்லை என்றாலும் அந்த அனுபவத்தை பெறலாம். அதற்காகவே பார்தி ஏர்டெல் லிமிடெட் (பார்தி ஏர்டெல்) நைட் ஸ்டோரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தமது பிரீபெய்ட் மொபைலில் இன்டர்நெட் பயன்பாடு மற்றும் இரவில் (நள்ளிரவு 12 மணி காலை 6மணி) லோக்கல் அழைப்புகளுக்கான பணச் சலுகைகளுக்கு பெற்றிராத மதிப்பை பெற உதவும்.

*129# என்று வெறுமனே டயல் செய்வதன் மூலம் அல்லது 129 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் அல்லது ஏர்டெல் முகவரியில் லாகிங் செய்வதன் மூலம் 2ஜி, 3ஜி மற்றும் லோக்கல் ஏர்டெல்லில் இருந்து ஏர்டெல் அழைப்புகளுக்கான மிகக்குறைந்த கட்டணங்களில் இப்போது இந்த சேவையை அனுபவிக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.7க்கு அளவில்லாத லோக்கல் ஏ2ஏ அழைக்கும் வசதி அல்லது வெறும் ரூ.8க்கு 2ஜியில் அளவில்லாத இன்டர்நெட் வசதி மற்றும் பல சலுகைகளில் இருந்து பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

கோம்போ, ஸி29க்கு 3ஜி 500எம்பி, ரூ.49க்கு 3ஜி 1ஜிபி சேவையை பெறலாம். மேலும் இலவசமாக பேஸ்புக்கை அளவில்லாமல் பயன்படுத்தலாம். எனவே, இந்த சேவையை பெற 129 என்ற எண்ணை அழைக்கலாம்.

PRIST University Wanted Professor/Assistant Professor

PRIST University, Ponnaiyah Ramajayam Institutions, made a foray into the academic domain, with the establishment of Sri Ram Institute of Computer Science and Technology in 1985.


Job TitleProfessor/Assistant Professor
Departments: 
  • Computer Science and Engineering
  • Electrical and Electronics Engineering
  • Electronics and Communication Engineering
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • English
  • Maths
  • Physics
  • Chemistry
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their UG/PG  in relevant discipline 
  • Commitment towards work
Job Location: Chennai and Thanjavur Campus
Scale of Pay : As per AICTE norms

Last Date: With in 10 days

Apply Mode: Offline

Website : www.prist.ac.in
How to Apply: Interested and Eligible candidates are request to apply for above post with detailed resume and recent passport size photograph to following Postal address as soon as possible
(Apply Separately Mentioning the place of interest)
Postal Address:
The Chairman
Ponniah Ramajayam Institutions
vallam
Thanjavur-613 403
Reference: Advertisement on THE HINDU Dated on 27th April 2014

Pallavan Educational Trust Wanted Professors/Associate Professors/Assistant Professors

Pallavan College of Engineering (PCE), affiliated to Anna University and approved by All India Council for Technical Education, New Delhi and recognized by Government of Tamilnadu was  founded in 1997 as a self financing Institution. The college was promoted by Pallavan Education trust.

Job TitlePrincipal/Professors/Associate Professors/Assistant Professors/Placement Officer
Departments: 
  • Computer Science and Engineering
  • Information Technology
  • Electronics and Communication Engineering
  • Electrical and Electronics Engineering
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Master of Computer Application
  • Master of Business Administration
  • Physics
  • Chemistry
  • Maths
  • English
  • Physical Director
  • Pharmaceutics
  • Pharmacology
  • Pharmaceutical chemistry
  • Pharmacognosy
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their UG/PG  in relevant discipline 
  • Commitment towards work
Job Location: Kanchipuram
Scale of Pay : As per AICTE norms

Last Date: With in 15 days

Apply Mode: Offline

Website : www.pallavan.edu.in
How to Apply: Interested and Eligible candidates are request to apply for above post with detailed resume and recent passport size photograph to following Postal address with in 15 days from the advertisement.
Postal Address:
The chairman
Pallavan Educational trust
Kolivakkam
iyyengarkulam Po-631502
Kanchipuram Tk & Dt
Reference: Advertisement on THE HINDU Dated on 27th April 2014

Saturday, April 12, 2014

Gnanamani Educational Institutions Wanted Professor/Associate Professor/ Assistant Professor

Gnanamani College of Technology (GCT) established in the year 2006 and Gnanamani College of Engineering (GCE) established in the year 2009 are part of Gnanamani Educational Institutions which have carved a niche for itself in the field of Engineering education within a very short span. Apart from these Engineering Colleges the group comprises of Gnanamani Institute of Management Studies (GIMS) established in the year 2009 and Gnanamani College of Education, established in the year 2005. These Institutions serve under the aegis of The Christian Education Development Trust.


Job TitleProfessor/Associate Professor/ Assistant Professor
Departments: 
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • English
Qualification: B.E/M.E/M.Tech/M.A/M.Phil/Ph.D and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their B.E/M.E/M.A/M.Phil/Ph.D  in relevant discipline 
  • Commitment towards work
Job Location: Namakkal
Scale of Pay : As per norms

Last Date: As soon as possible

Apply Mode: Online/Offline

Website : www.gct.org.in
How to Apply: Interested and Eligible candidates may send their resume along with recent passport size photograph  to following  Email Address or Post Address as soon as possible

Email Address info@gct.org.in
 
Postal Address:
Gnanamani College of Technology, 
NH-7, A.K.Samuthiram, 
Pachal-Po, 
Namakkal-637 018. 

Reference: Advertisement on THE HINDU EMPOWER Dated on 9th April 2014

Sengunthar Engineering College Wanted Professor/Associate Professor/Assistant Professor

Sengunthar Engineering College was established in 2001 with an aim to accomplish distinction in Engineering and Technological pursuits. It is affiliated to Anna University and approved by AICTE. Here education is redefined to remove the long spell of hibernation in the field of education among the rural students of India. The environment imparts a work ethic, discipline and a set of principles that will give them the edge for their future studies and career.


Job TitleProfessor/Associate Professor/Assistant Professor
Departments: 
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Electrical and Electronics Engineering
  • Electronics and Communication Engineering
  • Computer Science and Engineering
  • Information Technology
  • MBA
  • Maths
  • English
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil/Ph.D and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their M.E/M.Sc/M.Phil/Ph.D  in relevant discipline 
  • Commitment towards work
Job Location: Tiruchengode
Scale of Pay : As per norms

Last Date: With in 10 days

Apply Mode: Postal

Website : www.scteng.co.in
How to Apply: Interested and Eligible candidates may send their resume along with recent passport size photograph  to the following address with in 10 days.
 
Postal Address:
Sengunthar Engineering College ,
Kumaramanagalam (PO),
Tiruchengode - 637 205,

Reference: Advertisement on THE HINDU EMPOWER Dated on 9th April 2014

PGP College of Engineering and Technology Wanted Professor/Associate Professor/Assistant Professor

The PGP Group Chennai, has added a new dimension to the industrial scene of India Since 1987. The founder visionary, Dr.Palani G Periasamy is the Group Chairman , a Non resident Indian from Columbia, Washington DC, USA, with nearly three decades of academic career in the field of economics and management.


Job TitleProfessor/Associate Professor/Assistant Professor
Departments: 
  • Civil Engineering
  • Computer Science and Engineering
  • Electronics and Communication Engineering
  • Electronics&Instrumentation Engineering (Professor and Associate professor)
  • Mechanical Engineering
  • Maths
  • English
  • Physics
  • Chemistry
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil/Ph.D and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their M.E/Ph.D  in relevant discipline 
  • Commitment towards work
Job Location: Namakkal
Scale of Pay : As per norms

Last Date: With in 7 days

Apply Mode: Offline (Postal)

Website : http://www.pgpedu.ac.in/
How to Apply: Interested and Eligible candidates may send their resume along with recent passport size photograph  to the following Postal address or Email Address with in 7 days from the date of advertisement.
 

Email Address: careers@pgpews.com

Postal Address:
The Secretary
PGPEWS
#57,Sterling Road
Nungambakkam
Chennai-34
Reference: Advertisement on THE HINDU EMPOWER Dated on 9th April 2014